தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிர்மால்ய‌ம்

அந்த நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள் வீட்டு வாசல் த‌ரையில் சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய் ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌. எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின் க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌. வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம் த‌ன் கிளையை…

மழை

புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை…

தொலைத்து

அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com

மூன்று தலைமுறை வயசின் உருவம்

1)மூன்றுதலைமுறைவயசிருக்கும் இதன் பிரம்மாண்டமான உருவத்தை யாரும் கவனித்ததாய் இல்லை. எவருக்கும் தெரிந்ததுவுமில்லை இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும் வான் நோக்கி நிமிர்ந்தும் மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும் வேப்பமரம்தான் என்றாலும் முன்காமிகளும் சொன்னதில்லை இத்தனை ஆண்டுகளாய் இது…

நெடுஞ்சாலை அழகு..

=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து - குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை…

அது

நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து…

மழையாகிவிட்ட தவளையின் சாகசம்

ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய…

எல்லார் இதயங்களிலும்

கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது…

பயணக்குறிப்புகள்

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல…

படிமங்கள்

என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை…