அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி. அனால் . இப்போது எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கவிதை ஆகட்டும் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஏன்? இப்போது நான் எதை எழுதினாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். அந்தக் […]
நடேசன். ஆஸ்திரேலியா – சிட்னி நகரின் கிழக்குப் பகுதியான கூஜி ( Coogee ) கடற்கரையில் 1935 ஆம் ஆண்டு பெரிய சுறா ஒன்று உயிருடன் பிடிபட்டது. அதை சிட்னியிலுள்ள மீன்கள் வளர்க்கும் அகுவாரியம் (Aquarium) நீர்த் தொட்டியில் விட்டனர். ஒரு கிழமையின் பின்பு அந்த சுறா மீன் மனிதனின் முன் கையை வாந்தி எடுத்தது. அந்தக் கையில் பிரத்தியேகமான பச்சை (Tattoo) குத்தப்படியிருந்து. அதிர்ச்சியடைந்த அகுவாரியத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டதும் விசாரணை ஆரம்பமானது . அந்தக் […]
குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு ஏற்பட்டது, ஆனாலும் அவர் அதற்காக உடைந்துபோய் உட்கார்ந்து மௌனமாகி விடவில்லை, தன்னால் முடிந்தளவு ஓவியங்களை இறுதிவரை வரைந்து கொண்டே இருந்தார். கடைசிக் காலத்தில் கறுப்பு வெள்ளைக் கோட்டு வரைபடங்களை வரைவதில் அதிக அக்கறை காட்டினார். தமிழக இதழ்களில் வெளிவந்த எனது கதைகளுக்குப் […]
……………………………………………………………………………………………………………………….. _ லதா ராமகிருஷ்ணன் …………………………………….. வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருந்துவருகிறது. மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிறதென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவேயாகி யிருப்பதாகச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 – 90 […]
உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்……. _ லதா ராமகிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் – என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். “இப்படி உடையணிந்து கொள்வது தான் என் கணவருக்குப் பிடிக்கும்”, என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். ஆனால், நான் அறிந்தவரையில் அந்த உறவினர் அப்படியெல்லாம் ‘அல்ட்ரா மாடர்ன்’ பேர்வழியல்ல. ’ஆனால் மிக நெருக்கமான மனிதர்க ளைக் கூட நாம் […]
படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்…. நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! முருகபூபதி இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில் உயிர் […]
முனைவர் என். பத்ரி, கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள். மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும் தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது. கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான கல்வியறிவற்றோராய் உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மீது அவர்களின் கண்காணிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பள்ளிகளில்தான் பெரும்பான்மையான நேரத்தை மாணவர்கள் செலவிடுகிறார்கள். எனவே,அவர்களின் தனிமனித ஒழுக்கத்தை வடிவமைப்பதில் பள்ளிகளின் பங்கு அதிகமாக உள்ளது.தற்போது மாணவர்கள் இணைய […]