“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி

This entry is part 25 of 28 in the series 10 மார்ச் 2013

ஹெச்.ஜி.ரசூல் ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்”. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ்.நான் மரணிக்க விரும்பவில்லை” என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. […]

லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

This entry is part 24 of 28 in the series 10 மார்ச் 2013

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே. இந்த முஸ்லீம்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அபகரித்து மீதமுள்ள பொருள்களை தெருவில் போட்டு எரித்துள்ளார்கள். சோஹைல் சுகேரா என்ற எஸ்.எஸ்.பியும் இந்த முஸ்லீம்களால் பலத்தகாயமடைந்துள்ளார். இந்த போலீஸாரை முஸ்லீம்கள் கல்லாலடித்துள்ளனர். ஏற்கெனவே அந்த அவதூறு செய்தவரை வெள்ளிக்கிழமையன்று கைது செய்துவிட்ட […]

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

This entry is part 23 of 28 in the series 10 மார்ச் 2013

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. 1971இல் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போன்று ஜமாத்- ஷிபிர் ஆட்கள் ஆறு கோவில்களை இடித்து உடைத்துள்லனர். நவகாளி, கைபந்தா, சிட்டகாங், ரங்கபூர், ஸில்ஹைட், சைபனாவாபிகஞ்ச், ராஜ்கன்ஞ் இடங்களில் ஏராளமான இந்துக்களது வீடுகளையும் வியாபார தளங்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்று […]

லங்காட் நதிக்கரையில்…

This entry is part 10 of 28 in the series 10 மார்ச் 2013

சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல் வீதி என்று பிரதான சாலைகளைக் காட்டுவேன். மறைந்து போன நதி பற்றி இரங்கலாய் சில வார்த்தைகள் சொல்வார்கள். மலேசியாவில் லங்காட் நதியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற ஆசை மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியின் லங்காட் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47

This entry is part 5 of 28 in the series 10 மார்ச் 2013

சீதாலட்சுமி நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்படும் வரலாறு வரலாற்றின் வரலாறுக்குப் பன்முகங்கள் உண்டு. முதலில் வரலாற்றின் வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்டால்தான் பல குழப்பங்கள் நீங்கும். முடிந்த அளவு சுருக்கமாக, இன்றியமையாத பகுதிகளை மட்டும் சொல்ல நினைக்கின்றேன் முதலில் ஒரு வேண்டுகோள். சாதி, மதம், அரசியல் இவைகள் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள். சமுதாயத்தில் ஓர் நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையுடன் வாழ அமைதி பெற முயற்சி செய்கின்றேன். எனவே யாரும் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். இறைவனால் […]

ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2

This entry is part 33 of 33 in the series 3 மார்ச் 2013

க்ருஷ்ணகுமார்     மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :-       மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் எந்தெந்த மதத்தை / மதத்தைச் சார்ந்தவர்களைக் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது? ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மாற்று மதத்தவர் பேரில் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை மட்டும் பத்தி பத்தியாக வ்யாசம் பதிகிறது. அப்படியானால் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர் ஹிந்துக்களின் மீது வன்முறைகளை அறவே நிகழ்த்தியதில்லை […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

This entry is part 25 of 33 in the series 3 மார்ச் 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’ வே.சபாநாயகம்.   எதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துக் கொண்டுதான் வருகிறது. படைத்தவன் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணமும்  மறுபடியும் சூன்யத்தில் பிறந்த்தில்லை.அதற்கும் முதிய தடங்களைக் காட்டும் சங்கிலித் தொடர் பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்கும். அது போலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும். தான் ஒரு […]

வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

This entry is part 14 of 33 in the series 3 மார்ச் 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46 சீதாலட்சுமி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம். அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது இந்த மண்ணிலேதான். எனவே சூழ்நிலைத் தாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது அனுபவங்களின் படிப்பினைகளைச் சிறப்பாகப் பேசுவோம். ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம். அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கின்றான். இளமைப் பருவத்தில் முதல் அடி வைத்திருக்கின்றான். காணும் இடமெல்லாம் டாஸ்மார்க் கடைகள்!ஏனித்தனைக் கூட்டம்? […]

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

This entry is part 11 of 33 in the series 3 மார்ச் 2013

நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம். இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை. கதை சொல்லும் தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் அருகி விட்டார்கள். […]

நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்

This entry is part 5 of 33 in the series 3 மார்ச் 2013

  கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக  “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிக மாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. […]