கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு […]
சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம். ஒரு வானம்பாடியின் கானம் ——————————– ஒரு வானம்பாடியின் கானம் என்னைக் கனவினின்று வெளியே இட்டு வரும் காலை ஒளிரும் ——————————— வசந்தத்தின் முதற் […]
டெம்போரல் லோப் என்பது என்ன? படத்திலிருப்பது மூளையின் பல பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒரு லோப் என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் டெம்பில் temple என்பது http://en.wiktionary.org/wiki/temple நெற்றிக்கு பக்கவாட்டில் கண்களுக்கு பின்னால் இருக்கும் இடம். இந்த இடத்தில் இருக்கும் மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. உடலின் உணர்வு தளங்கள், கண், மூக்கு, வாய், தோல் ஆகியவை இந்த பகுதிக்கு தன் நரம்புகளை அனுப்பிகொடுக்கின்றன. இந்த மூளை அந்த உணர்வுகளை பொருளுள்ளதாக மாற்றுகிறது. […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட […]
ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது. வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே தமிழ் மைய மைதானம். அப்படித்தான் சொன்னார்கள்.. தமிழ் மையம் காஸ்பர் பரிந்துரைப்படி கடந்த ஆட்சியில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக.. சென்னை மைலாப்பூரிலிருந்து இங்கு வருவதே கடினம். என் கதை இன்னமும் சோகம். […]
(1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]
(30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ) முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு […]
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் ——————– நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான் சிரித்தேன் மலையின் மீது என் உதவியாளர்கள் மீது ஊன்றியபடி ஏறினேன் மேகத்தின் பிசுறுகளை எவ்வளவு அப்பக்கம் தள்ளி விட்டது பார் நீல வானம் அதன் கலையில் என்னால் ஆசானாக முடியுமா? மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில் […]
மூளைக்குள் கடவுள் இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இரண்டாம் பகுதி குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது. டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். […]
நா . தில்லை கோவிந்தன்} விவசாயி “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல . […]