– தில்ஷான் எகொடவத்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கடந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று வந்தது. சுகவீனமுற்று இருந்திருக்கிறார். நீரிழிவும் இன்னும் அனேக வியாதிகளும் இருந்திருக்கின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்துத்தான் மரணம் சம்பவித்ததென உடலைக் கொண்டு வந்த உறவினர்கள் கூறினர். இருக்கலாம். காவல்துறை அதிகாரிகள் அதிகமாகக் கோபப்படுவார்கள் அல்லவா? கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா […]
திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு வெளியேறாமல் தனது நிபந்தனைகளை முன்வைத்து அங்கேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அந்தக் காட்சி மட்டும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதன்பிறகு உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்யும் வரையிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன. முதன் முதலாக பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி […]
“அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் வெற்றியாமே?!” டீ கடை பெஞ்சு முதல் பீசா கார்னர் வரை எல்லா இடங்களிலும் விவாதிக்கப் படும் முக்கிய விஷையங்களில் இது தலையாயது. ஊழலுக்கு எதிராக யாரேனும் போர் புரிய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தது, இந்த ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. முதலாம் சுதந்திரப் போர், இன்றைய தலைமுறைக்கு மறக்க முடியாத, பார்க்கத் தவறிய ஒரு த்ரில்லர் படம் போன்றது. இன்றைய இளைஞர்கள், பெரும்பாலும் பழைய படங்களை கிண்டல் […]
பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார். போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் […]
இந்தியா அதிரத் தான் செய்தது…. ஆனால் நடந்தவை அந்த அதிர்வு பூகம்பம் மாதிரியான எதிர்மறை விளைவுகளை அன்னா ஹசாரேக்கு பின்னிருக்கும் நோக்கம் என்ன என்ற மிகப்பெரிய கேள்விதனை விட்டுச் சென்றுள்ளது… எனது சில எண்ணங்கள் …. சுற்றி இருக்கும் சில துர்சிந்தனையாளர்களால் யுவராஜின் அணுகுமுறைகள் பூமராங் ஆகிவிட, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க காங்கிரஸ் தடுமாறிக்கொண்டிருந்த நேரம்… அப்போது வந்த விஷயம், அன்னா ஹசாரே… காங்கிரஸ் இலகுவாக கையாண்டிருக்க வேண்டிய விஷயத்தை , காந்தி படப் பிண்ணனியில் நடத்தப்பட்ட […]
Dr. செந்தில் முத்துசாமி உலகெங்கிலும் உள்ள ஊழல்வாதிகளும், உளவு நிறுவனங்களும், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும், சில பத்திரிக்கை தரகர்களும் ஒன்று சேர்ந்துவிட்டதாகவே தெரிகிறது.. இந்த நிலையில், நேர்மையான அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மத மற்றும் ஆன்மிக தலைவர்கள், மக்கள் நல தொண்டாற்றும் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, மக்கள் விரோத சக்திகள் எனவோ எளிதில் முத்திரை குத்தபட்டு, எல்லாவித மனித உரிமை மீறல்களுக்கும் எளிதில் உட்படுத்தபடலாம். தீவிரவாதத்திர்க்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், குறிப்பாக வெளி நாடுகளில் […]
நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லியிருக்கிறார் திரு. முகமது அலி அவர்கள். மூட நம்பிக்கைகளை பற்றி எழுதும் போது […]
ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா என்னும் ஊடகம் எல்லோரது கவனத்தையும் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு ஈர்க்கிறது. அப்படி சினிமா பற்றி பேச எல்லோருக்குமே ஒரு காரணம் இருக்கிறது. எழுத்து அல்லது அச்சு ஊடகத்தின் ஒப்பற்ற தனிச்சிறப்புகளை நன்கறிந்த எழுத்தாளர்களுக்கே நல்ல சினிமாவைக் காப்பாற்ற எனவும் வணிக சினிமாவை விமர்சிக்க எனவும் சினிமா மீது கவனம் மிகுந்து விட்டது. ஏனையோர் பற்றிக் […]
“” என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. […]
சூரியன் உதிக்கும் கிழக்கில் தனது வாழ்வின் சூரியன் பறித்தெடுக்கப்பட்டமையால் இளமையிலேயே வாழ்க்கை முழுதும் இருண்டு போயுள்ள இன்னுமொரு இளம் தாயை கடந்த சில தினங்களுக்கு முன்னரான திருகோணமலைப் பயணத்தின்போது எமக்கு சந்திக்கக் கிடைத்தது. இது எம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அவரது நீண்ட கதையின் சுருக்கம். அவரது பெயர் ஆரியரத்னம் ரமணி. இருபத்தெட்டு வயதாகும் அவர் இரு பிள்ளைகளின் தாய். இளையவர் நிலுக்ஷன் முன்பள்ளி செல்லும் வயதில் இருக்கிறார். மூத்தவர் தனுஷ் மூன்றாம் ஆண்டில் […]