அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லை. இதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை. 10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும். ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் […]
கல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத படி தடங்கல்களுக்கும் பிறகு தி மு க ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் வேறு வேறு சரடுகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வித் திட்டங்களை ஒருங்கே கொண்டு வந்து ஒருமைப் படுத்தும் திட்டமாக முன்வைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு சமச்சீர் கல்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாமல், திமுகவின் செயல் திட்டம் என்ற முத்திரை குத்தி பாடப் புத்தகங்கள் வினியோகமும், […]
அரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள் சட்டம் வைத்திருக்கு… இதோ இந்த சட்ட வல்லுநர் ( கார் கண்ணாடியின் வலது மேலோரம் வக்கீல் குறியீடு ) நம்பர் பிளேட்…. சொல்வது… கீழிருப்பது, பொது ஆஸ்பத்திரியல்ல… சென்னை அப்போலோ நுழைவுதாண்டி உள்ள காஃபி பார் ஓரம் கிடக்கும் ஒரு நோயாளி…. நிர்வாகத் […]
இந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான முகத்துடன் , ”அன்னா ஹாசாரேவை கைது செய்யும் முடிவு வலிதரக்கூடைய விஷயம்” – என்று தொலைக்காட்சியில் சொன்ன போது தான், இந்திய குடிமகன்கள் பலருக்கு வலி பரவியது ஆரம்பித்தது… அதன் வெளிப்பாடு தான் இன்று இந்தியா எங்கும் திரளும் இந்த ஆதரவு… “பாரத் மாத்தா கி ஜெ…” “இன்குலாப் ஜிந்தாபாத்..” எனும் கோஷங்கள் கிளர்ந்தபடி, சைக்கிள், பைக், கார், வேன் நடை… என்று பாரத தேசிய மணிக்கொடியை கையில் ஏந்தி திரளுகிறதே […]
இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது. விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான […]
– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் […]
நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன? நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளைப் பார்ப்போம். ஒரு நகரம் உருவான பின் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளுக்குமான வணிகமும் சேவைகளும் நகரில் மென்மேலும் வளருகின்றன. தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத ஒரு ஜனத்திரளை நகர் வரவேற்று சமாளித்து அனுப்புகிறது. […]
அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் […]
1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. “குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற […]
சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது. […]