ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் […]
அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் […]
இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் […]
சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) […]
‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் […]
சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் மற்றும் வழிபாடு இந்த இன்றியமையாத தொண்டைப் புரிகின்றன. இதன் மறுபக்கம் மதங்களின் எல்லைக் கோடு சம்பந்தப் பட்டது. சர்ச்சையே இப்படி ஒரு எல்லைக் கோடு கிடையாது என்பது தான். என் மதம் […]
ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் […]
கோவிந்த் கோச்சா TIDEL / ASCENDAS International IT park அருகே திருவான்மியூர் ரயில் ஸ்டேஷன் அருகே எடுக்கப்பட்ட படங்கள்
ஆன்மீக நாட்டத்திற்கும் ,தேடலுக்கும் உரிய வழி முறைகளில் பக்தி பரவலாகவும்,எளிதாகவும் அமைகிறது. தத்துவ விவாதங்களில் சிக்காமல் கடும் பயிற்சிகளில் ஈடுபடாமல் பக்தி என்ற சாதனம் மூலம் இறையருளைப் பெற முடியும். படித்தவர்கள், ஞானம் உடைய வர்களால் மட்டுமே அணுக முடியும் என்பது இறைக் கொள்கையாக அமையும் போது இறைவன் பாமரர்களால் ,சாதாரண மனிதர்களால் அணுக முடியாதவனாகிறான்.ஞானிகளால் மட்டுமே அறியப் படுகிற வனாக அவன் இருப்பதில் பயனில்லை. சாதாரண மனிதன் கடவுளை அணுக முடிவது, அடைய முடிவது பக்தி […]