கிறிஸ்டி நல்லரெத்தினம் ++ இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா தியேட்டர். எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல – அவருதாங்க படம் காட்டற புறெஜெக்டர் மிசின ஓட்டறவர். அம்மாட தம்பி…. நல்ல மனுஷன்.. கழுத்தில […]
செந்தில்… ஒரு அந்தி மாலை நேரம்….அமைதி தவழும் அடர்ந்த கானகம் ஒன்றின் குறுக்குப் பாதைகளில் ஆணவச் செருக்குடன் என் நடைப்பயணம்…..திண்மையான செருப்பு அணிந்த திமிருடன் வழியில் கிடந்த முட்கழி ஒன்றை எற்றி உதைத்தேன்….அதன் மறுமுனைக் காற்றைக் கிழித்து என் கண்களை நோக்கி எகிறியது…. கணத்தில் கர்வம் நீங்கி கவனத்துடன் கடந்த போதுமனம் கவர்ந்த மணங்கமழ் மலர் ஒன்றை பறிக்க விழைகையில்வழிமறித்த முட்கொடி ஒன்றை பயபவ்யத்துடன் விலக்கி தள்ளினேன்…அதுவோ ஒரு முரட்டு வலிமையுடன் என் தலையை முட்கீரிடமாக சுற்றி […]
உஷாதீபன் தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை […]
குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் […]
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 1 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ […]
வெங்கடேஷ் நாராயணன் காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் தனது மகனை கரையில் விட்டுவிட்டு காவிரியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டான். இவ்வளவு நாள் வீட்டில் குளிப்பதற்கும் இப்போது காவிரியில் குளிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது சின்ன காவிரி தான் வாய்க்கால் என்று கூறுவர் .அகண்ட காவேரி சற்று தொலைவில் உள்ளது. எப்படியும் இந்த பத்து நாட்களுக்குள் மூன்று முறையாவது அங்கு சென்று […]
சோம. அழகுகிரகம் : செவ்வாய் கிரகம் (Mars) வருடம் : 2100 இடம் : மலையும் மலை சார்ந்த இடமும் திடீரென்று சுத்தம், சுகாதாரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அங்குள்ள சில ஜீவராசிகளுக்கு மண்டையினுள் முதலில் ஓர் அரிப்பெடுத்தது. இந்தத் தினவு ஆண் இனத்திற்கு மட்டுமே உரித்தானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தினமும் இரு முறை நீராடச் சொல்லி உடல் முழுவதும் அரிப்பெடுக்கத் துவங்கியது. மூன்று வேளையும் பழையன விலக்கி புதியன மட்டுமே […]
வெனிஸ் கரு மூர்க்கன்[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் – 1 காட்சி – 2, பாகம் -1 தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, ஓல மிட்டால் உடனே வாயை மூட முயல்வார் !வலித்துயர் மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்புலம்புவோம் மிகையாய் அன்றி இணையாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்குஉதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்.ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்,தான் இழந்ததை […]
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2 தொடர்ச்சி ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் […]
உஷாதீபன் ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் […]