அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள். […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய வாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி […]
கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று […]
2. வேர் : அலுவலகத்தில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றிக்கு பின் வந்த ஒரு ஞாயிறில் மிகப் பெரிய மன அழுத்தம் அவனுக்கு ஏற்பட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லை. மழை தூறலான சோம்பலான ஞாயிறு. வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தனர். அவன் தனியனாய் இருந்தான். இலக்கியம் படித்தான். ஹிந்துஸ்தானி கேட்டுக்கொண்டே மது அருந்தினான். சுபா முத்கலை மறுமறுபடி கேட்டுக் கொண்டேயிருந்தான். பேகன் அக்தருக்கு மாறினான். கீர்த்தீ ஸ்கால் பாடும் காபி ராகத்தில் மெல்ல […]
சித்ராங்கி க்குத் தனது அழகைபற்றிய கர்வமிருந்து. அழகாய் இருப்பவள் கர்வப்படுவதில் என்ன தப்பு? சிதம்பரத்தில் மட்டுமில்லை விஜய நகர சாமாராச்சியத்திலேயே அப்படியொரு பெண் சொரூபத்தை கண்டதில்லையென இதே கட்டிலில் வைத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கூறவில்லையா? 8. கையெழுத்து மறையும் நேரம். மெல்ல மெல்ல பகல் விலகிக்கொண்டிருந்தது. இரவு தன்னைக்காட்டிக்கொள்ளாமல் பாய்வதற்குத் தயாராய் பதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு நாழிகையில் தெருவாசல், முற்றம் வழியாக பாய்ந்து வீட்டை நிறைத்துவிடும். மேல வீதியிலிருந்த எல்லா வீடுகளும் ஒன்றுபோலவே சிற்றோடு வேய்ந்து தெருவாசலில் […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த மதியம் பெரிசாய் வேலை ஒன்றுமில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் எதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று கீழே வந்தேன். புனித லூக் மருத்துவப் பள்ளியின் காரியதரிசிதான் எனக்கு இந்த அம்மாளைப் பற்றிச் சொன்னது. அப்போது ஒரு முற்றாத நாற்று நான். பட்டணம் வந்தடைந்திருந்தேன். தங்க இடம்வேண்டும். வின்சென்ட் சதுக்கத்தில் அவளது வீடு வாய்த்தது. அங்கே ஒரு அஞ்சு […]
அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் […]
மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய் உறுமுவதைபோல் ஒரு சவுண்டைக்கொடுத்துவிட்டுப் பின் சாந்தமாகிப்போகும். வந்த உடனே பஸ்கள் கிளம்பிப்போவது என்பது எப்போதாவதுதான். ஸீட்டிற்குக் கீழே போட்டிருந்த சூடான டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ட்ரைவர்கள், கண்டக்டர்களோடு அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் தந்தை உத்தம சீலன் பார்பரா ! உன்னத கோமான் ! வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற விதியைப் பின்பற்றுபவர். தான் தந்த நன்கொடைப் பணம் வெளியே தெரிந்தால் அத்தனை அருட்கொடை நிலையங்களும் கையேந்திக் கேட்கும் என்று கூட்டத்தில் பெயர் சொல்லக் கூடா தென்று வேண்டிக் கொண்டார். விளம்பரத்துக்கு ஏங்கிக் கிடக்கும் செல்வந்தர் மத்தியில் […]
ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் […]