இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். ’முடியாது’, […]
வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள். 7. செண்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. சித்ராங்கியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இருக்கட்டுமே பரிதாபத்துக்குரியவர்களாக ஏழைகள் மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? சித்ராங்கிக்காக கோபுரவாசலிலும், கொடிக்கம்பத்தருகேயும், பிரகார வெளிகளிலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் பல ஜெகதீசன்கள் காத்திருக்கிறார்கள். இவளுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வல்லம்படுகையில் ஒர் அத்தை மகனிருக்கிறான். உற்சவகாலங்களில் வீட்டில் கற்பூர […]
வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு […]
1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும் அறுபதை எட்டிப் பிடிக்காதவர்கள் – ஆணும் பெண்ணுமாய், கைகூப்பி வணங்குகிறார்கள். அப்பா, புதுமெருகுடன் மின்னுகிற பொற்றாலியை அம்மாவின் சிரத்திற்கு வலப்புறமாகக் கையைச் சுற்றி, அணிவிக்கிறார். அனசூயா அம்மாவின் நெஞ்சுக்கு நடுவில் மாங்கல்யம் வருகிற மாதிரி, பழைய தாலிக்கு மேலே பளிச்சென்று […]
மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு […]
ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் அந்த மரத்தில் காலை நேரத்தில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் . பின்புறம் பம்பிங்க் ஸ்டேஷனும் அதைத்தொடர்ந்து நாங்கள் அதிகம் பார்க்கக்கிடைக்கும் நத்தைகள் ஊறும் யானைப்புல் காடும் நீண்டிருக்கும். புளியமரம் ஆயிரம் வருஷங்களாக அங்கிருப்பதாகவும் அதில் […]
நிர்மல் நான் கண்விழித்தபோது முதலில் என் பார்வையில் விழுந்தது அந்தக் குடிலின் கூரையுடைய அடிப்பகுதி தான். மிகவும் எளிமையாக நடுவில் ஒரு உச்சிப் பகுதியும், அதிலிருந்து கூம்பாகச் சாய்த்து வரிசையாக வேயப்பட்ட ஓலைகளும் எனக்கு ஒரு வண்டிச் சக்கரத்தை நினைவூட்டின. என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர். நான் கண்விழித்ததைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுத்துக் கொண்டனர். என் கால்கள் இருந்த திசையிலிருந்து சூரிய ஒளி குடிலுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. குடில் முழுக்கப் பனிப்புகை சூழ்ந்திருந்தது. எனக்கு […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் இதயம் கிழிந்து போன பிறகு எந்த உடை அணிந்தால் என்ன ? அணியா விட்டால் என்ன ? என் ஆன்மா கீறப் பட்ட பிறகு இந்த வெளி வேடம் எல்லாம் இனித் தேவை இல்லை.” மேஜர் பார்பரா மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]
சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனாலும் இந்த ஆண்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். எப்படியாவது மனநிலையை மாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். சட்டென்று இந்த நினைப்பு வந்தபோது பின்னால் அவனும் வருகிறானா என்று திரும்பிப் பார்த்தாள். படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் பாண்டியன். தான் கிளம்பிய […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் இவையெல்லாம் எனக்கு சுவையான விவரங்கள். ஆனால் ராய்க்கு இவையெல்லாம் விஷயமே அல்ல. சட்டென என் பேச்சை நிறுத்தினார். ”ஏம்ப்பா இலக்கியம் பத்தி அவர் பேசவே இல்லையா?” என்று கேட்டார். ”பேசினாப்ல எனக்கு ஞாபகம் இல்லை. அப்பிடி இலக்கியம் பத்தி எப்பவுமே பேசிட்டிருக்கிற எழுத்தாளர் அல்ல அவர். எழுத்து பத்தி உள்ளே அசைபோடுவாரே தவிர எல்லாத்தையும் பேசிற மாட்டார், அவர் சுபாவம் அப்பிடின்னு நினைக்கிறேன். எங்க கியுரேட்டுக்கு புத்தகம் வாசிக்கக் குடுப்பார். […]