தேவசர்மாவும் ஆஷாடபூதியும் ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர். அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது. […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 3 >>> ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய வேண்டும். வலியப்போய் திரும்ப மூட்டறதா, அல்லது அப்பிடியே விட்டுர்றதா என்பது பிரச்னை. இருவருமே ஒரே ஸ்திதியைக் கடைப்பிடிப்பதாய் இருந்தால், அந்தப் பிரிவு இயல்பாய் தண்ணிக்குள் மீனாய் அடங்கிவிடும். ஆனால் ரெண்டில் ஒருத்தர் கிச்னு பிரகாசமாக […]
பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி.. “என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?” “ஆமாம். நீங்க நலமா..” பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார். “அப்புறம் சாப்பிட்டியா., பசங்க., வீட்டுக்காரர் நலமா ..?” “ ம் அதுக்கென்ன கொறைச்சல்.. “ “ ஏதும் கோவமா இருக்கியோ..” “ஒண்ணுமில்லையே. சும்மாதான்” “சொல்றதுன்னா சொல்லு. பழைய உற்சாகத்தைக் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது சகப் பிறவிகளுக்கு நாமிழைக்கும் கொடும் தீங்கு, அவரை வெறுப்பதில் இல்லை. அறவே புறக்கணிப்பதில் உள்ளது ! அதுதான் மனித ஒருமைப்பாட்டுக்கு முக்கிய இடையூறாய் இருந்து வருகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Devil’s Disciple) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் […]
ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்] தமிழில்: முனைவர் தி.இரா.மீனா வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான். “நீலம் எங்கே இருக்கிறாய்” “ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ” “முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது. “குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் […]
அவன் ஒரு இளம் விஞ்ஞானி. இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம். குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்! அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன? பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை […]
எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை. அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம். எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் இருக்காரா?” – ”இல்லையே, வெள்ல போயிருக்கார்…” – ”அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?” என்னத்த முக்கியமான விஷயம், அநேகமாய் அவருக்குத்தான் அது அதிமுக்கியமானது, நமக்கல்ல, என்று பிற்பாடு தெரியவரும். நம்மைப் பாராட்டி எவனாவது பரிசளித்தாலோ, எவனாவது நமக்கு உபகாரம் செய்தாலோ, அவன் மனசாரச் செய்கிறான் என்பதில்லை… பல்கடித்து பொருமலை மறைத்து பொறுமை […]
தந்திலன் என்ற வியாபாரி மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்: அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “காரணங்களுக்குச் (Reason) செவி சாய்ப்பவன் மெய்யறிவுக்குச் சரணடைகிறான். காரண மெய்யறிவோ தன்னை ஆளுமை செய்ய வலிமை இல்லாத பலவீன மனத்தை எல்லாம் அடிமை ஆக்குகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Man & Superman) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, […]