பாடம்

This entry is part 11 of 19 in the series 25 ஜூன் 2023

ஸிந்துஜா  சோணமுத்து நடைப்பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு வாசல் கதவைத் திறந்தான். அவன் அணிந்திருக்கும் உல்லன் உடைகள் தன்னைத் தாக்குப் பிடிக்குமா என்று கேட்பதை போலச் சில்லென்று மார்கழிக் குளிர்க் காற்று உடலில் பாய்ந்து பரவியது. அவன் நிலைப்படியருகே நின்று தெருவின் இரு முனைகளின் மீதும் பார்வையைச் செலுத்தினான். குளிருக்குப் பயந்து தெருவே கல்லென்றிருந்தது. தெருவிளக்குத் தூண் களிலிருந்து கொட்டிய மஞ்சள் வெளிச்சம் தரையைக் கூடத் தூங்கப் பண்ணி விட்டது போல அவ்வளவு ஆழ்ந்த நிசப்தம். இந்த ஊரே எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஊர். அதிகாலையில் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

This entry is part 7 of 19 in the series 25 ஜூன் 2023

  கபிதாள்.  கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்.  அது இரண்டு வருஷத்துக்கு முன். […]

நட்புக்காக

This entry is part 3 of 19 in the series 25 ஜூன் 2023

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள்.  எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]

நாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900

This entry is part 7 of 9 in the series 18 ஜூன் 2023

     * எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது.  இறங்க வேண்டாம்   காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது.  இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று […]

நிழலாடும் நினைவுகள்

This entry is part 4 of 9 in the series 18 ஜூன் 2023

.      ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி. .                                                              கோடை வெயில் தகிக்கும்  மாதமிது. பள்ளிகளுக்கு விடுமுறை ,பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். பணி காரணமாக அயலூரில் இருப்பவர்கள் பெற்றவர்களோடு , உற்றவர்களோடு இருக்க சொந்த ஊருக்கு வருவார்கள். அப்படிதான் வேணியும் லக்னோவிலிருந்து ஊருக்கு […]

திரை

This entry is part 3 of 9 in the series 18 ஜூன் 2023

ஸிந்துஜா   காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் முத்துசாமியை கேப்டன் எடுத்துக் கொண்டு விடுவான். மறுபடியும் சான்ஸ் கிடைக்க கேப்டனின் காலில் எவ்வளவு தடவை விழ வேண்டும் என்று அந்தக் கேப்டனுக்கே தெரியாது.அவன் ஆல்ரவுண்டராக நன்றாக விளையாடுவதால் கேப்டனாகி விட்டான். காசிக்கு ரொம்ப […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1

This entry is part 1 of 9 in the series 18 ஜூன் 2023

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 2  பாகம் -1 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.  [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்] அறிவிப்பாளி;  சைப்பிரஸ் பொது மக்களே !  துருக்கிப் படகுகள் அனைத்தும் புயலில்  முறிந்தன.  தப்பிய சில படகுகள் திருப்பிப் பாராமல் சென்றன.  இந்த வெற்றியை நாம் ஆடிப்பாடி, மதுபானம் குடித்துக் கொண்டாடுவோம்.  அத்துடன் தளபதி ஒத்தல்லோ திருமண […]

நாவல்  தினை              அத்தியாயம் பதினெட்டு      CE 300

This entry is part 5 of 11 in the series 11 ஜூன் 2023

   வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது.   குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல சுற்று வட்டார கிராமங்களுக்கு தொல்லை உண்டு பண்ணும் சங்கதி வேறேதுமிலலை. நீர்க் கசிவில் இழைந்து வரும் விஷப் பிராணிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்தும் கொடுக்கு கொண்டு கொட்டியும் துன்பம் தரும்.  தேள்களை இழிந்த விஷப் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6

This entry is part 4 of 11 in the series 11 ஜூன் 2023

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 1  பாகம் -6 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ:  [ஷைலக்கை நோக்கி]  மக்கள் சொல்வார்.  காதல்  நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை […]

பார்வை 

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2023

ஸிந்துஜா  கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது ‘ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?” என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான்.  நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அருண் பதிலளிப்பதற்கு முன்பே நரசிம்  “எங்கே நீ இவ்வளவு தூரம்?” என்று கேட்டான்.  “நகைக்காரத் தெருவிலே அம்மாவோட வேலை கொஞ்சம் இருந்தது. அவள் அலைய வாண்டாமேன்னு நா வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தது  வந்தோம், பகத்ராம்லே அம்மாக்குப் […]