Posted inகவிதைகள்
ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
ப.தனஞ்ஜெயன் .1.அந்த சாலையை கடக்க முடியாமல் தவித்திருந்தேன் சக மனிதர்களின் மலத்தை கையால் அள்ளிய காட்சிகளை மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன் விடுதியில் உணவை உண்டு செரிக்காமல் தவித்திருக்கிறேன் நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் சிந்திய உணவை மேசைகளில் துடைக்கும் மனிதர்களின் முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன் பேருந்து பயணத்தில் இரவு தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன் பல மணி நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன் செவிலியர்களின் கரங்களில் பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும் கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன் அகதிகளின் ஆழமான கருத்துரிமையை அறிந்திருக்கிறேன் அவர்கள் நிலத்தின் குரலையும் கேட்டு அழுதிருக்கிறேன் இப்படி என் வார்த்தைகள்…