வெகு நேரம் அழுது கொண்டிருந்த ராகுலன் நீண்ட உடல்வாகு. நிச்சயமாய் அப்பாவைப் போலவே உயரமாக வளருவான். பணிப்பெண் ஒருத்தி சந்தடி செய்யாமல் மிக அருகில் “நாட்டியம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மகாராணி கோதமி அவர்கள் தங்களை அழைத்தார்கள்” என்றாள் மிக மெல்லிய குரலில். யசோதரா தொட்டிலை நோக்கி விரலை அசைத்ததும் குழந்தையைப் பூப்போலக் கையிலேந்தி தொட்டிலுக்கு மாற்றினாள். யசோதரா அவள் எடுத்து வந்த பட்டு மேலங்கியைத் தோளைச் சுற்றி போர்த்துக் கொண்டு நடைகளைத் தாண்டி நீராழி மண்டபத்தை […]
ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை வீதிகள் அனைத்தையும் தாண்டி ராஜாவின் அரண்மனையை ஒட்டியிருந்த பெரிய மைதானத்தை அடைந்தது. சிலர் கடைவீதிகளிலேயே ஆழ்ந்து விட்டனர். வேலைப்பாடு மிகுந்த செப்புப் பாத்திரங்கள், விவசாயத்துக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, ஜரிகை வேலைப்பாடு அமைந்த துணிகள், குழந்தைகள் விளையாட […]
யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே யசோதரா விருந்தினர் மாளிகைக்கு வரவில்லை. ராகுலனின் பெயர் சூட்டும் விழாவிலும் யசோதரா மிகவும் வாடிய முகத்துடனேயே இருந்தாள். இரவு பகல் எந்நேரமும் அழுது யசோதராவுக்கு ஜுரம் கண்டது. பால் கசந்ததால் ராகுலன் தாயிடம் பால் குடிக்கவில்லை. […]
மன்னர் சுப்பபுத்தர் மகாராணி பமீதாவிடம் ” யசோதராவின் முகம் களையாகவே இல்லை. பார்ப்பதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார். “அதெல்லாம் ஒன்றுமில்லை பதிதேவரே. பிள்ளைப் பேற்றுக்குப்பின் இருக்கும் இயல்பான சோர்வே. கைக்குழந்தைக்குப் பால் கொடுப்பதால் வழக்கமான ஆடை அணிகலன்களை அணிய இயலாது. ராகுலனுக்கு பெயர் சூட்டும் விழாவில் பாருங்கள். நம் மகள் பழைய பொலிவோடு வருவாள்” “இன்னும் இரண்டு நாட்களில் அந்த வைபவம் நடக்க இருக்கிறது. பல நாட்டு மன்னரும் அமைச்சர்களும் கூட வந்து விட்டார்கள். ஆனால் தன் […]
இளவரசர் சித்தார்த்தனின் அரண்மனை வளாகத்தின் விருந்தினர் மாளிகைகள் கலகலப்பாக இருந்தன. யயோசதராவின் தாய் தந்தையரான கோலிய நாட்டு மகாராஜா சுப்பபுத்தாவும், மகாராணி பமீதாவும் நூற்றுக்கும் மேற்பட்ட அவர்களது உறவு மற்றும் பணியாளர்களால் மாளிகை களை கட்டி இருந்தது. மகாராணி பஜாபதி கோதமியின் பூஜை அறையிலிருந்து புறப்பட்ட மன்னர் சுத்தோதனர் நேரே விருந்தினர் மாளிகக்குச் சென்றார். ராணி பமீதா அவரை ” வாருங்கள் அண்ணா” என்று வரவேற்றார் “மன்னர் உறங்குகிறார். உங்கள் வம்ச வாரிசும் பேரனுமான ராகுலனின் வரவுக்கு […]
மழைக்கால அரண்மனை மதிலுள் நுழைந்த தீப்பந்த வரிசை இடது புறம் நீண்ட தூரம் சென்று வலது புறமாகத் திரும்பியது. தீப்பந்தங்கள் மீது ஈசல்கள் மோதி விழுந்தன. மேலே உதிரும் ஈசல் சிறகுகளைப் பொருட் படுத்தாமல் பின் வரும் ரதத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி விரைந்தனர் சேவகர் ஓட்டமும் நடையுமாய். அந்தப் புறத்தின் மேல் வாசற் கதவுகள் சத்ததுடன் திறக்க தீப்பந்தங்களுடன் பணிப் பெண்கள் மன்னரைத் தலைவணங்கிக் கும்பிட்டு வரவேற்றனர். மன்னர் கிரீடமும் பட்டு உத்தரீயமும் நகைகளும் அணிந்திருந்தார். […]
கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் முன்னே ஒரு பணியாள் தீப்பந்தந்தத்தை ஏந்தி நடந்தான். அரண்மனைக்கு எதிரே இந்திரனின் பிரம்மாண்டமான கோயில். இருவரும் வெளியே வந்து வலப்புறம் திரும்பி நடந்தனர். மன்னனின் கோடைக்கால அரண்மனை, குளிர்கால அரண்மனை இரண்டும் முன் வாயிலின் வெளியே எரியும் தழல் […]
சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக நின்று கொண்டிருந்தாள். முதுகுப்பை இன்று ஏனோ சுமையாகத் தோன்றியது. மாலை ஐந்து மணிக்கும் பளீரென வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸுக்காகக் காத்திருப்போர் சொற்பமே என்று […]
எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது சிறுவர்கள் தெருவில் விளையாடுவதில்லை கணிப்பொறி தொலைக்காட்சி திரைகளின் முன்னே சிறுவர்கள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது வரப்புக்களின் இடையே பயிர்கள் இல்லை வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது நட்பு உறவுக்குள் கைமாத்து கொடுப்பதில்லை அடகுக் கடைகளில் வரிசையில் மக்கள் எங்கள் ஊர் […]
நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமேனும் ஆகும் வேலை நான் எதிர்பார்க்கிற வேகத்தில் முன்னேறுகிற பட்சத்தில். எங்கள் வேலை ஒரு நிதி நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருளைத் தயார் செய்வது. அரசு வங்கிகளின் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் […]