ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் பதுங்கும் நண்டு வேட்டையிலிருந்து தப்பித்த ஒன்று தான் முட்டையிலிருந்து வெளி வந்த சில மணி நேரத்தில் வல்லூறுக்கு அகப்படாதவையே கடலுள் உயிர்க்கும் ஆமைகள் தராசுத் தட்டுக்கோ செண்டுக்கோ சரத்துக்கோ போகாமல் செடியிலுருந்த மலர்கள் விழும்முன் சருகாய் மனவெளிக்கும் சொற்களுக்கும் பிடிபடாத ஒரு கவிதை எரிகல்லாய் யதார்த்தத்திலிருந்து தப்பிப்பு உண்டு விடுதலை இல்லை என்றது கீறி […]
வீட்டில் இருப்பது, களத்தில் இருப்பது, அலுவலில் முனைவது, அலுவலகம் செல்வது இவை யாவுமே வெவ்வேறானவை. கவனம் மட்டுமே தொடர்ச்சி உள்ளது. இதையேல்லாம் பழகிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறைவாக இருக்கும் போது வெற்றிக்கான இடைவெளி குறைகிறது. குழந்தையின் அறை, மற்றொரு படுக்கை அறை, ஹால் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் துணிகள், நோட்டுப் புத்தகம் அல்லது புத்தகம், ஸ்பூன், உதிரியான உணவுத் துணுக்குகள் என விதம் விதமான குப்பைகளாய், பார்க்க சகிக்க இயலாது இருந்தது. ரவிக்கு […]
அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் வானவில்லின் ஒரு துண்டை மறைத்தும் காட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தது அம்மன் கழுத்தில் நகைகள் இருக்க பூ மாலைகளை மட்டும் காணவில்லை கோயிலின் பிற […]
மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று […]
சத்யானந்தன் மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது தான். ஆனாலும் கடைசி வண்டியைப் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது. எதோ நினைவு வந்தவன் போல U வளைவு வரை ஓரமாகவே நடந்தான். வளைவில் ஏதேனும் ஒரு […]
சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுஞ்செய்தி இருந்தது. இன்று முதல் வேலையாக அதைச் செய்ய நினைவுட்டல். இன்று எப்படி இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும், நேற்று புரசைவாக்கத்தில் […]
சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த பெட்டிக்கடையிலேயே நான்கு முட்டைகளை வாங்கிக் கொண்டான். சாந்தியாயிருந்தால் “சிரமம் பாக்காம் நடந்தா நாடார் கடையில சல்லிஸா வாங்கலாம். இவன்கிட்டே ஒரு முட்டைக்கி அம்பது பைசா அதிகம் ” என்பாள். […]
அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் பாக்கறது தான் ரொம்பப் பிடிக்கும். ஒரு தரிசு நிலத்தில கூட எங்களுக்கு ஏகப்பட்ட விஷயம் தென்படும். விஷுவல்ல எல்லாமே ஒரு குறிப்பிட்ட மனநிலையை அழுத்தமா வரவழைக்கிற முயற்சி தான் அடிப்படையானது. என்னோட […]
ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது […]
முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் இந்த முறை சொந்த செலவில் டெல்லி வந்து ‘கரோல் பாக்’கில் தங்க வேண்டிய நிலை. காலையிலிருந்து கண்ணாமூச்சி விளயாடுகிறான் விஷால். ‘எஸ் எம் எஸ்’ ஸுக்கு பதிலில்லை. […]