விரவிய உளம்

ரவி அல்லது தேக்க முடியாதென தெரிந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்.  மொண்டு குடித்த நீங்கள் அவரவர் விரும்பிய  பானத்தையொத்திருப்பதாக சொல்கிறீர்கள் எப்பொழுதும்.  பூரிப்பில் லயித்து அப்படியே அதுவாகவே இருக்கின்றேன் துலக்கிய அன்பின் பிரவாகமாகமெடுத்தோட யாவையும் நேசித்து எப்பொழுதும்.  *** -ரவி அல்லது. …

இழுத்துவிட்டதன் அசௌகரியம்

ரவி அல்லது வரப்பைத் தலையணையாக்கி வானத்தை உள் நோக்கிக் கிடக்கும் பொழுது வருடுகின்ற கொப்பின் இலைகள் பறக்க வைக்கிறது பாரிய சுகத்தில்.  தேங்கி இருந்த பனிச் சொட்டொன்று சிரமப்பட்டு பயணித்து சிரசுக்குள் புகுந்து சிந்தை கலைத்து சிறையில் தள்ளியது பூமிக்கு அழைத்து. …

சங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனை

முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக்கல்லூரி, கடலூர் – 1. தமிழில் இலக்கியங்கள் காலந்தோறும் ஒவ்வொருவகையில் உருவாகிக் கொண்டே வருகின்றன. இதனை காலஅடிப்படையில் சங்கஇலக்கியங்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை இலக்கியங்கள்,…
பிடிபடாத தழுவுதல்

பிடிபடாத தழுவுதல்

ரவி அல்லது. தாவித் திமில் பிடித்து. தட்டுத் தடுமாறி விடாது இழுத்து. தலை குப்புற விழ வைத்து. கிழித்து இரத்தம் பீறிட கிறுக்காக்கி எகிறிக் கொண்டே இருக்கிறது இந்த எண்ணங்கள் எப்பொழுது பிடிபடாமல் ஓடி. *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com ***

போகி

முனைவர் ந.பாஸ்கரன் போகி பொங்கல் திருநாளை வரவேற்கும் முன்தீ நாள். மன மாசுகளையும் மனை மாசுகளையும் இரு மாசுகளையும் தின்றொழிக்கத் தீநாக்குத் தொங்கும்நாள். பழையனவற்றைப் புதியன எரித்து விரட்டும் எரிநாள். அழுக்கு அஃறிணைகளைக் கழட்டியெரித்தெறிய உயர்திணைக்கு வாய்ப்புநாள். நெருப்புநீரில்… மனப்பந்தலில் பூத்துக்குலுங்க…

போலி சிரிக்கிறது 

வளவ. துரையன்                     அரியாசனம் யாரும்                     அமைத்துத் தராததால்                     அரற்றுகிறது அசல்                     போலிகள் தம்                     பொக்கை வாயால்                     சிரித்துக் கொண்டிருக்கின்றன.                     போலிகள் எப்படியும்                     பொய் எனும் ஆயுதம்                     கொண்டு வெற்றி…

எல்லாமே ஒன்றுதான்

வளவ. துரையன்                              எங்கள் வீட்டு                             நாய்க்குட்டி                             சேற்றில் புரண்டு                             வந்தது.                             அதைக்குளிப்பாட்டினேன்                             எங்கள் வீட்டு                             பூனைக்குட்டி                             அணிலைப் பிடித்துத் தின்று                             வாயில் குருதிக் கறையுடன்                             வந்தது.                                                     …

ஆல்ஃபா’ என். யு – 91

சோம. அழகு தேநீர் கடைக்கும் நகல் எடுக்கும் கடைக்கும் பொதுவான இடத்தில் நின்று இனிப்பு தூக்கலான ஒரு கோப்பை பாலை ஆதினி மிடறுகளாய் மாற்றிக் கொண்டிருந்த வேளையில், வெகு நாட்களாகக் கேட்டிராத ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமான, கேட்டவுடன் மொத்தமாக உருகச்…

இலக்கியம் என்ன செய்யும். 

ஜெயானந்தன்  வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.  இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும்.  ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும்…

கலிபோர்னியாவிலொரு கொரில்லா யுத்தம்

.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும் மாசுக் கட்டற்று கலந்திருப்பதால். அபகரித்து ஆக்கிரமித்த…