author

மருமகளின் மர்மம் – 15

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

15 அலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். பேசியது ஓர் ஆண் குரல்: ‘யாரு? மிஸ்டர் ரமேஷா?’ ‘ஆமாங்க. நீங்க யாரு?’ ‘நான் யாருன்றதை யெல்லாம் அப்பால சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே?’  –  குரலில் ஒலித்த கிண்டலும் அழுத்தமும் அவனது கேள்வி ஏதோ விபரீதத்தை உள்ளடக்கி யிருந்ததாய் அவனுக்குத் தோன்றச் செய்தன. ‘நீங்க யாருங்க?’ ‘லூசியோட மச்சான்.’ அவனுக்குத் திக்கென்றது. ‘என்னங்க! […]

நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த இலக்கிய உலகத்தோடு தொடர்பு உடையவர்கள் அறியாமல் இருக்க் முடியாது. இவரைச் சந்திக்கும் வாய்ப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குக் கிடைத்தது. 1972 என்று ஞாபகம். காலஞ்சென்ற எழுத்தாளர்களாகிய திரு மகரம் அவர்கள், குயிலி ராஜேஸ்வரி ஆகியோருடன், திருமதி ராஜம் கிருஷ்ணனும் நானும் ஒரு நாள் மாலையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். ஒரு வாசகி என்கிற முறையில் நான் சூடாமணி அவர்களின் பரம ரசிகையாக இருந்து வந்தேன். எனவே நான் கலைமகளில் […]

மருமகளின் மர்மம் – 14

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

முதன்முறையாகச் சகுந்தலாவை இரக்கத்துடன் நோக்கிய நீலகண்டன், ‘சேச்சே! ந்யூடால்லாம் நிக்க வேணாம்மா.  ஆனா முக்கால் நிர்வாணமா நிக்க வேண்டி வரும்னு வச்சுக்கோயேன். கடைசியில் ரெண்டே ரெண்டு ஒட்டுத் துணி மட்டுந்தான் உடம்பிலே இருக்கும். புரியுதில்லே? ஆனா நீ அதை எடுக்க வேண்டி வராது. அந்த நேரத்துல கரெக்டா பவர்கட் வந்த மாதிரி விளக்குகளையெல்லாம் அணைச்சுடுவாங்க. நீயும் உள்ளே ஓடிடணும். அப்புறம் இன்னொண்ணு. சொல்ல விட்டுப் போயிடுத்து.  நீ கைக்கொழந்தைக்காரியா யிருக்கிறதுனால, ஓட்டல்லேயே பெர்மனெண்ட்டா உனக்கு ஒரு ரூம் […]

நீங்காத நினைவுகள் 32

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

           குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த சலவைக்காரர்கள் பற்றிய ஒரு பாடலுக்குச் சலவைத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாக என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாரச் சின்னான் வந்தானே! வெளுக்கப் போகையிலே, வண்ணாத்தி          வெளுக்கப் போகையிலே!”  – என்று என் அம்மாவே பாடக் கேட்டிருக்கிறேன்.   […]

மருமகளின் மர்மம் – 13

This entry is part 13 of 18 in the series 26 ஜனவரி 2014

கூசிப் போய்த் தலை தாழ்த்தி உட்கார்ந்திருந்த தம் மகனைப் பார்க்கப் பார்க்க, சோமசேகரனுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவர் சற்றே மவுனமாக இருந்த பின் தொடர்ந்தார்: ‘ஆனா லூசியையும் அவனையும் நான் பார்த்ததை லூசி கவனிக்கல்லே.’ ‘அப்பா! குறுக்கே பேசுறதுக்கு மன்னிச்சுக்குங்க.. நம்ம சொத்து-பத்து பத்தி விசாரிக்கிறது சகஜந்தான்னாலும், லூசி கிட்ட எதுக்கு  – அவ எதுவும் கேக்காதப்பவே – அதைப் பத்தின தகவலை யெல்லாம் சொன்னீங்க? தெரிஞ்சுக்கலாமா?’ ‘ஏன்னா, அவ கண்ணுல தெரிஞ்ச ஒண்ணு எனக்குப் […]

நீங்காத நினைவுகள் – 31

This entry is part 6 of 18 in the series 26 ஜனவரி 2014

         1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது.  தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு […]

மருமகளின் மர்மம் – 12

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

‘டெலிகிராம்’ என்று பொய்க் குரலில் அறிவித்துவிட்டு, தான் கதவைத் திறந்ததும்  நொடிப் பொழுதுக்குள் உள்ளே பாய்ந்து கதவைத் தாளிட்டுவிட்டு அதன் மீது சாய்ந்தவாறு நின்று தன்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதத்துடனும் நக்கலாகவும் இளித்த அர்ஜுனைப் பார்த்ததும் சகுந்தலா வெலவெலத்துப் போனாள். ஆயினும் மறு கணமே தனது மன நிலை அவனுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாகி அவனை ஆத்திரத்துடன் பார்த்தாள். ‘சாரி, சக்கு! குரலை மாத்திக்கிட்டு டெலிக்ராம்னு சொன்னதுக்கு!’ ‘இந்தா! சக்குன்னு என்னைக் கூப்பிடாதேன்னு எத்தினி வாட்டி […]

“மணிக்கொடி’ – எனது முன்னுரை

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட […]

நீங்காத நினைவுகள் – 30

This entry is part 6 of 27 in the series 19 ஜனவரி 2014

ஆழ்ந்து யோசிக்காமல் ஒருவர் செயல்படும் போது தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. தவறுகள் நேர்வதோடு மட்டுமல்லாமல், அவர் தப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதும் நேர்ந்து விடுகிறது என்பதற்குக் கீழ்வரும் நிகழ்வு ஓர் உதாரணம். பல்லாண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தின் மூத்த வார இதழ் ஒன்று ஒரு பக்கக் குட்டிக்கதைகளை வரவேற்றுப் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது.  ஏற்கப்படும் அனைத்துக் கதைகளும் வெளிவந்த பிறகு. அவற்றுள் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப் படும் சில கதைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, முன்றாம் பரிசுகள் வழங்கப்படும் […]

என் புதிய வெளியீடுகள்

This entry is part 29 of 29 in the series 12 ஜனவரி 2014

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி – யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில் – நந்தனத்தில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.  இது இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணி நாவலாகும். இது  இரண்டு பரிசுகள் பெற்றதோடு அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டதும் ஆகும். ஜோதிர்லதா கிரிஜா