author

மருமகளின் மர்மம் -11

This entry is part 20 of 29 in the series 12 ஜனவரி 2014

11. பைக்கிலிருந்து இறங்கியதும் சோமசேகரனும் நிர்மலாவும் அந்தப் பெரிய ஓட்டலுக்குள் நுழைந்தார்கள். “அதோ, அந்த மூலை டேபிளுக்குப் போய்டலாம்மா! ரெண்டே பேருக்கானது. வாம்மா,” என்ற சோமசேகரன் சொல்ல, “சரி, மாமா,” என்றவாறு நிர்மலா அவரைப் பின்தொடர்ந்தாள். இருவரும் உட்கார்ந்ததும் வந்த பணியாளிடம், முதலில் இரண்டு குலாப் ஜாமுன், பின்னர் இரண்டு மசால் தோசை என்று, அவளது சம்மதம் கேட்டுப் பணித்தபின், சோமசேகரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். “முதல்ல, நான் என்னோட கதையைச் சொல்லிடறேம்மா. . . கற்பூரம் வாங்கப் […]

நீங்காத நினைவுகள் – 29

This entry is part 23 of 29 in the series 12 ஜனவரி 2014

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி ஆகும். 1857-ல் நிகழ்ந்த முதல் சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி இந்தியா விடுதலை அடைந்தது வரையிலான வரலாறாக அந்தப் படைப்பு இருத்தல் வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. பள்ளி இறுதி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத்தக்க தகுதியிலும் நடையிலும் அது இருத்தல் வேண்டும் என்பதும் […]

மருமகளின் மர்மம் -10

This entry is part 28 of 29 in the series 5 ஜனவரி 2014

நிர்மலாவின் முகத்து வெளிறலைச் சோமசேகரன் கவனிக்கவே செய்தார். அவருக்குப் பாவமாக இருந்தது. “இத, பாரும்மா. பயப்படாம சொல்லு. உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம். நான் உங்க அப்பா மாதிரிம்மா. நீ ஏதோ சிக்கல்லே மாட்டிக்கிட்டு இருக்கேன்னு தோணுது. அதுலேர்ந்து உன்னை மீட்க வேண்டியது என்னோட கடமை. உன்னோட அத்தை குளிச்சுட்டு வர்றதுக்குள்ள நாம எல்லாத்தையும் பேசி முடிக்க முடியாது. அதனால, நாளைக்கு யாரோ •ப்ரண்டு  வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு, ‘வழியில அவ வீட்டுல […]

நீங்காத நினைவுகள் – 28

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் தொடங்கியது பெரியவர்களுக்கான கதைகளைத்தான்! தினமணி கதிர் புதிய எழுத்தாளர்கள் சிலரை அப்போது அறிமுகம் செய்துகொண்டிருந்தது. எனவே நம்பிக்கையுடன் அவ்வார இதழுக்குக் கதைகளை எழுதி அனுப்பத் தொடங்கினேன். மாமியார்-மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியரிடையே விளையும் மனத்தாங்கல்கள், கணவனின் கொடுமையால் மனைவி படும் இன்னல், குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறும் பெற்றோர்ள், தந்தை-மகன் சண்டை, சாதிச் சண்டைகள், தீண்டாமை – இப்படிப் பட்ட தலைப்புகளில் கதைகள் அமைந்திருந்தன. ஒரு கதையை […]

மருமகளின் மர்மம் 9

This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

தன் கழுத்தில் இருந்த அட்டிகை காணாமற் போயிருந்ததைத் தன் மாமியார் சாரதா உடனே கண்டுபிடித்துவிட்டதால் நிர்மலாவுக்கு அதிர்ச்சி விளைந்ததே தவிர, வியப்பு ஏற்படவில்லை. கிளம்புகையில் பளிச்சென்று கழுத்தில் மின்னிய கனத்த நகை காணாததை ஒரு பெண்மணி கண்டு பிடிப்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லைதான். ஆனால் அதைப் பற்றியே கவலைப் பட்டு என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றி யோசித்து வைத்திருந்த நிர்மலா, அப்போதுதான் கவனித்தவள் போல் கழுத்தில் தடவிப் பார்த்துவிட்டு, “அய்யோ! ஆமா, அத்தை! நான் கீழே […]

நீங்காத நினைவுகள் – 27

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

நா.பா. என்னும் இரெண்டெழுத்துச் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட அமரர் திரு. நா. பார்ததசாரதி அவர்களின் மறைவு நாள் டிசம்பர், 13 ஆகும். அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், வெளியான பின்னரும் புதிதாய்ப் பிறந்த தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அந்தப் புதினத்தின் நாயகியின்  பெயரான பூரணி என்பதைப் பல பெற்றோர்  சூட்டி மகிழ்ந்தார்களாம்! அதே போல் அதன் நாயகன் அரவிந்தனின் பெயரும் பல குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது. (இதே போல், பேராசிரியர் அமரர் […]

மருமகளின் மர்மம் 8

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா   ‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான். ‘என்னங்க செய்யிறது, ரமேஷ்? நான் வெறும் ஸ்டெனோதான். இப்ப ஒரு சீனியர் பி.ஏ. விலகிட்டதால எனக்கு அந்தப் பதவியைக் குடுத்து பாம்பேக்குப் போன்றாங்க. இப்ப ப்ரொமோஷன் வேண்டாம்னு சொல்றேன்னு வைங்க. அப்பால எனக்கு இன்னும் பல வருஷங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காதுங்க. பாம்பேல எங்க சொந்தக்காரக் […]

நீங்காத நினைவுகள் – 26 –

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா சென்ற கட்டுரைகளில் ஒன்றில், தினமணி கதிரிலிருந்து திரும்பிவந்த ஒரு குறுநாவலை ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்தும் அது திரும்பிவந்தால் எழுதுவதையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருந்தது பற்றிச் சொன்ன ஞாபகம். எட்டு மாதங்கள் ஆன பிறகும் அது பற்றிய முடிவு தெரிவிக்கப்படாத நிலையில் அது திருப்பப்பட்டுத் தபாலில் தவறியிருந்திருக்க வேண்டும் என்று தோன்றியதில் விரக்தி மேலும் மிகுந்தது. ‘என் கதை என்னவாயிற்று?’ என்று எழுதிக் கேட்பதற்கும் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. எனினும் தயக்கத்தை […]

மருமகளின் மர்மம் – 7

This entry is part 28 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 7 பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது சிந்தனையும் அது நின்ற இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கிற்று. ஓர் ஆண் சொல்லும் வழக்கமான சொற்கள் லூசியின் வாயிலிருந்து உதிர்ந்ததை இன்றளவும் அவனால் வியப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. ‘நாம மனசு விட்டுப் பேசணும், ரமேஷ்! உங்களுக்கு எப்ப சவுகரியம்?’ – இந்த அவளுடைய சொற்கள் அண்மையில்தான் கேட்டவை போன்று அவன் காதுகளில் ஒலித்தன. அன்று மாலை […]

நீங்காத நினைவுகள் – 25

This entry is part 9 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூற்றைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மார்கழிக் குளிரில் பாட்டுக் கேட்கக் கூடிவிடுகிறார்கள். கம்பளிச் சட்டை அல்லது போர்வை போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நெஞ்சின் குறுக்கே அடக்க் ஒடுக்கமாய்க் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இசையைக் கேட்கிறார்கள். சிலர் தலைகளிலும் கம்பளிச் சால்வைகள் […]