புத்தகங்கள்

நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான கோலம் காணப்படாமலேயே சிதைந்துவிட்டது சேலத்து மல்கோவா ருசிக்கப்படாமலேயே அழுகிவிட்டது பொத்திப் பொத்தி வைத்த…

ஒன்றுமில்லை

கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில் தராசு தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’ இமய யாத்திரைகள்…

தமிழ்

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால் இரத்தம் பாலாகும்’ சொன்னார் கவிஞர் ‘செயலியாய்…

 மரங்கள்

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள்  அஃரிணையாம் போதிமரம் ?   சிரிக்கப் பூக் கேட்டது அழத்  தேன் கேட்டது…

வெளிநாட்டு ஊழியர்கள்

பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள்   தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள்   எங்கிருந்தோ அள்ளிவந்து – நீரை இங்கு வந்து பொழியும் மேகங்கள் இவர்கள்   யாதும் ஊரே…

வாழ்க நீ

    சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை   இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை   நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு நீ   பசித்தால் மட்டுமே புசிக்கிறாய்   சொடுக்கும் நேரத்தில் சிரிக்க அழ…

பொங்கல்

  மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை   விதைத்தல் வளர்த்தல் அறுத்தல்   கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை   அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை   நல்லறம் விதைத்து இல்லறம் வளர்த்தால் மழலை அறுவடை…

நல்ல நண்பன்

நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே எனக்கு ஒன்று ருசி என்றால் அவனுக்கும் அது ருசியே இப்படித்தான் நானென்று…

வாழ்க்கைப் பந்தயம்

தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள் ‘லப்டப்’பில் பிழையாம் ‘வால்வு’ வந்ததில் வாழ்க்கை வந்தது சில எலும்புகளின் வேலைக்கு எஃகுத்…

உணவு மட்டுமே நம் கையில்

    ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை   3 சப்பாத்தி உருளையில்லாக் கறி கொஞ்சம் காய்கறி…