எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

This entry is part 12 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று வெறுமனே காட்சியாய் அல்லது சாட்சியாய் மௌனிக்கிறது அவ்வீடு. பட்டாம்பூச்சிகளின் குவியல்  அதன் ஜன்னல் வழி புகைபோல் வெளியேறிய ஓர் அதிகாலைப்பொழுதொன்றில் துழாவும் கண்களால் அதன் அருகடைந்தேன் மெல்ல மேலெழுந்து வெளியேறும் புகை மண்டலம் சூழ  […]

திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

This entry is part 11 of 12 in the series 21 மே 2023

கவிஞர்.திரு.அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், ரூசோ, ரஸ்கின் போன்றவர்களின் நூல்களை அந்த வரிசையில் வைக்கலாம்.இருப்பதற்காக வருகிறோம் இல்லாமலேயே போகிறோம் என்பதை உடைக்கும் வகையில் தங்களின் படைப்புகளால், காலத்தை பின்னுக்கு […]

பாழ்நிலம்

This entry is part 10 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில் பெயர் பெறக்கூடும். -கோவிந்த் பகவான்.

நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300

This entry is part 9 of 12 in the series 21 மே 2023

இரா முருகன் மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ. எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் […]

சகி

This entry is part 8 of 12 in the series 21 மே 2023

ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் […]

நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

This entry is part 7 of 12 in the series 21 மே 2023

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தில்பூமி, நிலாகடல், காற்று, கதிர்க்கனல்,புல்லினம், உயிரினம், புள்ளினம்,மானிடம் அனைத்தும்காரண நிகழ்ச்சி.ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.இறுதி முறிவுஎந்திராப்பி முடிவு.அதுவின்றிஎதுவும் இயங்காது !அண்ட சராசரங் களைதொட்டிலில்ஆட்டுவது அன்னை.முற்பிறப்புஇருந்தால்தான்இப்பிறப்புநிகழும்.இறப்பில் முடியும்இப்பிறப்பு.ஆன்மாவுக்குபிற்பிறப்பு உள்ள தெனஞானிகள் கூறுவர்.முற்பிறப்பு, இப்பிறப்புபிற்பிறப்புசூரிய குடும்ப மானிடசுழற்சி !அணுவோ, அண்டமோ, அகிலமோகுயவன் கை தூண்டாதுஎதுவும்இயங்காதுசுயமாய் சுழலாதுசூரிய குடும்பத்தில் !பிரபஞ்ச இடுப்பு வளைவில்நியூட்டன்எட்டு வைத்து நடந்தால்புறப்பட்டஇடத்துக்கேதடம் பதிக்க மீள்வான் !

புதுவித உறவு

This entry is part 6 of 12 in the series 21 மே 2023

சி. ஜெயபாரதன், கனடா தாமரை இலைமேல்தண்ணீர்போலொரு வாழ்வு.கண்டது உன்கண்ணீர் !சிறகு ஒன்றில் தினம்பறக்க முயன்றுதவிக்கும்பெண் புறா ! உனக்கும் எனக்கும்உறவில்லை.பந்த பாசம் பிணைப்புகணஒன்று மில்லை.உனக்கு உதவி செய் என்றுஉசுப்பியதுஎதுவெனத் தெரியாதுஎனக்கு.எவ்வளவு எனத் தெரியாதுகணக்கு !நமக்குள் வாராதுபிணக்கு !

மாசற்ற ஊழியன்

This entry is part 5 of 12 in the series 21 மே 2023

உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் […]

நிறைவு

This entry is part 4 of 12 in the series 21 மே 2023

பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.‘நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.’‘என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,’கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த உடலாகட்டும்,உயிரற்ற உடலாகட்டும்,இரண்டுமே என்னைஅருவருக்க வைக்கின்றன. ‘ஆகிவிட்டதா?’ என்றார்.என்னது ஆகிவிட்டதா?குழப்பத்துடன் ‘இல்லை’ என்றேன்.‘அப்ப வாங்க, போய் விசாரிக்கலாம்.’கையைப்பற்றிஇழுத்துக்கொண்டு போனார். வடக்கு தெற்காகக் கிடத்தியிருந்தார்கள்.உடலைப் பார்க்காமல்இருக்க என்ன செய்வது?இரங்கல் சொல்பவர்கள் பக்கம்திரும்பினேன்.‘ஐம்பது வயதுகூட ஆகவில்லை,இறைவனுக்குக் கண்ணில்லையா?’‘இது சாதாரண இழப்பு இல்லை.’‘காலம் முழுதும் சேவையில்கழிந்த வாழ்க்கை.’‘பிறர்க்கென்றே வாழ்ந்தவர்.’‘நிறைவான வாழ்க்கை!’ உள்ளுணர்வு உந்தபிணத்தின் பக்கம் […]

வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

This entry is part 3 of 12 in the series 21 மே 2023

“நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார். அப்ப ஏன் என்ன கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டேன். என் தமிழ்ப்பணிக்கு நீ எப்பவும் துணையா இருக்கணும்னு சொன்னார். அதிலிருந்து நான் அப்படித்தான் இருந்துகிட்டு வர்றேன்.”வளவ. துரையன் அய்யாவின் தமிழ்ப்பணிக்கு, இதைவிட ஒரு நற்சான்றிதழை யாரும் தந்துவிட முடியாது.நடப்புக் காலத்தில் […]