வித்யாசாகர் அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்.. அப்பா திட்டுகையில் என்றேனும் அப்பா அடிக்கையில் என்றேனும் பாவம் அப்பா என்று யோசித்திருக்கிறீர்களா ? உண்மையில் அப்பாக்கள் பாவம் நான் அடிவாங்கிக்கொண்டு தூங்குவதுபோல் விழித்திருப்பேன், பிள்ளை உறங்கிவிட்டானென வந்து அப்பா அடித்த இடம் […]
06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-) நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க உறுப்பினர்களுக்கான படங்கள் திரையிட்டு திரைப்பட ரசனை குறித்து வகுப்பு மற்றும் கலந்துரையாடலையும் நடத்தி […]
வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம். அதைச் சுற்றிலும் சிவந்து வீங்கி அழற்சி உண்டாவதால் வலி ஏற்படுகிறது.இதனால் சாப்பிடும்போதும், நீர் பருகும்போதும் வலி உண்டானாலும், அது தற்காலிகமானதே .சிறிது நாட்களில் (சுமார் இரண்டு வாரங்களில் ) அது தானாகவே ஆறிவிடுவதுண்டு. ஆனால் […]
http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ****************** எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும். கிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ] +++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் […]
நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக எதிர்பார்க்கமாட்டான். இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு வேண்டிய நகைகளை போட்டு கூட்டிச் செல்வதே நல்லது. அப்பாவிடம் அது பற்றி சொல்லியுள்ளேன்.அண்ணனுக்கும் அது பற்றி தெரியும். வழக்கம்போல் மருத்துவப் பணி தொடர்ந்தது. […]
22-04-2018 & 23-04-2018 (ஞாயிறு மற்றும் திங்கள்) பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில். நண்பர்களே ஏப்ரல் 23 உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பியூர் சினிமாவில் ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்களும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது. அதில் ஒன்று நண்பர்கள் தங்களிடம் இருக்கிற வாசித்து முடித்த […]
நொயல் நடேசன் பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளைச் செடி எனது மாமனாரால் நடப்பட்டது. அவரது மகளுக்கு அது அப்பா நட்டது என்று சொல்வதில் ஆனந்தம்.அவரது […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி வாதாடிக் கொண்டி ருந்தோம் ! மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள் ஒளிந்து கொண்டுள்ளார் ! மெய்ப்பாடு கண்டு கொள்ளார் ! அறியும் போது தவறிப் போகுது காலம் ! நாமெல் லோரும் பகிர்ந்து கொள்ளும் நேசத்தைப் பற்றி பேசிக் கொண்டி ருந்தோம் ! நட்பைக் கண்டு விட்டாலோ […]
சுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில் வசிக்கும் பாபு வசந்தகுமார் அவர்கள் தயாரித்து அளித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு அங்கு வந்தான் சீதையிடம் அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து இராவணனுக்கு அறம் உரைத்தான். `பேதாய் பிழை செய்தனை,பேருலகின் மாதா அனையாளை மனக்கொடு நீ யாதாக நினைத்தனை எண்ணம் இலாய் ஆதாரம் நினக்கு இனி யாருளரோ` ஆதலால் கொண்ட பத்தினியை விட்டுவிட்டுச் செல் என்றான். `முதலையும் மூர்க்கனும் கொண்டது […]