நான் தனிமையில் இருக்கிறேன்

This entry is part 11 of 22 in the series 19 ஏப்ரல் 2020

சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி… கதைகளிலும் கேட்டதில்லை  கற்பனையிலும் தோன்றியதில்லை   கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய்  அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும்  அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல  கடவுளையும் கருவறைக்குள்  தனிமைப்படுத்திவன்! அசுர வல்லரசுகளையும்   ஆட்டம் காணச் செய்தேன் பயமுறுத்த அல்ல  படிப்பினை தந்து  பாடம் நடத்த! ஆதவனும் அலைகடலும்  அடிமை என  அறைகூவியனும்  அடங்கி கிடக்கிறான்  அறையினுள் இன்று! வானும் வானுக்கப்பலும் நீளும் என் கையென  வாழ முயன்றவும்  ஒடுங்கி ஒளிந்து இருக்கிறான்  ஓர் அறையில் இன்று! […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 10 of 22 in the series 19 ஏப்ரல் 2020

                                        அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன தருவனம் இவர்களும் எனவரு      கனக வரை அரமகளிர்கள் திறமினோ.         [41] [அலகில்=அளவில்லாத; அபரிதம்=மிகுந்த; எரி=ஒளி; தமனியம்=பொன்; தரளம்=முத்து; அரச அரவு=பாம்பரசன்; சிகை=உச்சி; இவருழை=இவரிடம்; ககனம்=வானம்; தரு=மரம்; ககனம்=பொன்; வரை=மல்லை]       இப்பாடலில் பெண்களின் […]

அறியாமை அறியப்படும் வரை….

This entry is part 9 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன்  அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த  மனிதன் யார்? ஆண்டவன் தவம்  இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார். திருவாய் மலர்ந்தருளினார். மனிதா என்னைப் படைத்து விட்டு இன்னும் என்ன‌ இங்கு வந்து கூச்சல் போடுகிறாய். உங்களை “என்ன சொல்லி அழைக்க?” “நீயே படைத்துவிட்டு  நீயே கேட்கிறாய். மனிதா..மனிதா..என்று ஆயிரம் தடவை அழை” என்றான் […]

கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

This entry is part 8 of 22 in the series 19 ஏப்ரல் 2020

கோ. மன்றவாணன்       கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே தற்போதைய அறிவார்ந்த ஏற்பாடு. அதற்காக விழித்திரு விலகிஇரு வீட்டிலிரு என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விட்டிருக்கிறது. தனிமனித இடைவெளியும் கைகழுவுதல் உள்ளிட்ட தூய்மை ஒழுக்கங்களைப் பேணவும் சொல்கிறார்கள். இன்றியமையாத காரணங்களுக்காக வெளியில் வரும்போது Face […]

புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

This entry is part 7 of 22 in the series 19 ஏப்ரல் 2020

வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது நூல்களை கீழ்வரும் முகவரியில்  பெற்றுக் கொள்ளலாம் ஓவியா பதிப்பகம்1- 17- 1 காந்தி நகர்,வத்தலகுண்டு 624 202தமிழ்நாடுOviyapaippagam@gmail.comvathilaipraba@gmail.comதங்கள் ஆதரவை எதிர்பார்த்து,நட்புடன்,முல்லைஅமுதன்

உன்னாலான உலகம்

This entry is part 6 of 22 in the series 19 ஏப்ரல் 2020

அருணா சுப்ரமணியன்  நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால்  ஓர் உலகம் கிடைத்த  உன்மத்தத்தில் ….இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்.. உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ  ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?  உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை… ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக்  கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்… -அருணா சுப்ரமணியன் 

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

This entry is part 5 of 22 in the series 19 ஏப்ரல் 2020

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையை “செம போர்” எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட இந்த வீடு அடங்கி இருத்தலை சுகமான நினைவுகளாக மாற்றிக் கொடுக்க முடியும். வீட்டிற்குள் இருக்க மறுக்கும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்திருக்கும் இந்நாட்களில் அவர்களோடு சேர்ந்து நீங்காத நினைவுகளை உருவாக்கிக் […]

மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்

This entry is part 4 of 22 in the series 19 ஏப்ரல் 2020

தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை  சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு கால்நடை மருத்துவர் ஒருவருடன் சென்றபோது அவற்றை அம்மக்களுக்குத் தரும் போது சத்யம் வாங்கிக்கொண்டனர். ஏமாற்ற மாட்டோம். கடன் திருப்பிக் கொடுப்போம் என்றதற்கு .  காட்டை காலிசெய்யவேண்டும் என நீதிமன்றமும் அரசும் ஆணையிட்டுவிட்டன பல முறை . நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன மக்கள் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மாயாறு ஓரத்தில் கடவுளின் கோபம் நீக்க கெடா […]

பிள்ளை யார்?

This entry is part 3 of 22 in the series 19 ஏப்ரல் 2020

அருணா சுப்ரமணியன் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு  இந்த ஊரடங்கு காலத்துல பாவம் தண்ணி  ஊத்தக்கூட ஆளில்லை. நாள் தவறாம வந்து தனக்கு அலங்காரம் பண்ணி வாய்க்கு ருசியா எதுனா கொடுத்துட்டு போற கணேசன் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான் போல. அவரும் எப்போ வருவானு வழிமேல் விழி வச்சு காத்துக்கிட்டு இருந்தார்.  ரெண்டு நாள் முன்னாடி கணேசன் வச்சுட்டு போன கொழுக்கட்டை சுண்டல் வகையறாக்களா வச்சு ஒரு […]

மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020

This entry is part 21 of 22 in the series 19 ஏப்ரல் 2020

அண்மை நாட்களில்…. பொதுவாக  மார்ச் மாதம் முதல் மே இறுதிவரை வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளில் ஜமாபந்தி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக வேலைபார்த்தார்கள். ஜமாபந்தி நாட்களில் நாங்கள் அவர்களுக்கு உதவேண்டும். விழி பிதுங்கிவிடும். சிட்டா, அடங்கலை கூட்டிக்  கூட்டிக் கண்கள் பூத்துவிடும், போதாதென்று ஜமாபாபந்தி நாட்களில் திண்டிவனம் தாலுக்கா ஆபிஸில் பழியாய் கிடக்கவேண்டும். அதனால் கிடைத்த ஆர்வம் […]