[ புதிய மாதவியின் ‘பெண் வழிபாடு” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் என பல வகையான தளங்களில் இயங்கி வருபவர். ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளி வந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். பெண் தலைமை தாங்கும் […]
முனைவர் மணி.கணேசன் காப்பிய இலக்கியக் கால கட்டத்தில் சிலம்பும் மணிமேகலையும் பெண்ணிய எழுச்சியின் அடையாளங்களாக விளங்கினாலும் வழக்கத்திலிருந்த பலதார மணமுறைக்கான எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை.சீவக சிந்தாமணியோ ஒருபடி மேலே சென்று மணநூல் என்று போற்றும் அளவிற்கு ஓர் ஆண் பல பெண்களை மணமுடிக்கும் வழக்கத்தை வலியுறுத்தி நிலையாமைத் தத்துவத்தை வெகுமக்களிடம் புகட்ட முனைந்தது.இத்தகைய சூழலில் பிற்காலத்தில் உருவாகி,ஒருதார மணத்தை ஆணுக்கு வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் புதியதோர் சமுதாயம் உருவாக மக்களை நல்வழிப்படுத்திய பெருமை கம்பராமாயணத்திற்கே உண்டு. அதுபோல்,கம்பன் படைத்துக் […]
மண்ணைப் பரப்பி அதில் ஆனா ஆவன்னா எழுதிப்படித்த காலம். எல்லா எழுத்துக்களையும் அப்படித்தான் படித்தேன். எழுதினேன். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வெறும் கூரைவீடுகளும் ஓரிரு ஓட்டு வீடுகளும்தான். எங்கள் வீடு மட்டும்தான் மாடிவீடு. ‘மெத்த வீடு’ என்பது எங்கள் குடும்பப் பெயர். எங்க அத்தா மட்டும்தான் சிங்கப்பூரில் சம்பாதித்துக் கொண்டிருந்தார். சிங்கப்பூருக்குப் போனால்தான் மாடிவீடு கட்டமுடியுமென்று கூரைவீட்டுக்காரர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அத்தா இப்போது சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிக்க புளியங்குச்சி சீவி வைத்திருப்பார்கள். எங்கள் […]
செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html ) உரத்துப் பேச- எஸ். என் நடேசன் கோணிப்பையால் உடல் மூடி வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் “எம் குட்டி இளவரசிகளின் சின்னக் கைகளை அம்மா நீ அறிவாயா? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409094&edition_id=20040909&format=html […]
மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும் தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்ஷ்மி. அந்த உலகத்தின் […]