பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு

This entry is part 2 of 18 in the series 23 ஏப்ரல் 2017

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin)  போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள்.  பதினைந்தாம் […]

அனுமன் மகாபாரதம் – 1

This entry is part 3 of 18 in the series 23 ஏப்ரல் 2017

  சோம.அழகு (புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ என்னும் அங்கத நாடகத்தைப் பின்பற்றி ‘அனுமன் மகாபாரதம்’ என ஒன்று எழுதத் தோன்றியது. இரண்டுமே கண்டிப்பாய் பக்தி நாடகங்களன்று. அக்காப்பியங்களின் கதாபாத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு கற்பனையைக் குழைத்து அந்தந்தக் காலங்களின் அரசியல் வரலாறு அங்கத நடையில் சித்தரிக்கப்படுகிறது.) புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தின் கதைச் சுருக்கம் : [ நாரதர் கூற்றாகவே அமைந்திருக்கிறது]   அயோத்தியில் , வசிஷ்டன் கவித்த மௌலியை ஸ்ரீராமபிரான் தன் தலையிலிருந்து கீழே விழாமல் வெகுகாலமாகக் காத்து […]

மணல்

This entry is part 6 of 18 in the series 23 ஏப்ரல் 2017

  சுப்ரபாரதிமணியன்   ”இந்த வீடுதானா.. ஆத்துமணலுக்காக செத்துபோன பையன் இருந்த வீடுன்னு சொல்லியிருந்தா இத்தனை அலைச்சல் இருக்காது” ஆட்டோக்காரன் சற்று அலுப்புடன் வீதியில் நிறைந்திருந்த புழுதியைப் பார்த்தான். மணியனின் பார்வை இரண்டாம் மாடியில் குத்தியிருந்தது. கண்களின் கீழ் பூத்த வியர்வை சிறு தண்ணீர் பள்ளங்களாகியிருந்தது. உடம்பை ஒரு சிரமத்துடன் நகர்த்தி ஆட்டோவை விட்டு வெளியேறினார். ‘அன்பு இல்லம்’ என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது. “பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.

This entry is part 10 of 18 in the series 23 ஏப்ரல் 2017

  சுமதியின் வீட்டில் நடுக்கூடம். நுழை வாயில் கதவைத் தட்டிய பிறகு கிஷன் தாஸ் உள்ளே வருகிறார். சுமதியும் ஜெயராமனும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவருக்கு மாலை வணக்கம் சொல்லுகிறார்கள். “வாருங்கள், சர், வாருங்கள்! உட்காருங்கள்!” என்று ஜெயராமன் உபசரிக்கிறார். ஒரு நாற்காலியில் அமர்ந்ததன் பின் சுமதியை நோக்கி அன்புடன் புன்னகை புரிந்தவாறு தாம் கொண்டுவந்துள்ள சோழா ஓட்டலின் இனிப்புப் பொட்டலத்தைக் கிஷன் தாஸ் அவளிடம் தருகிறார். “நன்றி, மாமா!” என்று கூறிவிட்டு அதை வாங்கி […]

தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

This entry is part 9 of 18 in the series 23 ஏப்ரல் 2017

செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005   முன்னுரை                     மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. இதன் அடிப்படையில் மொழி இலக்கணமும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது இயல்பே. இவ்விலக்கண அமைப்பில் பெயர்ச்சொல் முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு வாக்கியத்திலும் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாததாக உள்ளதை உணரமுடிகிறது. இப்பெயர்ச்சொல் தற்கால தமிழ் மொழியில் எவ்வாறு வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாறுபடுகிறது என்பதை குறிப்பிட்ட பெயர்ச்சொற்களை தரவாக […]

நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது

This entry is part 11 of 18 in the series 23 ஏப்ரல் 2017

Posted on April 21, 2017   சிறிய சதுரப் பெட்டக துணைக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ************** http://www.bing.com/videos/search?q=NASA+CubeSat+Launch+Initiative&&view=detail&mid=20FB33544207FA58FD5820FB33544207FA58FD58&FORM=VRDGAR http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள்வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் […]

வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

This entry is part 8 of 18 in the series 23 ஏப்ரல் 2017

  “பசலை படுத்தும்பாடு ”   பிரிவை என்னிடம் பேசாதீர் என்ற நான் என் காதலர்பிரிவுக்கு உடன்பட்டேன் விளைவு! பசலைபடரக்காரணமானேன்   அன்று பிரிவை மறுதலித்துப் பின் பிரிவை அனுமதித்த நான் பசலை படர்ந்ததை யாரிடம் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?   பசலையைத்தந்தவர் காதலர் காதலர்தந்ததால்   காதலர்தந்தார் என்ற செல்லத்தால்; காதலர்தந்தார் என்ற உரிமையில்; காதலர் தந்தார் என்ற காரணம் காட்டி பசலை நீக்கமற படர்கிறது என்மீது   என் அழகையும் என்னோடு இருக்கும்; என்னோடு இருந்த […]

நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்

This entry is part 5 of 18 in the series 23 ஏப்ரல் 2017

  இங்கிலாந்தில்  புகலிடம்பெற்ற  ஈழத் தமிழ்ப்பெண்களின் ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்திருக்கும் அரிய முயற்சி                                          முருகபூபதி – அவுஸ்திரேலியா நேர்காணல் என்பதும்  ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே  இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர் பற்றி ஓரளவும்  தெரியாமல்  முழுமையான  நேர்காணலை  தயாரித்துவிட முடியாது. இங்கிலாந்திலிருந்து  எழுத்தாளராகவும், வானொலி ஊடகவியலாளராகவும்  அதே சமயம் இலக்கிய – சமூகச்செயற்பாட்டாளராகவும்  இயங்கும் நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்டுள்ள நேர்காணல் தொகுப்பு ” மகரந்தச்சிதறல்” நிதானம்,  […]

தற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு

This entry is part 12 of 18 in the series 23 ஏப்ரல் 2017

ஆதிவாசி “தமிழ்நாட்டுக்கு உள்ளேதான் வேலை தேட வேண்டிய நிலை இப்போது இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஹிந்தி பேசுகிறார்கள். எனவே,  ஹிந்தி கற்றுக்கொள்வதன் மூலமாக தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, ஹிந்தியைக் கட்டாயமாகக் கற்றுங்கொள்ளுங்கள், என் தமிழர்களே.”   இதைச் சொன்னவர் யார் ?   “ஆங்கிலம் போலவே, ஹிந்தியும் அம்மொழி  பேசாதவர்களுக்கு ஒரு அயல் மொழிதான். இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் அரசியலமைப்பின்  பகுதி XVIIஐ அப்படியே நெம்பியெடுத்து […]

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

This entry is part 13 of 18 in the series 23 ஏப்ரல் 2017

பவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் கலந்துரையாடல் போன்ற மிகச் சிறப்பான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் கட்டுரை படைக்க […]