விருது நகருக்கு ஷார்ட் கட்

This entry is part 11 of 19 in the series 15 ஏப்ரல் 2018

   கோ. மன்றவாணன் விழா நடக்க இருக்கும் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில் செயற்கைப்பற்கள் ஜொலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தார் நல்லாசிரியர் பாலமுருகனார். ஓவியரின் போட்டோஷாப் திறத்தாலும் வண்ணக்கலவை நேர்த்தியாலும் கார், மோட்டார் சைக்கிளில் போவோரையெல்லாம் திரும்ப வைத்தன அந்தப் பேனர்கள். அதனால் விபத்து நிகழக்கூடிய இடமாக மாறியது அந்த மண்டபம் இருந்த வீதி.   அப்போது அங்குவந்த மதியழகன், நல்லாசிரியருக்குப் போட ஆள்உயர மாலைக்குச் சொல்லீட்டீங்களா என்று […]

மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி

This entry is part 12 of 19 in the series 15 ஏப்ரல் 2018

  ( Chronic Simple Rhinitis )           சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காற்றின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனால்தான் சளி  பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சில சமயங்களில் இதே சளி […]

முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்

This entry is part 13 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அன்புடையீர், வணக்கம். இப்பொழுது இ.புக் படிக்கும் பழக்கம் அதிகமாகி- வருகிறது. எதிர்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் தேவை மிக மிகக் குறைந்து போகும். அப்போது நிற்பது இ.புக்காகத்தான் இருக்கும். அனைத்தையும் கையளவு மொபைலில் திறந்து படிக்கும் நிலை விறு விறுவென்று மேலேறி விட்டது. இந்த ஊடகத்தைக் கையிலெடுத்துக்கொண்டு முதல் முயற்சியாக எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அமேஸான் கிண்டிலில்-இ.புக்காக வெளியிட்டிருக்கிறேன். 294 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 190 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறேன். சில பக்கங்கள் சாம்பிளாகவும் கிடைக்கின்றன. படித்துப் […]

பர்ணசாலையில் இராவணன்..

This entry is part 14 of 19 in the series 15 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி இளையவன் சென்றதும் அதுவரையில்  காத்திருந்த இராவணன்  ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம்  தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின் வாயிலில் வந்து,`இங்கு யாரேனும் உள்ளீரோ` என நா குழற வினவுகிறான்.சீதையும் குற்றமற்ற தவசீலர் என எண்ணி,வாருமென வரவேற்றாள். விருந்தோம்பல் என்பது நமது பண்பாட்டில் இன்றியமையாதது.சிலம்பின் நாயகி கண்ணகியும் மீண்டு வந்த கோவலன் அவளுக்குப் பெரும் துன்பம் இழைத்த தன் செயலுக்காக வருந்தியபோது ,`போற்றா ஒழுக்கம் புரிந்தீர் எனச் சொல்பவள்,`தொல்லோர் […]

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்

This entry is part 15 of 19 in the series 15 ஏப்ரல் 2018

மதிப்புக்குரிய ஊடக நெறியாளர்கள் மற்றும் கலை – இலக்கிய ஆர்வலர்களுக்கு வணக்கம்! சென்னையில் வெளியாகும் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு தொடர்பாக தங்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்தமுறை கவிஞர் கி பி அரவிந்தன் நினைவின் மூன்றாவது ஆண்டு செயற்திட்டமாக அமைந்த – உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018′ – முடிவுகள் இத்தோடு இணைக்கப்படுகிறது. இத்தகைய செயற்திட்டம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய தங்களைப் […]

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா

This entry is part 16 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அழகர்சாமி சக்திவேல்   நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய தேசிய விருது பெற்று இருக்கிறார். சென்னையில் பிறந்த இசை அமைப்பாளர் மிக்கி மேக்லேரி,  இந்தப் படத்துக்காய், ஆசியாவின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது பெற்று இருக்கிறார்.. இதற்கும் மேலே ஒரு படி போய்,  இந்தத் திரைப்படம், பல்வேறு உலக விருதுகளையும் […]

கடலூர் முதல் காசி வரை

This entry is part 17 of 19 in the series 15 ஏப்ரல் 2018

02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி [ஆட்டோ] ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில் சேர்த்து  விட்டார். நடைமேடை வரையில் எம் பைகளையும் சுமந்துகொண்டு வந்து வைப்பது அவரின் வழக்கம். வழக்கம் போல திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை செல்லும் விரைவு வண்டி 7.40 மணிக்கு வந்தது. நேற்றும் அதற்கு முன் நாளும் அது 9 மணிக்குதான் வந்தது. எங்களுக்கு முன்பதிவு […]

தூக்கிய திருவடி

This entry is part 18 of 19 in the series 15 ஏப்ரல் 2018

கே.எஸ்.சுதாகர் ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள். “காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்” சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை. […]

எதிர்காலம்…

This entry is part 19 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அரிசங்கர் 2022, ஒரு நவம்பர் மாலை . நிறைமாத கர்பிணி வர்ணா தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிக்கிறாள். தீடிரென முக்கிய செய்தி ஒன்று ஒளிப்பரப்பாகிறது. பிரதமர் அறிவிப்பு: ”இன்று இரவு 12 மணிமுதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இனி பெயர் கிடையாது. அரசே அவர்களுக்கு ஒரு எண்ணை வழங்கும். அந்த எண்ணே அவர்களுக்கான அடையாளம்.அந்த எண்ணே அவர்களுக்கான வாக்களர் எண், எரிவாயுஎண், பாஸ்போர்ட் எண், வங்கி எண், பான்கார்டு எண் என அனைத்தும். […]