குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8

This entry is part 29 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ஜோதிர்லதா கிரிஜா 8. தயாவின் அலுவலகத் தோழி ரமாதான் வந்துகொண்டிருந்தாள். அடிக்கடி வந்துபோகிற வழக்கம் உள்ளவளாதலால், ஈசுவரனும் ரேவதியும் அவளை வரவேற்ற பின் தத்தம் அலுவலைப் பார்க்கப் பிரிந்தனர். ……“வாடி, வா” ”பக்கத்துத் தெருவுக்கு வந்தேனா? அப்படியே இங்கேயும் தலையைக் காட்டலாம்ன?ு? வந்தேன். . .ஆமா? ஏண்டி, மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? அழுத மாதிரி?” தயா பதில் சொல்லாதிருந்தாள். ரமா,மெதுவாக, “எனக்கு எல்லாம் தெரியும்டி, தயா. சங்கரன் சொன்னார். ஆனா, தெரியாத மாதிரி உங்கம்மா அப்பா […]

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 28 of 29 in the series 28 ஏப்ரல் 2013

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாரங்கபாணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அழகாய், கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பான். பணத்தால் உண்டாகும் கர்வம் கண்களில் தேன்பட்டுக் கொண்டிருந்தது. வந்தது புதிய நபர்தான் என்றாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். “என் பெயர் பாவனா. ஹரிணி விஷயமாய்ப் பேச வந்திருக்கிறேன்.” நெற்றியில் வந்து விழுந்த கேசத்தை அலட்சியமாய் ஒதுக்கிக் கொண்டே “எந்த ஹரிணி?” என்று கேட்டான். “உங்களுக்கு எத்தனை ஹரிணிக்களை தெரியும்? தெரிந்த […]

வேர் மறந்த தளிர்கள் – 2

This entry is part 27 of 29 in the series 28 ஏப்ரல் 2013

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை […]

விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்

This entry is part 26 of 29 in the series 28 ஏப்ரல் 2013

யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் “குட்பை லெனின்” . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். அவள் கோமாவிலிருந்து விடுபடும் முன்பு கிழக்கு ஜெர்மனியே காணாமல் போய் விடுகிறது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியின் பிரிவுச் சுவர் தகர்க்கப் பட்டிருக்கிறது. இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்து ஒரே […]

பாசம் என்பது எதுவரை?

This entry is part 25 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    குழல்வேந்தன்   இன்று தேதி 30-1-2012. இந்த நாள் இனிய நாளாகத் தான் தொடங்கியது போல இருந்தது தென்றல் இல்லத்தில். அதிகாலைப் பொழுதின்  நிகழ்வுகள் அத்தனையும் வழமை போலவே ஆரம்பித்தன. இயற்கை அன்னையின் கருணையில், வஞ்சமில்லை; துரோகமில்லை; தென்றலின் தண்மையிலோ மாற்றமில்லை; மறுதலிப்பில்லை; பறவைகளின் பல்லிய பண்ணிசையிலும் பஞ்சமில்லை; பாதகமில்லை.   காலை 4 மணிக்கு வழமை போலவே விழிப்பதற்கான அலாரத்தின் கூவலோசை அந்த இல்லத்தாரின் உறக்கத்தை இதமாகக் கலைத்தது என்று கூறமுடியாது. வழமையாக […]

மாயக்கண்ணன்

This entry is part 24 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் அவன் ஒரு சுட்டிப் பையன். வயது ஆறு பெயர் மாயக்கண்ணன். அவனை நான் முதன் முறையாகப் பார்த்தது மருத்துவ வார்டில். கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.கருத்த மேனி. ஒல்லியான உருவம் பால் வடியும் முகம். அவன்தான் மாயக்கண்ணன். கட்டிலின் அருகே தரையில் ஓர் இளம் பெண் .துணி விரிப்பில் படுத்திருந்தாள் . அவளுக்கும் நல்ல தூக்கம்.அவளும் கரு நிறம்தான். ஒருக்களித்துப் படுத்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .அந்த அமைதியான முகத்தில் ஒரு […]

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17

This entry is part 23 of 29 in the series 28 ஏப்ரல் 2013

புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும் முன்னே அதன் அருகே உள்ள ஒரு காட்டில் சித்தார்த்தன் இளைப்பாறினான். ஞானம், நிர்வாணம் என்னும் விடுதலை எனக்கு மட்டும் வேண்டுமென்றா நான் இந்தக் கடினமான வழியைத் தேர்ந்தெடுத்தேன்? துன்பங்களின்று விடுபடும் ரகசியம் எதுவோ அது […]

தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !

This entry is part 22 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     விழிகள் உன் முகம் நோக்கும் போது வேதனை அடையுது மனம் ! திரும்பி நீ வருவாயோ வராது போவாயோ,  அதை நான் அறிவ தெப்படி  ? நானுனக்கு ஆசனம்  அமைப்பதும், பூமாலை பின்னுவதும் வீணாகுமா என்று நான் வியப்புறு கின்றேன் சில வேளை !   பொழுது சாயும் வேளையில் புள்ளினங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் !   மலை […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!

This entry is part 21 of 29 in the series 28 ஏப்ரல் 2013

   (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      வானத்தில் தோன்றிய விண்மீன்களை விட எவ்விதத் திலும் நாணப் புல்லானது தாழ்ந்த தில்லை என்று நம்புகிறேன் நான். சிட்டுக் குருவி முட்டை போல் செம்மை யாய்ச் செதுக்கப் பட்டது சிற்றெறும்பும், செம்மண் கல்லும் ! மரத் தவளை படைப்பில் சிறந்தது உயிரின மேதை கட்கு ! பிளாக் பெர்ரி கனிக் கொத்து அலங்க ரிக்கும் சொர்க்கபுரி […]