செவ்வாய்க் கோளின் பெரிய துணைக்கோள் ஃபோபாஸ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++ நிலவினில் தடம் வைத்து நீத்தார் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தள உளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின ! வால்மீன் வயிற்றின் தூசிகளை ஆழ்ந்து ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று வீசிய தூசியைப் பிடித்து வந்தார் காசினிக்கு ! வக்கிரக் கோள் […]
ஜோதிர்லதா கிரிஜா 10 … சிகிச்சைக்குப் பின் மருத்துவ மனையிலிருந்து திரும்பியுள்ள சுமதி தன் வீட்டுக் கூடத்தில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளைத் தாக்கியவர்கள் ஏற்படுத்திய எலும்பு முறிவால் அவளது இடக்கை ஒரு தூளிக் கட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடிபட்டதால் அவளது முழங்கால் ஒன்றிலும் கட்டுப் போடப்பட்டுள்ளது. உச்சந்தலையில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டுள்ளது. சிறு வானொலிப்பெட்டியில் சுமதி சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். ஜெயராமன் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். ஜானகி வழக்கம் போல் வீட்டு அலுவல்களைச் செய்துகொண்டிருக்கிறாள். கதவு தட்டப்படும் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் இவரது ஆசிரியர் பணி தொடங்கியது. தற்போது ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். ‘ கணவனான போதும்… ‘ இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘ ஙப்போல் வளை ‘ இரண்டாவது தொகுப்பு. இது தவிர ஒரு சிறுகதைத் தொகுப்பு , ஒரு விமர்சனத் தொகுப்பு எழுதியுள்ளார். மனிதநேயம் , யதார்த்தம் , கிராமத்தின் மண் வாசனை ஆகியவற்றை மொழியில் நகலெடுக்கும் முயற்சிதான் காமராசு கவிதைகள். […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி), புதுக்கோட்டை ஓர் உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதே சுற்றுச் சூழல் எனலாம். அது காற்று, ஒலி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற உயிரினங்களையும் அந்த உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகளையும் உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை இருவகைப்படுத்தலாம். அவையாவன : 1. இயற்கைச் சுற்றுச்சூழல் 2. மனிதன் உருவாக்கிய சுற்றுச்சூழல் என்பனவாகும். இயற்கைச் சுற்றுச் சூழலில் நீர், நிலம், […]
‘உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு இன்று இளைஞர்கள் தவறான கூட்டத்தோடு சேர்றாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்களின் கட்டுப்பாடற்ற தவறான வளர்ப்பு முறைதான்’ ஒரு பட்டிமன்றத்தில் ஓர் அணித் தலைவர் இப்படிச் சொன்னார். ‘இளைஞர்கள் இப்படி ஆவதற்கு அதிக கட்டுப்பாடுதான் காரணம்.’ எதிரணித் தலைவர் மறுத்தார். கைதட்டல். ‘நாங்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று எங்களை ஏன் கேட்பதில்லை?’ அதனால்தான் என் வாழ்க்கையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று முடிவு செய்தேன். எனக்கு இப்போது 22 வயது. தேசிய சேவை இப்போதுதான் […]
கவிஞர் ரெ. முத்துக்கணேசனார் தம் 90 ஆம் அகவைகாண் விழா வரும் ஆகஸ்டு மாதத்தில் காரைக்குடி கம்பன் கழகக் கூட்டமாக மலர உள்ளது. இதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறோம். வழக்கம் போல ஆகஸ்டு முதல் சனிக்கிழமை மாதக் கூட்டம். அறிஞர்கள் கலந்து கொள்வர். இதுதவிர ஒரு கருத்தரங்கம் வைத்துக் கொள்ள்லாம் என்ற எண்ணம் எழுகிறது. கவிஞர் ரெ. முத்துக்கணேசனாரின் படைப்புகள் பற்றி ஒரு நாள் கருத்தரங்கம் நடத்த எண்ணம். மீனாட்சி பள்ளியில் காலை அல்லது […]
என் செல்வராஜ் . அப்போது எங்கள் பள்ளியில் மதிய உணவு பெரும்பாலும் சம்பா கோதுமையில் சமைத்த சாதம் தான். நானும் எனது வகுப்பு தோழர்களும் சேர்ந்து தினமும் சமைப்போம். ஒரே ஒரு பெரியவர் மட்டும் சமையல் செய்ய வருவார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாராயணசாமி ஆசிரியர் எனது வகுப்பு ஆசிரியர்.அவரே தலைமை ஆசிரியரும் கூட. கோதுமையை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு பெரிய பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் […]
நெகிழன் 1) சிமினி விளக்கை அணைத்ததும் நானும் என் அறையும் இருளின் வயிற்றுக்குள் கிடந்தோம். ஆம் மக்களே அது எங்களை விழுங்கிவிட்டது. இதோ..பாருங்கள் எனது தண்டச்சோறு அறை எப்போதும்போல உணர்ச்சியற்ற ஜடமாய் கிடக்கிறது. நானோ தப்பிச்செல்ல முனைகிறேன். விழிகளில் விளக்கெண்ணெய் ஊற்றியதுபோல பாதை தேடுகிறேன் இருளோ என்னை குருடனாக்கி அறையதிர குலுங்கிச் சிரிக்கிறது. 2) நண்பனே கடும் தாகமென்றேன் ஒரு சொம்பு நீரளித்தாய். அண்ணாந்து ஒவ்வொரு மிடறாக… ஆஹா என்னே ருசி. உண்மையில் நீரைவிடவும் சுவை மிகுதியான […]
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். ராஜ அலங்காரத்தில் பழனி முருகன் காலண்டரையே உற்றுப் பார்க்கிறேன். அவ்வளவு பெரிய அழகான முருகன் படம், எனக்கு இப்போது வெறும் நிழல் மாதிரின்னா தெரியறது . அதுக்கும் கீழே தேதி இருக்குமிடத்தில் ஒரு பெரிய கருப்பு நிழல் தெரிந்ததும், கீதா, இன்னைக்கு என்ன தேதி…? என்று கேட்கிறேன். ஏன் உங்களுக்கு முதல்மைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன..? தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா? என்றாள் …அவள் குரலில் […]
– நாகரத்தினம் கிருஷ்ணா அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல் அ. இயற்கை தரிசனம் : அம்மா நீர், நிலம் நெருப்பு, ஆகாயம் இவற்றின் சங்கமத்தால் ஏற்பட்ட விளவுகள் அனைத்துமே இயற்கைதான். மனிதர் உட்பட அனைத்துஜீவன்களும் இயற்கையின் பிரதிகள்தான், இயற்கையின் கூறுகள்தான், இயற்கையின் கைப்பாவைகள்தான், இயற்கையினால் ஆட்டுவிக்கப்படுவர்கள்தான். இயற்கை வேறு நாம் வேறு அல்ல என்ற உணர்வுதான் கடந்த சில கிழமைகளாக என்னிடத்தில் மிஞ்சுகிறது. ஒளியும், நிலமும், நீரும் […]