மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓரக் கண்ணால் பாதி மூடிய உறக்க நிலையில் உணரா மனத்தில் எண்ணித் தாராளமாய் என்னுடன் பழகிக் கொள்ள நீ பேரார்வம் காட்டு கிறாயா ? அந்தச் சந்தர்ப்ப வேளையில் நானுனக்கு என்னை த் தானம் செய்ய வரும் போது, பழுதாய்ப் போன எதுவும் என்னிடம் அளிக்க எஞ்சி இருக்க வில்லை ! பழையன வற்றை எல்லாம் களைந்தேன் என்றுனக்கு நானுறுதி […]
இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட சிவப்பு வண்டிகள், சிவப்பு ரயில்கள், சிவப்பு பேருந்துகள் வந்தால் சிரிப்பான். கைகளைத் தட்டிக்கொண்டே சிரிப்பான். “சொர்ணம், கிளம்பலாமா?” வாழ்வதே வாரத்தில் வரும் இந்த ஒரு வியாழக்கிழமைக்காகத்தான் என்பது போல தாமோதரன் நடந்துகொள்வார் . புதன் […]
சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி. கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். சந்தியா வெற்றிலையைச் சுருட்டிக் கொண்டு வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த உடம்பை நிமிர்த்திக் கொண்டு வாயைத் திறந்தாள் சந்தானலட்சுமி. அசைவம் சாப்பிடுகிற நாட்களில் சந்தியா கூட இருந்து விட்டால் வெற்றிலை […]
மு. இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் பெண்ணியம் தொடர்பான சித்தாந்தங்கள் பேசும் இக்காலச்சூழலில் உருப்பெறும் தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கவிஞர்கள் இன்னும் சரியாகப் பதிவாகாத நிலையில், எந்தச் சித்தாந்தங்களும் […]
(Song of Myself) என் மீது எனக்குப் பித்து (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மீது எனக்குப் பித்து என் மீதுள்ள பித்து மிகையானது களிப்புணர்வு எழுவது என்மேல் தான் எல்லாக் கணமும், எது நடந்தாலும் புல்லரிக்க வைத்திடும் பூரிப்பில் என்னை ! கணுக்கால் எனக் கெப்படி நெளிந்துள்ள தென என்னால் கூற முடியாது ! பிறரோடு நான் சேர்ந்துலாவும் […]
முதல் பதிப்பு – 2012 மொத்த பக்கங்கள் – 210 விலை – 165 பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு […]
வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் எப்படிப் பூத்ததுவோ பசுமையெரிந்த செடிகளுக்கிடையில் எதற்கும் வாடிடா மலரொன்று அன்றியும் எந்தக் கனிக்குள் இருக்கின்றது அடுத்த மரத்துக்கான விதை எல்லா வாசனைகளும் பூக்களாகி நாசிக்குள் நுழையும் கணமொன்றில் செழித்த ஏரியின் கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள் வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும் சுவரோவியங்களில் தோப்புக்கள் எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன இங்கு நீர் தேங்கிய குட்டைகளில் தலைகீழாக வளருகின்றன […]
டாக்டர். ஜி.ஜான்சன் ” கியாக்… கியாக் … கியாக்…” எனது பச்சைக்கிளியின் கொஞ்சுமொழி! வீடு திரும்பும்போது என்னை வரவேற்கும் பாணி இது. வீட்டுக் கூடத்திலிருந்து அதன் அமுத மொழி கேட்குமே தவிர, அதைக் காண முடியாது. வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டுதான். கூடத்தைக் கண்ணோட்டமிட்டபின், ” எங்கே போனது என் கிளி? ” என்பேன் மனைவியைப் பார்த்து. தேநீர்க் கோப்பையுடன் என்னிடம் வருபவள்., ” எனக்கு வேறு வேலையில்லை! நீங்களாவது உங்களின் கிளியாவது! வழக்கம்போல் எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்! […]
ராஜேந்திரன் ஒரு வழியாய் மீண்டும் வகுப்புகள் திறந்து மாணவர்கள் தங்களின் எல்லையை உணர்ந்து கோஷமின்றி, ஒரு இரு நிமிடம் தினமும் மௌனமாய் நிற்கிறார்கள். மாணவர் போராட்டத்தின் போது தமிழ் உணர்வாளர்கள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டவர்கள் மௌனமாய் இருந்தது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நரிகளாய் அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது போல் இதில் தமக்கு ஏதாவது கிடைக்காத என்று காத்திருந்தது நடக்காமலே போனது. பாலசந்திரன் படத்தின் மேல் நடந்த அரசியலில், சிக்சர் அடித்தது போல் இன்று ஜெ […]
தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in Fundamental & Usage of Tamil Computing 02.05.13 – 31.05.13 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம், சென்னை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக […]