மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

This entry is part 6 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

க.சோதிதாசன் என் நகரத்தில் அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது   வீதிகள் அழகு படுத்த படுகிறது.   இடிபாடுகளில் இருந்து புதிதாய் முளைக்கின்றன சீமெந்து காடுகள்   நகர அரங்குகளில் இரவ நிகழ்சி களைகட்டுகிறது   அயல் நாட்டு பாடகர்கள ் உச்சஸ்தாயில் இசைக்கிறார்கள் விரசம் வழியும் பாடல்களை   அன்னிய மொழி பெண்ணின் நடனத்திற்கு எழுகிற சிவில் சத்தத்தில் அதிர்கிறது காற்று   மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது.   அரசியல் தலைவர்கள் அச்சமில்லாது மாலை ஏற்க்கிறார்கள் […]

அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..

This entry is part 5 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் ஆற்றங்கரைக்குச் சென்று கழிப்பதை ஒரு பெண்கள் குழு பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். தென்றல் காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்து விட்டு, இதமான நீரில் குளித்து விட்டு, பாடல்களைப் பாடி, ஆடி, கதைகள் பேசி தங்கள் பொழுதை ஆனந்தமாகக் கழிந்து வந்தனர். புல்வெளியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, இருண்டு கொண்டு வரும் வானத்தைப் பார்ப்பது அனைவருக்குமே பிடித்த ஒன்று.  நிலா வெளி வந்ததும், அதைக் கண்டு பல விதமான கதைகளைப் பேசுவது அதைவிடவும் பிடித்த […]

முள்வெளி அத்தியாயம் -21

This entry is part 4 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

“வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் மட்டும் உங்க குடும்பமே நடிக்கப் போறீங்க” “எங்களுக்கு ஆக்டிங் வருமான்னு தெரியலியே” ‘அதெல்லாம் டைரக்டர் பாத்துக்குவாரு. உங்களுக்கு சம்மதமா?” “இதை நான் டிஸைட் பண்ண முடியாது […]

நினைவுகளின் சுவட்டில் – 97

This entry is part 3 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் போன்ற கலை உலக விகாசங்களின் பரிச்சயத்தை அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து திறந்த ஒரு ஜன்னல் வழியே பெற்று வரும் பாக்கியத்தைப் போல், எனக்கோ நான் வேலை பார்த்து வந்த எலெக்ட்ரிகல் செக்‌ஷனில் இருந்த மற்ற எவருக்குமோ தோன்றாத சிந்தனைகளை, ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு இன்னொரு எங்கள் சகாவுக்கு தோன்றியதை நினைத்தால் இன்றும் கூட […]

தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்

This entry is part 2 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

படைப்பாளிகள் –  அம்ஷன் குமார் கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி   வணிகம் சில நேரம் தன் கொடூர ரூபத்தை வெளிப்படுத்தி சில படைப்புகளையும் படைப்பாளிகளையும் மறைத்துவிடுகிறது. ஆனால் காலம், தன் பெருவெளியில் அவர்களை மீண்டும் கொண்டு வந்து இச்சமூகத்தின் முன் நிறுத்திவிடுகிறது. மக்களுக்கான படைப்புகளை மறைப்பது தன்னாலும் சாத்தியமில்லை என்று காலம் உணர்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறான். தன் படைப்புகளை பற்றி மற்றவர்கள் பேச வரும்போது, அவன் குதூகலிக்கிறான். இயக்குநர் அம்ஷன் குமாரை நான் […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்

This entry is part 1 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள் (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்.) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்து மலேசியர்களும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ளலாம்.   தமிழ் நேசன் இதழுடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி   சிறுகதைகள் மலேசியத் சூழலைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வேறு எந்தப் போட்டிக்கும் அனுப்பப்பட்ட கதைகளாகவோ, பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளாகவோ இருக்கக்கூடாது. […]