இந்த வாரம் यथा -तथा (yathā -tathā)(As – so)என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ’ यथा’ इति शब्दः यत्र प्रयुज्यते ’ तथा ’ इत्यपि प्रयोक्तव्यम् एव।(yathā iti śabdaḥ yatra prayujyate tathā ityapi prayoktavyam eva |) ஒரு வாக்கியத்தில் ’ यथा ‘ என்ற சொல்லை உபயோகித்தால் ‘तथा’ என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும். सादृश्य प्रदर्शनार्थं यथा – तथा […]
இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும். பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்: அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும். இதைக்கேட்ட கரடகன், […]
எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன் கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை இல்லை தான். சப்தங்களின் ஊடே மௌனந்தான் […]
திட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது முக்கியப் பஙக்கு வகிக்கின்றது. இல்லறம் நல்லறமாக அமைய வரவு செலவு என்பது திட்டமிட்டு அமைதல் வேண்டும். நமது முன்னோர்கள்இல்லறம் சிறக்க வரவு செலவு குறித்த செய்திகளைப்பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். அவை என்றும் திட்டமிட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன. வரவிற்கேற்ற செலவு வருமானத்திற்குள் தகுந்தவாறு செலவுகள் செய்தல் வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவு […]
– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் […]
காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் தலைவன் தலைவிக்குச் சமபங்கு உண்டு. உடலும் உயிருமாகவும் இரு கண்களாகவும் திகழ்பவர்கள்; இவர்கள். ஒருவரைவிட்டு ஒருவரை உயர்த்திக்காண இயலாது. தராசின் இரு தட்டுகள் போன்றவர்கள். இவர்கள் இணைந்திருக்கும்போதுதான் இல்லறம் சிறக்கும். தலைவன் தலைவியின் களவிலும் கற்பிலும் உறுதுணையாகத் திகழ்பவள் தோழியாவாள். வழிகாட்டியாகஇ ஆறுதல் கூறுபவளாக கண்டிப்பவளாகத் தோழி இருக்கிறாள். “ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலாவதுஇ தனக்குரிய மற்றொரு பாதியை தன்னுடன் பொருத்துவதாகும். அவ்வொருபாதி எத்தகையதாயிருத்தல் வேண்டும். அது பொருந்தியதாய் இருத்தல் வேண்டும். பொருந்திய […]
மகிழ்ச்சிக்கான இரகசியம் =============================== இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. படைப்பிலக்கியம் தரும் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வு பற்றிய தரிசனமும் இந்திய சமூகத்தின் அரசியல் நெறிமுறையிலிருந்து நழுவி விட்டதன் அடையாளமாக்க்க் கூட இதை ஒரு வகையில் கொள்ளலாம். வாசகர்கள் இன்றைக்கு பல்துறை சார்ந்த விடயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தன்னம்பிக்கை சார்ந்த துறைக்கும் […]
சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) […]
நீ பிறந்து விட்டாய் கேட்டதும் சில்லென்ற உணர்வு.. உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே அரை அங்குல புன்சிரிப்பு மட்டும் கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும் பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்.. எப்போது என தெரியாமல் வெடிக்கின்றன குண்டுகள்.. முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்… உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது – தலையனை தரும் ஆறுதலை கூட சிற் சமயங்களில் .. என்ற போதும் ஏதோ ஒர் மூலையில் மிக அகண்டு,மிக அகண்டு – வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை […]