29 தெய்வத்தாய் ஒரு நல்ல நாளாப் பாருங்க போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம். பெண் பிடிச்சிருந்த அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடிச்சிடுங்க!” மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறான் பார்த்திபன்.அவன் கூறியதைக் கேட்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.! இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் வகுத்த வழியை மனிதன் மாற்ற இயலுமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் கோமகன் வழிக்காட்டுதலில் பார்த்திபன் தன் குடும்பத்தோடு பெண் பார்க்கச் செல்கிறான்! வாழ்க்கையில் முதன் முதலாக ஓர் அனாதை இல்லத்திற்குச் செல்கிறான்! […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுகப்போர் மூளுது ! நோய் தொத்தும் பூமியைக் குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணிகள் வேறு வேறு ! கரங் கோத்து பூமி […]
டாக்டர் ஜி. ஜான்சன் ஆங்கில முறை மருத்துவம் பயின்ற என்னைப் போன்ற பல மருத்துவர்கள் நாங்கள் கற்றது அறிவியல் பூர்வமானது என்று திடமாக நம்புகிறோம். இந்த முறை ஆய்வியல் அடிப்படையில் மேல்நாடுகளில் தோன்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நாம் நாடுகளில் கொண்டுவரப்பட்டது. இந்த மேல்நாட்டு மருத்துவம் பயின்ற நாங்கள் இதர உள்நாட்டு மருத்துவ முறைகளின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்வதில்லை. அவை அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு சரிவர உட்படுத்தப்படவில்லை என்ற காரணம் கூறி அவற்றை ஊக்குவிப்பதில்லை. என்னுடைய […]
டாக்டர் ஜி. ஜான்சன் மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கருப்பை […]
மு.கோபி சரபோஜி எவரிடமும் பறித்து உண்ணாது எவரிடமும் வாய்சவடால் செய்யாது துருத்தி தெரியாத பாவங்களை சுமக்காது தன் சுகமென்பது கூட தன்னை லயிப்பதே என்றிருப்பவனை நோக்கி எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம் “பைத்தியம்” என்ற வசைச்சொல்லை! ————————————– மு.கோபி சரபோஜி இராமநாதபுரம்
சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை […]
ஜெயஸ்ரீ ஷங்கர் – புதுவை. என்னசெய்வதென்றே அறியாத சித்ரா , பதட்டத்தில் கௌரி…..கௌரி….என்னாச்சும்மா…..இங்க பாரு..இதோ…இதோ….என்னைப் பாரேன்…கெளரிம்மா…என்று மகளின் கன்னத்தை பட படவென்று தட்டிய சித்ரா பக்கத்திலிருந்த தம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து ‘சளக்…சளக்’ கென்று கௌரியின் முகத்தில் தெளிக்கவும்….சட்டென்று கண்களைத் திறந்த கௌரி குழப்பமான பார்வையில் “என்னாச்சு”…..? என்று கண்களைச் சுழற்றி அறையை பார்வையிட….அருகில் கவலையோடு நின்றிருந்த அம்மாவையும் வசந்தியையும் பார்த்ததும் மேலும் குழம்பினாள். அம்மா…அம்மா….என்று பிதற்றிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள் கௌரி. கண்ணைத் திறந்து […]
கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம். நடமாடாக் கற்கோயில் கலை நடனம். நடுவெளியில் நிலத்தொளிரும் கலைதீபம். சட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும் காட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம். பறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும் வீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம். நேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி […]
ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தி னாலும், அது நம் மனித துயரைத் துடைக்க […]
செய்யாறு. தி.தா.நாராயணன் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, அறப்புக்கு தயாராய் படுத்துக் கிடக்கிறது.. சற்று தூரத்தில் அறுவடை இயந்திரம் ஒன்று அசுரனைப் போல் காத்திருக்கிறது,துவம்சம் பண்ணுவதற்காக… நாலஞ்சி வருசமாகவே இந்த பக்கம் சரியான மழையில்லாம வெள்ளாமை அத்துப் போச்சுது. ஏதோ […]