எஸ். சிவகுமார். கல்யாணம் முடிந்து கிளம்பும்போது அம்மா இப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை; அதிர்ந்து போனேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திராதான். இந்திராவை நான் முதன்முதலில் பார்த்தது எட்டு வருடம் முன்பு, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில். கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி திறந்த முதல் நாள். என்னுடைய வீடு அம்பத்தூரில் இருந்தாலும், பள்ளிக்கு நேரடியான பேருந்து இல்லாததனால் பள்ளிக்குச் செல்வதற்காக நான் அங்குக் காத்திருந்தபோது மூச்சிறைக்க ஓடிவந்தவள், “43 A போயிடிச்சா ?” […]
பிரபஞ்சத்தில் எவருமில்லை உன்னையும் என்னையும் தவிர உன் காலடித்தடங்கள் பூமியில் பதிவதே இல்லையே ஏன்? உன்னை சுற்றியதற்கு கோயில் பிரகாரத்தை சுற்றி இருந்தால் கூட வரம் கிடைத்திருக்கும் பண்பலையில் ஒலிபரப்பாகும் சோக கீதங்கள் உன் கல் நெஞ்சைக் கரைக்காதா? மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார் இதயம் லப்டப் என்று துடிக்காமல் உனது பெயரைச் சொல்லி துடித்தது மதுக்கிண்ணங்கள் தான் போதை தரும் என எண்ணியிருந்தேன் உன் இரு கண்களைக் காண்பதற்கு முன் நீ திரும்பிப் பார்த்தால் எரிமலை […]
===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு ஊசிகளின் குத்தல்கள் குடைச்சல்கள். வேப்பமரத்தோப்பின் கோடைகால சருகுகளின் குவியலில் காலடிகள் ஊரும் ஓசை. ரயில் எஞ்சின்கள் தட தடத்து நெஞ்சின் மேல் ஏரும் தருணங்கள். எல்லாமாய் பிசைகிறது. உருகிப்போன மெழுகு வர்த்தியை உருட்டிவைத்து உருவம் செய்கிறேன் வெளிச்ச தேவதையாய். இருட்டு முந்தானை விரித்துக்கொண்டு விழி குத்திப்பார்க்கிறது. தாகம் சஹாரா மணல் வயிற்றைக்கிழித்து குளிர் நிலவின் […]
ஆம். உங்கள் ஊகம் சரியே. அந்தக் கதாநாயகன் புரூஸ் லீ தான். படம் எல்லோர் மனதையும் கவர்ந்த பிக் பாஸ். புரூஸ் லீயின் சண்டையிடும் திறம், அவரது வலிமை, உடற்கட்டு அனைத்துமே திரையுலக ரசிகர்களையெல்லாம் எளிதில் அவர் பக்கம் சாய்த்தது. புரூஸ் லீ யை – லீ சியூ லொங் என்று அழைப்பர். லீ சின்ன டிராகன் என்று பொருள். டிராகன் என்பது சீனாவில் கற்பனையாக வடிக்கபட்ட சிங்கத் தலையும் பாம்பு போன்ற நீண்ட உடலும் கொண்ட […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 20. மக்கள் அதிபரான ஏழை என்னங்க இப்படிப் பாக்குறீங்க..ஒங்க பார்வையே சரியில்லையே… என்னன்னு சொல்லுங்க.. அப்படியெல்லாம் பார்க்காதீங்க..என்னமோ சொல்ல வர்ரீங்க..மொதல்ல அதச் சொல்லுங்க.. என்னது…விளையாடறீங்களான்னா கேட்குறீங்க.. அப்படியெல்லாம் நான் விளையாடலைங்க… என்ன..யாரோட துணையுமில்லாம ஒருத்தரு எப்படி மக்கள் அதிபரா வரமுடியும்னு கேட்கிறீங்களா?… அட இதுக்குத்தான் இப்படியொரு பார்வை…இப்படியொரு கேள்வியா?….. ஏங்க முடியாது?…எல்லாம் மனசு இருந்தா மார்க்கம் உண்டுங்க… மனசுமட்டும் இருந்தாப் பத்தாது…முயற்சி, […]
சிறகு இரவிச்சந்திரன் முகநூலில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார் தமிழ் ஸ்டூடியோ அருண். வழக்கமாக அவர் நடத்தும் நிகழ்வுகளுக்கு இப்போதெல்லாம் என்னால் போக முடிவதில்லை. ஒன்று எழும்பூரில் நடத்துவார். இல்லை பெரியார் திடலில் நடத்துவார். இருசக்கர வாகனத்தை, அதிக தூரம் ஓட்டும் வயதை, நான் கடந்து விட்டதால், இப்போதெல்லாம் பேருந்துதான். ஆனால், அதில் பயணப்படும் போது கிடைக்கும் அனுபவ அவஸ்தை, என் போன்ற மூத்த ‘குடி’மகன்களுக்கு சொல்லி மாளாது. இம்முறையும் அசிரத்தையாகத்தான், அருணின் தகவலை ஆராய்ந்தேன். அட! மீண்டும் […]
-தாரமங்கலம் வளவன் செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது. இன்று வார விடுமுறை. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து திரும்ப வில்லை. முதலில் பிரமையாகத்தான் இருக்கும் என்று அந்த சத்தத்தை உதறித் தள்ள நினைத்தாள் செல்வி. ஆனால் குழந்தையின் அழுகுரல் போன்ற அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டே வந்தது. சில சமயம் வீல் என்று உச்ச குரலில் அலறுவது […]
…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்… ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப் பற்றோடு நடத்தப்படுகிறதா? அரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா? இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு […]
வே.ம. அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலி எழும்பியது! அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்! “ஹலோ…..சிலாமாட் பாகி…..துவான் பெங்கெத்துவ!” “சிலாமாட் பாகி இஞ்சே பாலா……!” “அப்ப ஆல்….துவான்……பங்கில் சய பாகி…பாகி இனி?” “அனாக் இஞ்சே, சந்துரு திடாக் அடீர் செச்கோலா செலமா சத்து மிங்கு ……தன்ப செபாப்…….!” “சுங்கோ ஹய்ரான்……பெங்கெத்துவ! அன்ன சய சந்துரு திடா அடீர் செக்கோலா…….?” “சய பெரிதாவு இஞ்சே சுப்பாயா……பெர்திண்டாக் செபெலூம் லம்பாட்……!” “துவான்……சய அக்கான் பிஞ்சாங் டெங்கான் அன்னா சய…….டான் […]
புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ…. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட உன் உமையல்ல நான். அண்ட சராசரங்களை எனக்குள் அடக்கும் யோனி பீடத்தில் உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய் எரிந்துச் சாம்பலாகிப் போனது. அந்தச் சாம்பலிலிருந்து உன் ஆட்டத்திற்குள் அடங்கும் காத்யாயனி தேவியைக் கண்டுபிடித்திருக்கிறாய். அவளோடு நீயாடும் சிருங்கார தாண்டவம் உனக்காக என்னை ஏங்கித் தவிக்கவிடும் என்ற கனவுகளில் நீ. கங்காதேவியையும் துணைக்கு அழைக்கிறாய். […]