முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் இந்த முறை சொந்த செலவில் டெல்லி வந்து ‘கரோல் பாக்’கில் தங்க வேண்டிய நிலை. காலையிலிருந்து கண்ணாமூச்சி விளயாடுகிறான் விஷால். ‘எஸ் எம் எஸ்’ ஸுக்கு பதிலில்லை. […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -8 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய […]
மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள் இரு சம்பவங்கள் 1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர். பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும் காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை அனுப்பி காந்தார நாட்டு […]
தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முகத்தி லிருந்து அகற்றிப் புயல் பறக்க விட்டது புடவைத் துணி நுனியை ! அந்தோ முகத்திரையும் தங்க வில்லை, மீண்டும் இழுத்தென் முகத்தை மூடவும் என்னால் முடிய வில்லை. என் நாணம் போனது என் தன் மானமும் போனது எனது காப்புடை போனது பார்த்தாய் நீ இப்போ தென்னை அத்தகைப் புயலில் சிக்கி எப்படி […]
அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர் வைச்ச கெடு, ‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’. கண்ணும் தெரியல காதும் கேட்கல பேச்சும் கொளறுது முனகல் மட்டுமே வலிக்கூறு தாங்காம. ஏறி இறங்குற நெஞ்சு எப்ப வேணா நிக்கலாம். கண்ணும், உடம்பும், கையும் கெடந்து துடிக்குது எதுக்குன்னு தெரியல. அப்பாவுக்கோ ஆயிரம் கவல. ஆத்துல இன்னும் தண்ணி வரல ! சோத்துக்கு ஒரு வழியும் பொறக்கல ! ஆனாலும் ஆத்தா துடிக்கறது அத விட சோகமில்ல. கண்ணு கலங்கி நின்னு […]
‘கோமதி’ பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள். திருமணமாயிற்று. புருஷன் நல்லவர். தெய்வ நம்பிக்கை என்று இல்லாவிட்டாலும் பிருந்தா செளிணிவதை தடுக்க மாட்டார். அவர் வேலையுண்டு அவருண்டு என்ற சுபாவம். நேர்மையுள்ளவர் பிள்ளை ஒருபடி மேலே – பெரியார்தாசன். மூட […]
நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு Nenlthal 3 (1)
தொலை பேசி அடர்த்தி வளர்ச்சி: இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி வேகவேகமான வளர்ச்சி. அதை ஒரு எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்று சொல்லலாம். எளிதான முறையில், எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்பதை x, x2, x3 ……..என்ற வீதத்தில் வளர்வது என்று வரையறுக்கலாம். எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சியைக் குத்து வேக வளர்ச்சி என்று தமிழாக்கம் செய்யலாமா? கீழிருக்கும் வரைபடம்1 இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியைக் காட்டும். தொலை தொடர்பு வளர்ச்சிக்கான அலகாக தொலைதொடர்பு அடர்த்தி என்ற கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது. தொலை தொடர்பு அடர்த்தி என்பது 100 […]
முகில் தினகரன் நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம். பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும் மாதர் சங்கத் தலைவி சுஜாதா தேவநாதன் முன் நடக்க ஆயிரக்கணக்கிலான பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ‘பெண் குல எதிரி ‘நிலாஸ்ரீ’….ஒழிக” ‘கேள்…கேள்…மன்னிப்புக் கேள்” ‘தமிழ்ப் பெண்களைக் கேவலமாய்ப் பேசிய தரங்கெட்ட நடிகையே…உடனே ஓடு..உன் மாநிலத்திற்கு” ‘துரத்துவோம்…துரத்துவோம்…தமிழச்சியை இழிவ படுத்திய வட இந்திக்காரியைத் துரத்துவோம்…துரத்துவோம்” ஆவேசப் பெண்களின் ஆக்ரோஷ கோஷம் ஆகாயம் வரை […]