தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன் தன் இயக்கத்தை ஒரு நாள் நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்துப் போகும்.காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தை தொழிலாளர் தினத்தன்று மட்டும் புகழ்ந்து பேசிவி்ட்டு மற்ற தினங்களில் அலட்சியப்படுத்தினால்,உழைக்கும் கரங்களெல்லாம் ஒரு நாள் ஒன்று சேரும்,இந்தப் பூமிப்பந்தைக் கூட இரும்புத்தடி கொண்டு நெம்பி எங்களால் புரட்டிப் போட முடியும்.நமது வியர்வைக் கடலிலிருந்து தான் நீ்ர் ஆவியாகிச் சென்று மண்ணை […]
இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன அவைகளின், விரல் பிடித்தே வெளிச்சங்கள் கதிர்களின் கிரகணங்கள் படர மீண்டு வரா தொலைவில் புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் நிழலின் படங்கள் ஒருபோதும் கலைவதோ அல்ல கலைக்க படுவதோ இல்லை … எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு நிகழ்விலும் தலைப்படும் அவை … தர்கிக்கும் .. உருகி நிற்கும் தருணங்கள் உறையும் நிகழ்வுகள் இவைகள் கிரகண பொழுதில் ஒளிகள் அற்று இன்னும் சுற்றி சூர்யனை தகர்க்கும் … துகள்கள் சிதறி வளியின் அடர்வு அதிகப்படும் புரியாத […]
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம் மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின் நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும் மலரின் புகழைப் பரப்பியது. “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது அவளது அருமை வீணை. அவளின் வரவிற்காகவே காத்திருந்த […]
எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ஒரு பெண்ணின் பயணம் ஆம் , எனது பயணம் முதுமையில் கூண்டுப் பறவையாக ஒடுங்கியிருக்கும் பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். எனக்கே வியப்பாக இருக்கின்றது. எனக்குப் பல பெயர்கள் உண்டு. வீட்டிலேயும் நாட்டிலேயும் கூறும் பெயர்கள். அவைகளில் ஒன்று காட்டாறு. அடங்காமல் ஓடும் வெள்ளமும் ஓரிடத்தில் அடங்கித் தேங்கித்தானே ஆக வேண்டும். பிறந்தது பட்டணத்தில், வளர்ந்தது பட்டிக்காட்டில் பயணமோ பல்லாயிரக்கணக்கான இடங்கள் பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் நினைவுச் […]
வீரபாண்டி நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம். உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல… மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது. புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும். ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு […]
எஸ்.கணேசன் பதின்வயது மோகம் அழுக்கைத் தாங்கின வெள்ளித்திரையைத் தாண்டி உன்னையும் தாக்கக் குடும்பமே போர்க்களமாய்ப் போயிற்றே! அளவற்ற செல்லத்தின் சுதந்திரம் புரியாது காதலின் அர்த்தத்தை உன் வழியில் தேடி நீ அலைந்த இளம்வயது தாய்தந்தைக்குச் சடுதியில் மூப்பைச் சாத்தியதே! இளங்கலையில் தேறியிருக்க வேண்டியபோது நீ இளந்தாய் ஆகிவிட்டிருந்தாயே! எதை இழந்து எதைப் பெற்றாய் என நீ அறியும் முன் வாழ்க்கை உன்மீது இருட்டையும் கசப்பையும் அப்பிவிட்டுச் சென்றுவிட்டதே! அதையும் […]
நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு வழியாக நாமக்கல் செல்லும் பாதையில் ஒளப்பம்பாளையம் என்கிற உலகப்பம்பாளையம் செல்கிற மண் சாலை கிட்டத்தட்ட பொட்டல் காடு எனலாம். காருக்குள்ளும், புழுக்கம்தான். மனதிற்குள் இருக்கும் புழுக்கம், கணவன் ,மனைவி இருவரின் பெருமூச்சும் சேர்ந்து உஷ்ணம் தகிக்க ஆரம்பித்து விட்டது. குளிரூட்டப்பட்ட காரிலேயே பயணம் செய்து பழகிப்போன உடல் இந்த கடும் வெப்பத்தைத் தாங்குவது எளிதல்லவே. […]
தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ சிறகு இரவிச்சந்திரன். நான்கு ஆண்டுகளாக, குறும்படங்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில், செயல்பட்டு வருகிறது அருணின் ‘தமிழ் ஸ்டூடியோ “ ஆகஸ்டு 15 அன்று, வருடா வருடம் சிறந்த குறும்பட இயக்குனர் ஒருவருக்கு விருதும், பணமும், பாராட்டுப்பத்திரமும் கொடுத்துக் கவுரவிப்பதைத் தன் கடமையாக எண்ணி செயல்படும் அமைப்பு இது. இதோடு ‘படிமை ‘ என்றொரு திரைப்படப் பயிற்சிக் கூடமும் நடத்துகிறது. 2012 க்கான விருதைப் பெற்றவர் […]
என் ஆன்மாவின் கதவிடுக்கில் ஒளிந்து நின்று எட்டிப் பார்க்காதே வெளியே வா….! உன் எண்ணம் இனிமை மழை நீர் போல் தூய்மை உனை மறுக்கும் அதிகாரம் எனக்கில்லை..இதோ பேனாவை எடு…! இயற்கை மேல் வைத்த கண் அளந்து விட்டதோ படித்ததை நினைவூட்டு உன்னுள் உயிர்த்ததை என்னுள் எழுது..! காற்றோடு நாசி நுழையும் தூசியை சிலிகான் செல்களாக மாற்றிப் படி..! நீ இன்று இருந்து எழுதி வைத்தவை… நாளை நான் இல்லாது போனாலும் பேசும்..! மூச்சசைவில் வாழ்வு… போனதும் சாம்பல்… இருந்தும் மணக்கும் என்னை நினைவூட்டும் இறவாத கவிதை..! ஜெயஸ்ரீ ஷங்கர்.