திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
பொன்னியின் செல்வன் மூலக்கதை : கல்கி படக்கதை : வையவன் ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன் முன்னுரை கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இந்த நாவல் தமிழில் முதல் முறையாக படக்கதை வடிவம் பெறுகிறது. ஏற்கெனவே மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதி அழியாப் புகழ் பெற்றுள்ள […]
( 5 ) பாலா…இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா…? சற்றுத் தயங்கியவன்….ம்ம்…..தெரியும்ப்பா…என்றான். யாரு சொன்னா? பியூன்தாம்ப்பா… யாரு ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே….. அப்பா எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து ஆரம்பித்த வேலை. உங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்தேன், போயிட்டு வந்தேன் என்று அடிக்கடி போனில் சொல்லுவார். ஒரு காரியத்தை எடுத்தார் என்றால் முடிப்பதுவரை ஓய்வதில்லை. அப்படித்தான் இன்று அரசியலிலும் கால் பதித்திருக்கிறாரோ! வெறும் ஜவுளி […]
நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction) சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த சமகாலத்தை எங்கே ஆரம்பிப்பது அதன் எல்லை எதுவரை? எண்ணிக்கையில் எத்தனை ஆண்டுகள் சார்ந்த விஷயம்? நிகழ்காலமென்றால், எது நிகழ்காலம்? இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த […]
உஷாதீபன் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் […]
சேயோன் யாழ்வேந்தன் ஊருக்குப் போனபோது கருப்பட்டி மணக்க வறக்காப்பி கொடுத்தாள் பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றுக்கும் விலை கேட்டுப் பழகிவிட்ட மகன் திரும்புகையில் கேட்டான் – என்ன விலை இருக்கும் இந்த கருப்பட்டிக் காப்பி என்று – வாழ்க்கை என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் seyonyazhvaendhan@gmail.com
பாச்சுடர் வளவ. துரையன் தமிழ் மொழியில் பண்டைக் காலம் தொட்டே உரைநடை என்னும் வகைமை இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர், “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று உரைநடை வகையே நான்கென மொழிப” என்று குறிப்பிடுவதிலிருந்து உரைநடையின் இருப்பை நாம் உறுதியாக உணர முடிகிறது. ஆனால் உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சில […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ‘ போக்குமடை ‘ என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப் போக்கில் மனிதம் பேசுகின்றன. மண்மணம் வீசும் தொகுப்பிது ! ‘ வெட்டவெளிச் சாமி ‘ கிராமத்துத் தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறது. அவர் எப்படிப்பட்டவர் ? உருட்டு முழி முரட்டு மீசை கொடுவாக் கத்தி கனத்த தேகத்துடன் ஊருக்குள் யாரையும் […]
சிறகு இரவிச்சந்திரன் 0சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே இருந்தாள். அதிக படிப்பினால் பள்ளி இறுதியாண்டிலேயே அவள் புட்டி அதாவது கண்ணாடி போட ஆரம்பித்து விட்டாள். சாட்டை போல முடி இருக்கும் அவளுக்கு. அதுவும் அடர்த்தியாக. ஆனால் அதை அவிழ்த்து விட்டு யாரும் பார்த்ததில்லை. […]
பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். இதுவரையில் என்ன செய்தோம் என்று கவலை கொள்வதா! இல்லை அறுபத்தொன்பது ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசித் துள்ளோம், இந்நாள் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் பொன்னாள் என்று மகிழ்வதா!. இல்லை இல்லை அன்று தொலைக்காட்சியில் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் இருந்தது, திரைப்படம் கூட ஒளிபரப்பினார்கள் அன்று விடுமுறை நாள் என்று […]