ஐங்குறு நூறு——குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் மதுரைக்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தார் என்று கூறுவர். பாரி இறந்த பின் அவனுடைய மகள்களை இவர் திருக்கோயிலூருக்கு அழைத்துச் சென்று அங்கு ஆண்ட மலையமான் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ அதோ ! அங்கோர் இடமுண்டு ! அங்கே நான் போவ துண்டு இதயம் ஒடியும் போது, சிரம் தாழும் போது, என் மனக் கோட்டை அது ! காலம் காத்திருப்ப தில்லை ! தனித்துள்ள போது எனக்குன் இனிய நினைவு எழும் ! நேசிப்ப துன்னை மட்டும் என்று நீ சொன்ன வாசகம், தினம் நீ புரியும் செயல்கள் , மனதைச் சுற்றி வட்டமிடும் ! […]
வரலாறு ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள; சரித்திரக் குற்றவாளியாக்கி சரேலென்று அறுத்தெறிய; பொருத்தமற்ற பொய்யுரைத்து புழுதிவாரியிறைக்க; பேயரசைப் போர்த்திமறைக்க; பிணந்தின்னும் சாத்திரங்களை ஒருசாராருக்கே உரித்தாக்க; அவரவர் அதிகாரவெறியை அருவமாக்கித் திரிய; வலியோரும் தம்மை எளியோராய் காட்டிக்கொள்ள வாகாய்; மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம் கழுவேற்றத் தோதாய்; பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில் […]
அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்; பெருங்குரலெடுத்து அட்டகாசமாய் இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்; ‘இதென்ன புதுக்கதை’ என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலிறங்கியவர்கள் சிலர்…. ;அங்கிங்கெனாதபடியானவள் ஆற்றொணாத் துயரத்தில் பொங்கியழக் காரணமென்ன? ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்; ”இவர் அவரின் அன்னையை தாசியென்று பேச […]
Posted on August 25, 2018 1 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் பறக்கும் ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமைப் புரட்சியில் […]
இப்போது பல பிள்ளைகள் ” ஆட்டிசம் ” என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதை தமிழில் தற்சிந்தனை நோய், தன்மயம், தான்தோன்றி, தற்போக்கு என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். நான் இதை தன்மைய நோய் என்றே அழைக்க விரும்புகிறேன். இது மூளைக் கோளாறோ அல்லது பைத்தியமோ கிடையாது. அதற்கு மாறாக பிறவியில் மூளையில் உண்டான குறைபாடு என்னலாம். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தன்மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தர்புணர்வு உலகில் ஆழ்ந்திருப்பர். […]
புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தை சிறப்புடன் திறந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆராதனைக்கு உற்சாகத்துடன் சென்று வந்தேன். இனிமேல் நான் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும். உண்டியல் எடுப்பதோடு ஆராதனை முடிந்தபின்பு உண்டியலை எண்ணி வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பீடத்தின் இடது பக்கத்தில் பாடகர் குழுவிற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மங்களராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் பயிற்சி பெற்று இனிமையான இசையுடன் பாடினார்கள். […]