மலைப் பிரதேசத்துப் பறவைக் கூச்சலில் கர்ப்பூரமய்யன் விழித்தெழுந்த பொழுதில் ஆமைகள் பறக்கத் தொடங்கின. திருவல்லிக்கேணியில் இருந்து பெயர் தெரியாத இங்கே வந்து ஒரு வாரமாகி விட்டது. திருவல்லிக்கேணியில் யார் உண்டு கர்ப்பூரத்துக்கு? பெண்டாட்டி கபிதாள் தேள்வளையில் கை நுழைத்து கடுமையான விஷம் உள்புக மூளை செயலற்று நின்றுபோய் இறந்துவிட்டாள். ரெண்டாமத்துப் பெண்டாட்டி பூரணி கிணற்றில் சாடி மரித்தாள். கர்ப்பூரத்தின் ஜீவிதம் தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டது. அப்படியுமா ஒருத்தன் சகல விதமான பிரச்சனைகளில் இருந்தும் தப்பி வருவான் […]
வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள் கொண்டதோள்களால் தழுவுகையில்என்ன செய்வது?
2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில […]
ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்‘பாப்கார்ன்’ தின்று‘கோக்’ குடித்தபடி“அம்மா, பசிக்குது” என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா