இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும். வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும். கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், […]
சிறகு இரவிச்சந்திரன் இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த படைப்பாளிகள் பங்கு பெற்ற கூட்டங்களாக இருந்தன என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். செட்டியார்களின் கொடையில் நடந்து வரும் அமைப்பு அது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏ வி எம் ராஜேஸ்வரி திருமணக்கூடத்தில் ஆண்டு விழா நடைபெறும். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைகள் பன்னிரெண்டு புத்தகமாகப் போடப்படும். பன்னிரெண்டில் […]
குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு 3டி எ•பெக்டுடன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலச்சந்தர் தத்தெடுத்தபின் தான் ஏற்றமே. மீனாவுக்கு ஒரு ரஜினிகாந்த், ஷாலினிக்கு ஒரு மணிரத்னம். ஆண்களைப் பொறுத்த வரை கமலஹாசனுக்கும் ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டார். சமகால நடிகர்களான தசரதன், […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் இதயம் கிழிந்து போன பிறகு எந்த உடை அணிந்தால் என்ன ? அணியா விட்டால் என்ன ? என் ஆன்மா கீறப் பட்ட பிறகு இந்த வெளி வேடம் எல்லாம் இனித் தேவை இல்லை.” மேஜர் பார்பரா மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]
முல்லை அமுதன் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் […]
எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் ‘காந்தி சிலை இறங்கு’ என இரு முறை கூவும் நடத்துனர் உச்சி வெயிலிலும் தன் கைத்தடி நிழலில் அரைமணி நேரமாய் ஏதோ படித்து கொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன் மெதுவாய் அவன்மேல் காந்தியின் பார்வை பட ஏதோ செய்தி வர அவசர அவசரமாய் புறப்பட்டான் அவன் காதலி […]
ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பது குறித்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தொடர்பாகவும் அவற்றில் முன்வைக்கப்பட்ட நண்பர்கள் குளச்சல் மு.யூசுப்,சுவனப்பிரியன்,ஓ.நூருல் அமீன்,காவ்யா,தங்கமணியின் இப்பொருள்தொடர்பான விவாதங்களுக்கு மட்டும் எனது சில நிலைபாடுகளை முன்வைக்கவிரும்புகிறேன். 1)இணையத்தில் நிகழ்த்தப்பட்ட விவாத தலைப்பின் முதன்மை பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதாக இருந்தது. எனவேதான் பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இஸ்லாத்தைப் பேசுகிறா,இறைவேதத்தின் சாரம் அதில் உள்ளதா இல்லையா என்பது பற்றி விவாதம் தொடர நேரிட்டது. 2) இறைவேதத்தின் […]
இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு பூமிக்குள் நடனம். நதியின் உதிரத்தில் பயிர்களின் ராகம். மௌனமாய் யோகிகள் தவத்தில் மூழ்கினர். வீதியெங்கும் சம்சாரிகள் வீங்கிப்போய் அலைந்தனர். ஆதாம் ஏவாள் மவுனமாய் சிரித்தனர். மீண்டும் சாத்தான் பழத்தோடு அலைந்தன. புழக்கடை கதவை பதிவிரதை சாத்தினாள். இரவின் முடிவில் மீண்டும் தூவினர் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது ! […]
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி புதுக்கோட்டை சில்வர் அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்