ஏனென்று தெரிய வில்லை

This entry is part 40 of 39 in the series 18 டிசம்பர் 2011

மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா  சூரியனை நோக்கும் வரைக் நான் காத்தி ருந்தேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! விட்டுச் சென்றேன் உன்னை வேடிக்கை விடுதியில் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! நீயேனோ வரவில்லை ஏனென நான் அறியேன் ! காலை விடிவதைக் கண்ணால் கண்டேன் ! பறந்தோட விழைந்தேன் கண்ணீர்த் துளிகளைக் கையேந்தி உன் முன்னால் மண்டியிடத் […]

முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்

This entry is part 39 of 39 in the series 18 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த மதியம் பெரிசாய் வேலை ஒன்றுமில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் எதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று கீழே வந்தேன். புனித லூக் மருத்துவப் பள்ளியின் காரியதரிசிதான் எனக்கு இந்த அம்மாளைப் பற்றிச் சொன்னது. அப்போது ஒரு முற்றாத நாற்று நான். பட்டணம் வந்தடைந்திருந்தேன். தங்க இடம்வேண்டும். வின்சென்ட் சதுக்கத்தில் அவளது வீடு வாய்த்தது. அங்கே ஒரு அஞ்சு […]

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2

This entry is part 38 of 39 in the series 18 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது! அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்! பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்! நாம் உட்பட வாழும் எல்லா உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன! விக்டர் கில்லிமின் [Victor Guillemin] Fig. 1 Radiation Exposure கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க […]

பொருள்

This entry is part 37 of 39 in the series 18 டிசம்பர் 2011

பொருள்  கொண்டு  மனிதம் மதிப்பீடு  செய்யப்படும்  வழிமுறையை  பழக்கப்படுத்தி கொள்வதில்  இனி சிக்கல்  இருக்கபோவதில்லை. மற்றவர்களை  உதாரணம் கொண்டு  உருவாக்கப்படவில்லை  இந்நிலை.  ஒரு நீடித்த பகலில்  கைவிடப்பட்ட நம்பிக்கையை  சுமந்து கொண்டு  சுய நீர்மம் நிறைவில்  மனதின் அழுத்தங்களை  தாங்கி கொள்ள இயலாத நிலையில்  என்னையும் ஆட்கொண்டது  நாளை உங்களையும் தான் . இனி  உயிரினம் வாழ  நிர்பந்தங்களை  பட்டியல் கொண்டு  மன குற்றங்களை  மறைத்து மறந்து வாழவே  உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் .     […]

சுனாமியில்…

This entry is part 36 of 39 in the series 18 டிசம்பர் 2011

      வாழும் மனிதர்க்கிடையில் வரப்புக்கள்தான் அதிகம்.. சுற்றிலும் சுவர்கள்- ஜாதியாய் மதமாய், இனமாய் மொழியாய்.. இன்னும் பலவாய்… இணைத்தது இயற்கை- சாவில் ஒன்றாய்.. சவக்குழி ஒன்றாய்.. சுருட்டியது ஒன்றாய்… சுனாமியில் தொலைந்துபோன சொந்தங்களுடன் டிசம்பர்26…!             -செண்பக ஜெகதீசன்…

அன்பின் அரவம்

This entry is part 35 of 39 in the series 18 டிசம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   யாரோ ஒருவருடன் சதா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியில்தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.   அல்லது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உற்று நோக்கி ஒருமித்தப் பார்வையுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சுற்றி யாருமில்லை. அலைபேசியுமில்லை.   குமரி எஸ். நீலகண்டன்

காதல் கொடை

This entry is part 34 of 39 in the series 18 டிசம்பர் 2011

—————வே.பிச்சுமணி என் காதலை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் ஏற்றுகொள்வதும் ஏற்றுக்கொளளாததும் உன் இதயத்தின் முடிவில் மிஞ்சினால் மிதியடியாக பயன்படுத்து பிஞ்சி போனால் உன்னை சீண்டுபவரை சாத்தும் உன்பாதத்துடன் பழகி பழகி பரதன் மதிக்கும் இராமனின் பாதஅணிகளாக மாறி உன் மனது ஆளும் நேரம் மழை வரும் சிரமேற்கொண்டால் என் காதல் (கொ) குடையாகும்

அவன் இவன் அவள் அது…!

This entry is part 33 of 39 in the series 18 டிசம்பர் 2011

அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் […]

பெரிய அவசரம்

This entry is part 32 of 39 in the series 18 டிசம்பர் 2011

மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய் உறுமுவதைபோல் ஒரு சவுண்டைக்கொடுத்துவிட்டுப் பின் சாந்தமாகிப்போகும். வந்த உடனே பஸ்கள் கிளம்பிப்போவது என்பது எப்போதாவதுதான். ஸீட்டிற்குக் கீழே போட்டிருந்த சூடான டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ட்ரைவர்கள், கண்டக்டர்களோடு அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் […]

பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை

This entry is part 31 of 39 in the series 18 டிசம்பர் 2011

1) சூழலியல் அரசியலை தன் எழுத்தின்வழி ஆய்வாளர் மா.அமரேசன் எழுதிச் செல்கிறார்.இயற்கையின் சமன்குலைவு இதன் மையமும் விளிம்பும் சார்ந்த பார்வையாக மாறியுள்ளது.பெளதீகச் சூழலுக்கும் மனிதன் உருவாக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் இடையிலான முரணும் விலகலும்நிகழ்ந்தவண்ணம்உள்ளது.பெளதீகச்சூழல்இயற்கைச்சார்ந்தது.நிலவியல்,தாவரங்கள்.வனங்கள்,காணுயிரிகள்,நீராதாரம்,காலநிலை,காற்றின் தூய்மை என விரிந்து செல்கிறது. மனித உழைப்பின் ஊடாக உருவாகியுள்ள விவசாய உற்பத்தி முறைகள் ,நகர உருவாக்கம் கட்டமைத்த வாழிடங்கள் , நம்பிக்கைகளின் வழியிலான சமயம் சாதி வாழ்வியல் சடங்கியல்கள் என பண்பாட்டுச் சூழல் உருவாகிறது.பிறிதொரு நிலையில் சொல்லப் போனால் உயிருள்ள ஜீவராசிகளுக்கும் […]