அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி – கே.வி. கோவர்தனன் இலக்கியம்/கருத்து இரு முனைக் கத்தி – அருண் கோலட்கர் – ஆர். சீனிவாசன் கனடா! கனடா! – ஜெகதீஷ் குமார் அறிவியல் ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-3 – அருணாசலம் ரமணன் மூன்றாம் […]
யசோதா சரவணன் மேட்டுப்பாளையம் மேடுகளும் பள்ளங்களுமாகவே வாழும் மக்களின் வாழ்நிலைகளும் உயர்சாதி பணக்காரனின் வீடோ மேட்டுப்பகுதியில் அதை இருபது அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது. அதையொட்டிய தலித்துகளின் வீடுகளோ கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில். கருங்கல் சுவற்றின் துளைகளில் கசியும் கழிவுநீரும், வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும் கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும்போது அவர்களின் ஹாலோபிளாக் வீடுகளின் அஸ்திவாரங்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அவர்கள் அடுக்குமூட்டையில் அடி மூட்டைகளாய் இருக்கும் அருந்ததியர்கள். சுற்றுச்சுவருக்கு ஒற்றைச் […]
ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற அழகுதான். பணமற்ற பரிவர்த்தனைகளில் பழகிய தலைமுறைக்கு இதயத்திற்கு பக்கத்தில் இரக்கத்தை ஒட்ட வைப்பது கொஞ்சம் அசௌகரியம்தான். எண்ணத்திற்கு முன் எடுத்துக் கொடுக்கும் இடமற்ற ஏமாற்றத்தை கைபேசி காவந்து உறையின் அறைகள் நிவர்த்திகள் செய்கிறது கையேந்துகிறவர்களைத் […]
முகவரி கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார் தபால்காரர். அவரா என்று எளனமாக பார்த்தான் சந்தைக்காரன். அதோ மூலையிலுள்ள புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை எடைப்போட்டுக் கொண்டே. அவரா நேத்து தான் அந்த மூலை பழைய புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். நாலு பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை வாங்கி சென்றார் நாலு ரூபா பாக்கியுடன். அவரா ஜிப்பாவோடு அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு. அவரா முனைத்தெரு டீக்கடையில் பேசீக்கொண்டே இருப்பாரே. அவரா வேல வெட்டி இல்லாம எழுதிக்கொண்டிருப்பரே. அவரா லைப்ரரில […]
76வது பிறந்தநாள் சிட்னியில் விடியும் என்று மனோ எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் தேக்கா வசிப்போர்சங்கக் கூட்டம் முடிந்ததும் சத்யா சொன்னார். ‘பயணச்சீட்டுக்கான காசு தந்தால் போதும். 10 நாட்கள் சிட்னி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்று என் மகன் சொல்கிறார். என் மகன் இப்போது சிட்னியில் ஒரு சுற்றுலா நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். குறைந்தது 10பேர் வேண்டுமாம்.’ கேட்டமாத்திரத்தில் எல்லாரும் நான், நான் என்று கையைத்தூக்கி விட்டார்கள். பத்தாவதாக மனோவும் சேர்ந்துகொண்டார். இப்படித்தான் இந்த சிட்னி பயணம் முடிவானது. […]
முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது. நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி […]
.. சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர். 0 மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள் 27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் . 00 திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் […]
ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க ஏழாவது மாடிக்கு ‘ஸ்விக்கி’ பையன் ஐந்து நட்சத்திரம் வாங்கும் ஆசையில் ‘கார் பார்க்கிங்’ இல் நிற்கும் வாகனங்களை பாதுகாக்க இருமிக் கொண்டே தள்ளுகிறாள் குடியிருப்பின் கீழ்தளத்தில் தேங்கிய தண்ணீரை குடியிருப்பு உரிமையாளர் சங்கத்தால் அதிகார […]
பத்மநாபபுரம் அரவிந்தன் – எத்தனையெத்தனை தலைமுறை மரபணுக்களின் நீட்சி நான் என்னுள் நீந்தும் அவைகள் அத்தனையும் எத்தனை ஜாதிகள் கொண்டனவோ எத்தனை மதங்களை ஏற்றனவோ… கள்குடித்துப் பித்தான முப்பாட்டன் வழி வந்த சிலவும்.. புகை பிடித்துப் புகையான பூட்டன் வழி வந்த சிலவும் போன இடமெல்லாம் போகம் விளைத்து தன் முகத்தை பதிவு செய்த முகமறியா முன்னோரின் சிலவும் சொல் வடித்துக் கவிதை செய்த பெரும்பாட்டன் வழிவந்த சிலவும் ஏமாற்றியும் பலரிடம் ஏமாந்தும் புத்திகெட்டுப் போயலைந்த பெயர் தெரியா […]