நாள்: 29-12-2012, சனிக்கிழமை இடம்: The Book Point, Opposite to Spence plaza, நேரம்: மாலை 5 மணிக்கு. சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன் திறனாய்வாளர் இந்திரன், காட்சிப் பிழை ஆசிரியர் சுபகுணராஜன், தமிழ் ஸ்டுடியோ அருண் மோகன். விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு நிர்மலாவை அருகில் அழுத்து அணைத்துக் கொண்டு பரமஹசா சொன்னான். “உன்னைப் பார்த்தால் பதினெட்டு வயதில் மகள் இருக்கிறாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். இருபத்தைந்து வருஷமாய் இந்த அழகை எல்லாம் எனக்காகவே பாதுகாத்து வைத்திருக்கிறாய் என்று நினைக்கும் போதெல்லாம் என் தேகமெல்லாம் சிலிர்த்துப் போகிறது. இன்னும் சொல்லணும் என்றால் உன்னுடன் கழித்த நேரம்தான் எனக்காக நான் வாழ்கிற நேரமாய் தோன்றுகிறது.” பரமஹம்சாவின் வாயிலிருந்து இப்படிப் […]
அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு இறக்கைப் பூச்சிகள் வீதி யெங்கும் மண்டிக்கிடந்தன. ஆகாயத்து அரை நிலா பளிச்சென்று தன் இருப்பைக்காட்டி பூ உலக நடப்பைப் பார்த்து நகைத்துக்கொண்டே நகர்ந்தது. பூமியொடு ஆகாயத்து நிலவுக்குத்தான் தொப்புள் கொடி பந்தமாயிற்றே. எங்கோ ஒரு […]
சீதாலட்சுமி ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா நுழை. வாழ்க்கைச்சக்கரத்தின்அச்சாணிபெண் சமுதாயத்தில் அவள் பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முயன்றனர். இந்த நூற்றாண்டு வரலாற்றின் நிகழ்வுகளை இத்தொடரில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவளும் மனிதப் பிறவியில் ஒருத்தி என்பதற்கு அடையாளச் சீட்டு கிடைத்தது. ஆம். ஓட்டு போடும் உரிமை கிடைத்தது. இந்தியாவில் கிடைத்த இந்த உரிமை பல நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்க வில்லை. நாட்டு விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த […]
வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1) வரலாற்று ஆசான் ஒருவனுக்கு மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்துதந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேசஉணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்டசிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத்தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்டவசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில்அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை. 1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும்அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட்விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப்பட்டவை. தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும்கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப்படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வரவேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்குபணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது. சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்துகொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்குஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின்உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப்போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums […]
கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ சமரில் சமரசம் கொள்ளாதே என்று கீதை உரைத்தவன் வேடனடிக்க மாண்டது விநோதமல்லவா கருவறை இருட்டு என்றாலும் வெளியே நடப்பது கர்மாதி கர்மமன்றோ கோடி புரளும் கோயிலெல்லாம் உண்டிங்கே மகசூல் விருத்தியாகி விவசாயி வீட்டில் உலை […]
சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும். பெண் ஒரு டெடி பேர் எடுக்கிறாள். பையன் ஒரு ஜட்டி பெட்டியை.. ‘பிளாஸ்டிக் பைகள் இந்தக் கடையில் பயன்படுத்தவில்லை’ என்று ஒரு அறிவிப்பு பலகை. சிகப்புக் கலர் அட்டைப் பைகளில், பொருட்கள் தரப்படுகின்றன. வீட்டில், […]
சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் […]
ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு ஏக்கர் முதலாளி ரங்கசாமி எடத்துல ராத்திரி நேரத்துல மஞ்சக் கல்லு நட்டுட்டான் ஐவேசு வருதுன்னான் பூடீசு போட்டுக்கிட்டு வாச்சு மேனா போறாரு பங்காளி பேக்டரிக்கு ஏரிக்கரை இடிஞ்சாச்சு சாயப்பட்றை வந்தாச்சு கரண்ட் இல்லா பூமியில […]