கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)

This entry is part 8 of 29 in the series 25 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கம்பளத்தில் பொறி இந்த வடிவத்தை ! ஒருவனை நேசமாய் நோக்கும் ஆயிழையை ஒத்தது ஆன்மீக அனுபவம் ! அது ஒரு நதி ஓட்டம் ! வாத்துகள் துள்ளி அங்கே வசிக்கும் ! ஆற்று நீரில் மூழ்கும் காகங்கள் ! கண்ணுக்குத் தெரியும் : கிண்ணத்தில் உள்ளது உண்டி ! உடல் வளர்ச்சியும் குடல் எரிச்சலும் உண்டாக்கும் மூலங்கள் ! நமது கண்ணுக்குத் தெரியாமல் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)

This entry is part 7 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “காற்றே ! எங்களைச் சூழ்ந்து செல்கிறாய்; மெதுவாய் இனிமையாய் பாடிச் செல்கிறாய்; இப்போது பெருமூச்சுடன் வருந்திச் செல்கிறாய் ! உன் நகர்ச்சியைக் கேட்கிறோம். ஆனால் உன்னை நாங்கள் காண முடியாது. நீ எம்மைத் தீண்டுவதை உணர்கிறோம். ஆயினும் உனது வடிவை யாம் அறியோம். நீ ஓர் நேசக்கடல் போல் அசைகிறாய் ! எமது ஆன்மாவைத் தழுவி அணைப்பது நீ. ஆயினும் எம்மை மூழ்க்கி […]

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2

This entry is part 6 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூளைக்குள் கடவுள் வீடியோ இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இதன் முதல் பகுதி மட்டுமே இங்கே உள்ளது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவரும் ரூடி: நான் இறந்துவிட்டதாகவும் நான் நரகத்துக்கு சென்றதாகவும் நினைத்தேன். க்வென்: என்னுடைய மகனை கடவுள் என்று நினைத்திருந்தேன் பெர்னி: (க்வெனின் கணவர்) அப்புறம் பார்த்தால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவள் மேரி என்றும், சின்ன சார்லி (மகன்) கிறிஸ்து என்றும் நினைத்திருந்தாள். குரல் (பார்பரா ஃப்ளைன்): […]

பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி

This entry is part 9 of 29 in the series 25 டிசம்பர் 2011

கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 24

This entry is part 5 of 29 in the series 25 டிசம்பர் 2011

  நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் […]

ப்ளாட் துளசி – 2

This entry is part 4 of 29 in the series 25 டிசம்பர் 2011

2. வேர் : அலுவலகத்தில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றிக்கு பின் வந்த ஒரு ஞாயிறில் மிகப் பெரிய மன அழுத்தம் அவனுக்கு ஏற்பட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லை. மழை தூறலான சோம்பலான ஞாயிறு. வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தனர். அவன் தனியனாய் இருந்தான். இலக்கியம் படித்தான். ஹிந்துஸ்தானி கேட்டுக்கொண்டே மது அருந்தினான். சுபா முத்கலை மறுமறுபடி கேட்டுக் கொண்டேயிருந்தான். பேகன் அக்தருக்கு மாறினான். கீர்த்தீ ஸ்கால் பாடும் காபி ராகத்தில் மெல்ல […]

பழமொழிகளில் பல்- சொல்

This entry is part 3 of 29 in the series 25 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பூ-நார், நகம்-சதை, அண்ணன்-தம்பி, நெருப்பு-புகை, என்பன போன்று பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும். மேற்கூறிய சொற்களைப் போன்றே பல்லும் சொல்லும் என்ற இரு சொற்களும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கைக்கு உரிய பல்வேறு கருத்துக்களையும் நமக்கு வழங்கியுள்ளனர். பல்லும்-சொல்லும் ஒரு மனிதனின் வாயில் பல் […]

நினைவுகளின் சுவட்டில் (83)

This entry is part 2 of 29 in the series 25 டிசம்பர் 2011

Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா […]

மலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை

This entry is part 1 of 29 in the series 25 டிசம்பர் 2011

  சித்ராங்கி க்குத் தனது அழகைபற்றிய கர்வமிருந்து. அழகாய் இருப்பவள் கர்வப்படுவதில் என்ன தப்பு? சிதம்பரத்தில் மட்டுமில்லை விஜய நகர சாமாராச்சியத்திலேயே அப்படியொரு பெண் சொரூபத்தை கண்டதில்லையென இதே கட்டிலில் வைத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கூறவில்லையா? 8.     கையெழுத்து மறையும் நேரம். மெல்ல மெல்ல பகல் விலகிக்கொண்டிருந்தது. இரவு தன்னைக்காட்டிக்கொள்ளாமல் பாய்வதற்குத் தயாராய் பதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு நாழிகையில் தெருவாசல், முற்றம் வழியாக பாய்ந்து வீட்டை நிறைத்துவிடும். மேல வீதியிலிருந்த  எல்லா வீடுகளும் ஒன்றுபோலவே சிற்றோடு வேய்ந்து தெருவாசலில் […]