சேயோன் யாழ்வேந்தன் காற்று வாங்கப் போகிறேன் என்றவனிடம் கிரடிட் அட்டையையும் சிலிண்டர் பதிவேட்டையும் நினைவூட்டுகிறாள் ஒருத்தி சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க குழாய்கள் மூலம் வீடுகளுக்கே ஆக்ஸிஜன் வழங்குவதாக எதிர்க்கட்சியின் தேர்தல் வாக்குறுதி கொலை மற்றும் தற்கொலை மரணங்களில் ஆக்ஸிஜன் மாஸ்க்கை அகற்றுவது முதலிடம் பிடித்ததாக தலைப்புச்செய்தி கான்கிரீட் வனங்களில் கையில் ஆக்சிஜன் அட்டையுடன் நெடுமரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன காற்று வாங்க! seyonyazhvaendhan@gmail.com
தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை 9442913985 புதுக்கவிதை உலகில் குறிக்கத்தக்க மூத்த கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பாவலர். தேர்ந்த கட்டுரையாளர், மேடைக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டு தமிழகத்தின் தற்கால இலக்கியப் போக்கிற்குத் தடம் வகுத்துத் தருபவராக விளங்கி வருகிறார். புதுக்கவிதையின் குறியீட்டுப்பாங்கிற்கு இவரின் சர்ப்ப யாகம் அசைக்கமுடியாத […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும் நீதி நூல் ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள். முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – […]
பேராசிரியர் பஞ்சு இடதுசாரி சிந்தனையாளர், மொழி அறிஞர், திறனாய்வாளர், நவீனப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டவர், பெண்ணியவாதி என்றெல்லாம் அறியப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் தலித் இலக்கிய ஆதரவாளராகவும் இருப்பதில் வியப்புகளில்லை. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே என்று தமது படைப்புகளைக்கொண்டும்(1), உரைகளிலும், தமது தலித் ஆதரவு நிலையை தொடர்ந்து உறுதி செய்துவருபவர். தமிழ்ச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் கடந்த காலத்தினும் பார்க்க இன்றைக்குக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பங்களிப்பை மறுக்கவியலாதென்றாலும், […]
நேதாஜிதாசன் இரவு ஒரு பதினோரு மணி,கதையில் பதினைந்தாம் பத்தியை தட்டச்சு செய்து கொண்டிருந்தான் கணினியில். அவன் ஒரு பொறியியல் மாணவன்.ஆனால் அதில் விருப்பம் இல்லை.பாடப்புத்தகத்தை தவிர அனைத்தையும் படிப்பதில் கொள்ளை பிரியம் அவனுக்கு.விளைவு அனைவரும் இயந்திரங்களை கற்றுக்கொண்டிருக்க இவன் ஜெயகாந்தனை கற்றுக்கொண்டிருந்தான். கையில் ஒரு செல் போன் அதில் எப்போதுமே இணையதள வசதி இருக்க வேண்டும் என்ற ஆசையே அதிகம்.அதேபோல அவன் செல் போனில் எப்போதுமே இணையதள வசதி வீட்டின் எதிர்ப்பை மீறி. அவனுக்கு எழுதுவது பிடித்து […]
செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது. “ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “ அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி செல்லம்மாளைப் பார்த்தான். ஒருவகையில் அவளின் இரண்டாம் மகன் பக்தவச்சலம் சாயல் அவனிடம் இருந்தது. குடிகாரப் […]
எந்த ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே எந்த இடத் தில் அது நிறுத்தப் பட்டது பின் எந்த வடிவில் மேலெடுக்கப்பட்டது என்னும் புரிதலில் நான் பலமடைந்தேன் இந்த பலத் தைப் பிரயோகிக்கும் தருணத்தை ஆளை சூழலைத் தேர்ந்தெடுப்பதில் நான் அரசியல் புரிந்தேன் அரசியல் என்பது விதிகளை வகுப்பதில் மேற்கை ஓங்குதல் என்னும் தெளிவுடன் அதனாலேயே விளையாடத் துவங்கும் முன் குழந்தைகள் விதிகள் வகுக்கும் போது அவதானிக்கிறேன் […]