கவிதையும் ரசனையும் – 6

This entry is part 9 of 10 in the series 6 டிசம்பர் 2020

அழகியசிங்கர்             போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன்.  வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன்.             நானும் படிப்பதற்காக  மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன்.  அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது.  எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது.             முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம்.  மொழிபெயர்ப்புக் கவிதைகளை […]

இவன் இப்படித்தான்

This entry is part 7 of 10 in the series 6 டிசம்பர் 2020

1 ‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’ ‘எவ்வளவு’ ‘எப்போதும்போலதான்’ ‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’ ‘மறந்துருப்பாருங்க’ நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார். ‘சார்’ ‘என்ன சபாபதி நல்லாயிருக்கீங்களா?’ ‘இருக்கேன் சார்’ ‘போன மாசம் தேதியெல்லாம் சொல்லி 10 நாள் பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேன். நீங்களும் சரின்னீங்க. பில்லு எப்போதும்போல குடுத்திருக்கீங்க’ ‘சாரி சார். பையன்ட சொல்ல மறந்துட்டேன். அவன் போட்ருப்பான்’ […]

கூக்குரலுக்காய்…

This entry is part 6 of 10 in the series 6 டிசம்பர் 2020

குணா (எ) குணசேகரன் “உன் மகள் ஒருவனுடன் வாழ்கிறாள்” − என்று சொன்னால் பெற்ற மனம் எவ்வளவு பதை பதைக்கும். எனக்கு அப்படி தோன்றவில்லை. கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி. பட்டவர்க்குத் தெரியும் இது எத்தனை சந்தோஷம் என்று. பாலை நிலத்தில் விழுந்த மழை போல… வளரும் காலத்தில் சொல்லி வளர்த்தது… “உன் வாழ்ககை உன் கையில்” என்று. செவ்வனே பிடித்து வளர்ந்து விட்டார்கள். படிப்பில் கெட்டியாய்… அவையத்து முந்தித்து… சந்தோஷமே எல்லாமாய் சஞ்சல மனமின்றி எண்ணிய எண்ணியாங்கு… […]

இளிக்கின்ற பித்தளைகள்

This entry is part 5 of 10 in the series 6 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா (29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது ஆறாம் வகுப்பு வரையில்தான். ‘மதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியெட்லி’ என்று தந்தியாளர் கிறுக்கியிருந்ததை அவனால் எழுத்துக்கூட்டிக்கூடப் படிக்க முடியவில்லை. படிக்க முடிந்திருந்தால், ஒருவேளை அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடுகிற அலுவலக அதிகாரிகளிடையேயும் ஊழியர்களிடையேயும் இருந்து பழக்கப்பட்டுக் […]

திருக்குறள் காட்டும் மேலாண்மை

This entry is part 4 of 10 in the series 6 டிசம்பர் 2020

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 புலனம் 9677380122 damudha1976@gmail.com முன்னுரை ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள‘ என்று சொல்லும் அளவிற்கு பெருமையுடைய ஒரு நூல் திருக்குறளாகும். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது‘ என்ற பழமொழிக் கேற்ப இரண்டே அடிகளையுடைய திருக்குறளில் ஏழு கடலை அடக்கும் கருத்துக்கள் இருக்கும் என்பதை, ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த […]

அப்பொழுது அவன் 

This entry is part 3 of 10 in the series 6 டிசம்பர் 2020

புஷ்பால ஜெயக்குமார் நல்ல வெய்யில். மத்தியான பொழுது. மாடிவீட்டு அம்மாள் விளையாடிக்கொண்டிருந்த அந்த பையனை அழைத்து “அதோ அந்த பிச்சைக்காரியைக் கூப்பிடு” என்றாள். அந்த பையனின் பெயர் குமார்.  அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அந்த அம்மாள் அழைக்கச் சொன்ன பிச்சைக்காரி இவன் நின்றிருந்த வீட்டிலிருந்து நாலைந்து வீடு தள்ளி இருந்த வீட்டிற்கு ஒட்டியபடி இருந்த தெருவிலே நின்றிருந்தாள். மாடிவீட்டு அம்மாள் இருக்கும் வீடு தான் அவன் வீடும். ஒண்டு குடித்தனம். அந்த வீடு பத்து […]

அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

This entry is part 2 of 10 in the series 6 டிசம்பர் 2020

தமிழில் :  ட்டி. ஆர். நடராஜன்  மொழிபெயர்ப்புக் கவிதை  அமெரிக்க எண்கணிதம்  ஆங்கில மூலம் : நதாலி டயஸ்  அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில்  பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே. 0.8 சதவீதம்தான். ஓ, என் திறமையான நாடு. முந்தைய அமெரிக்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லோரும் இங்கு வந்தது எப்போது என்றும் தெரியாது. மற்ற  இனத்தினரை விடப்  போலீஸ் பழங்குடியினரை அதிகமாகக்  கொல்கிறார்கள்.  இனம் என்பது வேடிக்கையான வார்த்தை. இனம் என்றால் யாராவது ஒருவர் வெற்றி வாகை சூட வேண்டும்.. நானும் கூட வெற்றி […]

எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

This entry is part 8 of 10 in the series 6 டிசம்பர் 2020

                                                                    எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில்  வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய கருத்துகள்தாம். அம்பேத்கர் அரிசனங்கள் கோயிலில் நுழைவதை விட அரசியல் உரிமை பெறுவதுதான் முக்கியம் என்று கருதினார். “there is nothing in the entry of tempies” என்பது அம்பேத்கரின் கூற்று. மேலும் காந்தியடிகளை […]

காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்

This entry is part 10 of 10 in the series 6 டிசம்பர் 2020

முருகபூபதி “  கைலாசபதியை மீள வாசிப்போம்   “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர்  பன்னாட்டு கருத்தரங்கு                                                                          நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு. அவருக்கு    கடிதம்    எழுதினேன் –  பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி. இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    […]

அகலிகைக் கல்

This entry is part 1 of 10 in the series 6 டிசம்பர் 2020

  மஞ்சுளா  நீ சொல்ல விரும்பிய  ஏதோ ஒன்றை  என் செவிகள்  புரிந்து கொண்டன  ஆனாலும்  உன் விழிகளில்  ஏதோ ஒரு ஏமாற்றம்  உன் உதடுகள்  முணு முணுக்கிறது  என் இதயம் திறக்க  எந்தச் சொல்லை  தேடி எடுப்பது என்று?  இனிக்கும் சொற்களை  ஈக்கள் மொய்த்து தின்று விட்டன  காலத்தின் இடுக்குகளிலிருந்து  கவனமாக குறி கேட்டு திரும்புகிறேன்  காற்றோ வெவ்வேறு திசைகளிலிருந்து  வெவ்வேறு சொற்களை  சுமந்து வருகிறது  ஆணின் எந்தச் சொல்லும் பெண்ணில்  ஒரு கல்லாகி கிடக்கிறது  […]