அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம். மகாகவி பாரதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. இது எனக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாள். எனக்கு மட்டுமல்ல. என் போன்று உலகெங்கும் பரவியுள்ள சகல பாரதி அபிமானிகளுக்கும் சிறந்த நாள். குறிப்பாக இவ்வாண்டு மிகவும் சிறப்பான நாளாய் எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன் குமார் அவர்களும், நானும் இணைந்து பாரதி பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, 1999-ஆம் ஆண்டு வெளியிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆயினும் எனது விநியோக வழிகள் குறைவான காரணத்தால் […]
பொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயன்று கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கவர்னர் பேடி நிர்வாகம் தெரிந்தவர். அதேசமயம் அரசாங்க அலுவலங்கள் பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே இயங்கவேண்டும் என்கிற நல்லெண்ணமுடைய அப்பாவிப் பெண்மணி. தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டான் என்று அவர் மனதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் விடாமுயற்சியை அவர் கைவிடுவதில்லை என்பதால் கிரண்பேடி மீது எனக்கு மரியாதை உண்டு. அரசு அலுவலகங்களுக்கு விசிட் செய்து அத்தைப்பாட்டி […]
ராஜசங்கர் மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன? அதிமுக/பிஜேபியின் சாதிபங்கீடு முறையை கண்டு ஏன் இவ்வளவு பயம்? கடந்த நான்கைந்து நாட்களிலே திருமா, வைகோ, ரஞ்சித், வன்னியரசு இவர்களின் பேச்சையும் அதிலே புகைவதையும் பார்த்தால் ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது அதை வெளியிலே சொல்லாமல் சண்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தோன்றும். அது என்ன என்பது பேட்டி எடுத்த ஆட்களுக்கும் தெரிந்திருக்கிறது ஆனாலும் அதை மெல்லவும் விழுங்கவும் முடியாமல் ஏன் எப்படி என சும்மா போட்டு வாங்க மட்டுமே முயற்சி […]
அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [6] நேற்று, நேற்று ஒளி வீசி நடமாடிய தீபம், புயல் காற்றில் அணைந்து போய், வீட்டுச் சுவரில் படமாகித் தொங்கும் இன்று, மாலை போட்டு ! […]
மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது. ===================================================================================== மஞ்ஞைப் பத்து—1 மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே பணைத்தோள், ஆய்தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனிநல் ஊரே [ஆல=ஆட; குடிஞை=பேராந்தை; இரட்டும்=மாறி மாறி ஒலிக்கும்; துறுகல்=குண்டுக்கல்; அடுக்கம்=பக்கமலை; பணை=பருத்த; தழை=தழையாடை; நுடங்கும்=அசையும்; உறையும்=தங்குகின்ற] கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்னு அவகிட்ட சொல்லிட்டு அவன் ஊருக்குப் […]