மீனாட்சி சுந்தரமூர்த்தி சின்னச் சிட்டே! சிங்காரச் சிட்டே! உனக்கும் எனக்கும் வழக்கேதும் உண்டோ? கடிகாரம் கூடத் தவறும், சேவலும் விடியல் சொல்ல மறக்கும். நிதம் நீ வந்து என்னறை சன்னல் தட்டுவது தவறாது. ஏதோ சொல்லுகிறாய் பசித்து வந்தாயென பாரதியாய் எனை நினைந்து இறைத்தேன் அரிசியை நீ எடுக்கவில்லை. உன்னழகை ஊரார் மெச்சுவது உண்மை என்பதைக் கண்ணாடி சன்னலில் கண்டு நீ உவந்தாயோ! காலை மாலை கண்ணாளன் காண, ஒப்பனை செய்கிறாயோ! கன்னங்கரிய பட்டு உடல், கூரிய […]
டாக்டர் ஜி. ஜான்சன் 208. நான் செயலர். காலையில் மூர்த்தி அமைதியாகக் காணப்பட்டார். இரவு நடந்தது அவருக்கு நாணத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.வார்டு ரவுண்ட்ஸ் போது வழக்கமான பாணியில் நோயாளியிடம் நன்றாகத்தான் பேசினார். அவர் பெண்கள் மருத்துவ வார்டைக் கவனித்துக்கொண்டாலும் காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்தே ரவுண்ட்ஸ் செல்வோம். இரவு வேலையின்போது அவரோ அல்லது நானோ அனைத்து மருத்துவ நோயாளிகளையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மற்ற நேரங்களில் அவரவர் வார்டில் வேலை செய்வோம். ரவுண்ட்ஸ் முடித்து வெளி […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா ” ஒருமுறை அவர் தன் விருப்பத்தைச்சொன்னார்,” என் அடுத்த பிறவியில் நான் எழுத்தாளராகவேண்டும்” என்று. அது உண்மையும்கூட. அவர் எழுதுவார். எழுதுவதை கொண்டாட்டமாக உணர்பவர் ஃபிடல். வாகனத்தில் பயணிக்கும்பொழுதுகூட அவருடைய கை எழுதுவதில் முனைப்போடு இருக்கும். மனதுக்குள் ஊறும் சில நுட்பமான உணர்வுகளையோ, சில அந்தரங்க கடிதங்களையோ எழுதிக்கொண்டிருப்பார்.” இவ்வாறு உலகினால் பெரிதும் ஆகர்சிக்கப்பட்ட பேராளுமை ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி அவரது நெருங்கிய தோழர் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் சொல்லியிருக்கும் தகவலை அ.முத்துக்கிருஷ்ணனின் […]
– சுயாந்தன். மொழிபெயர்ப்பாளன் தன் உடலில் இன்னொரு கவிஞனின் தலையைப் பொருத்தி நிறுத்துகிறான் என்று கே. சச்சிதானந்தன் கவிதை மொழிபெயர்ப்பின் நுட்பங்களைப் பற்றித் தெளிவுறுத்தும்போது கூறியுள்ளார். அதில் இருக்கும் அர்த்தங்களைப் புரியாத வெறும் கவிதைப் பயிற்சி இல்லாதவர்கள், கவிதைகளை மொழிபெயர்க்கும்போது கவிதையானது நம்மிடத்தில் வெறுப்புக்குரிய பண்டமாகிப் போகிறது. அவ்வாறுதான் அவற்றை இன்றும் நுகரவும் முடிகிறது. 1. ஆலிலையும் நெற்கதிரும். 2. கவிதை மீண்டும் வரும். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தொகுப்புக்களையும் மலையாளத்திலிருந்து எடுத்து மிகநேர்த்தியாகத் தமிழ்ப்படுத்தித் தந்தவர் […]
டாக்டர் ஜி. ஜான்சன் இது புதிய நோய் அல்ல. பழைய நோய்தான். ஆனால் இதுபற்றி பலருக்குத் தெரியாது. காரணம் இதை ஆஸ்த்மா என்றே கருதிவிடுவதுண்டு.அனால் இது ஆஸ்த்மா நோய் இல்லை. இதை சுவாசக் குழாய் அடைப்பு நோய் எனலாம். சுருக்கமாக இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் […]
லதாராமகிருஷ்ணன். கொங்குதேர் வாழ்க்கை என்ற தமிழ்க் கவிதைத் திரட்டின் முதல் பிரசுரத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் விடுபட்டிருந்தது குறித்து அந்த சமயத்தில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கிறது. ஒரு கவிதைத்திரட்டில் சில கவிஞர்கள் விடுபடுவது வழக்கமாக நடப்பது. எந்தக் கவிஞரும் கவிதைத்திரட்டில் இடம்பெறவேண்டும் என்பதற்காக கவிதை எழுத ஆரம்பிப்பதில்லை; எழுதுவதில்லை. ஆனால், அப்படி விடுபட்டதற்கான காரணமாய் ஒரு கவிஞர் எழுதுவது கவிதையே யில்லை என்பதாய் தொகுப்பாசிரியர் சில கருத்துகளைப் பொதுவில் வைக்கும்போது அந்தக் கருத்திற்கான […]
லதா ராமகிருஷ்ணன். தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை ரூ.100 தொடர்புக்கு – palanivelrayan@gmail.com. தொலைபேசி 8973228830.) புத்தகத்தை வெளியிட்டுள்ள திரு.ராஜகோபால் தமிழ்ச் சிறுபத்திரிகைவெளியில் நன்கு பரிச்சயமானவர். இந்தக் கவிதைத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிட்டுள்ளார். கஞ்சா கவிதைத்தொகுப்பு குறித்து தனது அறிமுக உரையில் கீழ்க்கண்டவாறு […]
(எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலை – ரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com இலக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டதும் விருது பெற்ற படைப்பாளியின் ஒருசில எழுத்தாக்கங்கள் மொழிபெயர்க்கப்படுவதும், இலக்கிய இதழ்களில் வெளியாவதும் வழக்கமாக இருந்துவருகிறது.. அப்படியில்லாமல் தொடர்ந்த ரீதியில் உலக இலக்கியங்கள், இலக்கியப் போக்குகளைப் பரிச்சயப்படுத்திக்கொள்பவர்களை, தான் பெற்ற அந்த அறிவை, அனுபவத்தை தமிழிலக்கிய வாசகர்களும் அறிந்துகொள்ள […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo https://youtu.be/c3gT2QZaeao https://youtu.be/ShynlTrHPyY https://youtu.be/9YtdCIqBFM4 https://youtu.be/vM0oGujZWQA https://www.livescience.com/61705-starman-spacex-spacesuit.html?utm_source=notification https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது ! இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து வாகனம் போய்வரும் ! செல்வந்தர் முதலில் குடிபோகும் புதிய காலனியாய்ச் செவ்வாய்க் கோளாகி சிவப்பொளி விண்வெளி யுகத்தில் […]
இடம் : மெட்ராபோல் ஹோட்டல் , மதுரை நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 – தேனீர் வரவேற்புரை : அ. வெற்றிவேல் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள் : முனைவர் முத்து மோகன் வ. கீதா ஸ்டாலின் ராஜாங்கம் 15 நிமிட இடைவேளை இரண்டாவது அமர்வு : சமயவேல் விருது வழங்கும் விழா […]