LunchBox – விமர்சனம்

This entry is part 9 of 18 in the series 12 பெப்ருவரி 2017

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய அன்பிலும் கணவன் தன்னிடம் ஆசை கொள்வான் என்கிற மறைமுக எதிர்பார்ப்பே அவளை நகர்த்துகிறது. ஆனாலும் கணவன் தொடர்ந்து அவளை புறக்கணிக்கிறான். ஒரு நாள் அவள் கணவனுக்கு உருளைக்கிழங்கு செய்து அனுப்ப, அவன் மாலையில் ” […]

இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்

This entry is part 10 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  இருமாதத்திற்கு ஒருமுறை எங்கள் பிரெஞ்சு இளைய தளத்தில் ஒரு தமிழ்ச் சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட த்திட்டம். கடந்த இருமாதங்களில் சிற்றிதழ்களில், தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த இளம் படைப்பாளியின் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து , ஏன் பிடித்திருக்கிறது என்பதை திறனாய்வு அடிப்படையில் பதினைந்து வரிகளுக்கு மிகாமல் உங்கள் கருத்தையும் எழுதினால் , உங்கள் தேர்வுக்குட்பட்ட கதைகளில் ஒன்றை நண்பர்களுடன் கலந்தாலோசித்து பிரசுரிக்கப்படும்.   விதிமுறைகள்   1. எழுத்தாளர் 45 வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையி னராக […]

கம்பன் காட்டும் சிலம்பு

This entry is part 11 of 18 in the series 12 பெப்ருவரி 2017

                                        அ.கி.வரதராசன் மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக,  பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை,  இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத உண்மை. பரல்களில் வேறுபாடு காட்டி, ஒரு மாபெரும் காப்பியத்தை இளங்கோ அடிகள் படைத்துள்ளதைப் போல, கம்பனும் தன்னுடைய காப்பியத்தில் மிக மிக வேறுபட்ட ஒரு வகைப் பரலைக் கொண்ட சிலம்பைக் காட்டுகிறான். கம்பன் காட்டும் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 12 of 18 in the series 12 பெப்ருவரி 2017

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++ [28]  முதிய கயாமுடன்  வா, ஞானிகள்  பேசட்டும். ஒன்று மட்டும் உறுதி,   ஓடுகிறது வாழ்க்கை மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே ஒருமுறை உதிர்ந்த பூ  நிரந்தரமாய்க் கருகிடும். [28]  Oh, come with old Khayyam, and leave the Wise To talk; one thing is […]

கம்பனைக் காண்போம்—

This entry is part 13 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  1                           யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின” தந்தி என்பது ஆண்யானையையும் பிடி என்பது பெண்யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்

This entry is part 14 of 18 in the series 12 பெப்ருவரி 2017

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ் இன்று வெளியாகியது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த இதழை ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறோம். இதில் வரும் பற்பல கட்டுரைகள், உலகெங்கும் இருந்து பல வாசகர்கள், விமர்சகர்கள், சக எழுத்தாளர்கள் எழுதியவை. பிரசுரமானவற்றின் பட்டியல் கீழே உள்ளது. இணைய தளத்துக்கு வருகை தந்து இவற்றைப் படித்து, உங்கள் மறுவினை ஏதுமிருப்பின் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். ஒவ்வொரு பிரசுரிப்புக்கும் கீழேயே வாசக மறுவினை தெரிவிக்க வசதி உண்டு. […]

தொடுவானம் 157. பிரியாவிடை உரை

This entry is part 15 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  விடுதியில்  கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும் காலம் நெருங்கிவிட்டது. இறுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் தொடர்ந்து ஆறு மாதங்கள் இங்கேயே தங்கியிருப்பார்கள். ஆறரை வருடங்கள் தங்கியபிறகு திடீரென்று வெளியேறுவது எப்படி. அது கவலையைத் […]

திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)

This entry is part 16 of 18 in the series 12 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி. மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருவல்லவாழ், திருவல்லா என்றழைக்கப் படுகிறது.இங்கு இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. திருவல்லாவில் பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணங்கமழும் அவ்வூரில் பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீதணவும் மலைநாடு என்றாலும் வயல்களும் நிறைந்த ஊர் ஆடுறு தீங்கரும்பும் விளை செந்நெலுமாகி எங்கும் மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ்ந்த ஊர் இத்தலத்தில் வீற்றிருக்கும் கோலப்பிரானை அடைய பராங்குச நாயகி விரும்புகிறாள் […]