மழை

This entry is part 7 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்… நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே வந்து நனையும் வரை பெய்வதென சபதம் எடுத்தாற்போல் அதற்கென்ன தெரியும் கிளம்புகையில் அவன் சொன்ன சொற்கள் மூட்டிய நெருப்பை அவன் கண்ணீரால் மட்டுமே அணைக்க முடியும் என்றும் அது வரை தண்ணீரும் எனக்கு நெருப்புதான் என்றும்

கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

This entry is part 6 of 17 in the series 12 பெப்ருவரி 2023

கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய சஞ்சிகை, இணையதளம், பத்திரிகை என பல தளங்களில் அயராமல் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருக்கு வேறு அறிமுக பாமாலை வேண்டியதில்லை. இச்சிறுகதைத்தொகுதியின் புகுமுகத்தையும் இன்ஜின் அறையையும் பற்றி அனேக நண்பர்கள் பல தளங்களில் ஏற்கனவே […]

பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?

This entry is part 5 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன் (கட்டுரை 49) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறந்தது மெய்யா ?பெரு வெடிப்புக்கு மூலமானகரு எங்கேகர்ப்ப மானது ?கரு இல்லாதுஉருவம் உண்டாகுமா ?அருவமாய்க் கருமைப் பிண்டம்அணு உருவில்அடர்த்தியாக இருந்ததா ?பெரு வெடிப் பில்லாமல்பிரம்மா படைத்தாராபிரபஞ்சத்தை ?கருவை உருவாக்கச் சக்திஎப்படித் தோன்றியது ?உள் வெடிப்பு தூண்டியதாபுற வெடிப்பை ?பிரபஞ்சத்துக்கு முன் புள்ளிப்பிரபஞ்சமா ?பேரசுரத் திணிவில்பேரளவு உஷ்ணத்தில்காலவெளி அணு வித்தாய்மூலப் பிரபஞ்சம்குவாண்டம் ஈர்ப்பில்பாய்ந்து வெடித்திட எங்கோ ஓர்பகுதியில்ஓய்ந்து கிடக்குதா ? […]

பாடம்

This entry is part 4 of 17 in the series 12 பெப்ருவரி 2023

கே.எஸ்.சுதாகர் சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது. சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி. அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து […]

இது நியூட்டனின் பிரபஞ்சம்

This entry is part 3 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு  நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு  தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன்  பஞ்சர் ஆகிப் போச்சு !  நியூட்டன் விதிகள் பிரபஞ்சத்தின் தோற்ற நியதிகள். பெரு வெடிப்பு  ஊகிப்பில்  ஓசோன் ஓட்டைகள் ! பியூட்டி இழந்து போச்சு ! ஒற்றைத் திணிவை உடைக்க புற இயக்கி எங்கே ? எற்றி எழுப்பத் தூண்டும் பூட்டர் எங்கே ? உள் வெடிப்பு உசுப்பிட  புற இயக்கி எங்கே ? பிரபஞ்சம் உருவாக நூறுக்கும் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்

This entry is part 2 of 17 in the series 12 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          12 ஃபிப்ரவரி,  2023             சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ் இன்று (12 ஃபிப்ரவரி, 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -7) ஊனுண்ணித் தாவரம் – வீனஸ் – லோகமாதேவி கங்கோத்ரி – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 6) கனவு மெய்ப்பட வேண்டும் – பானுமதி ந. ஒழிக தேசியவாதம்! – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) நிலவு ஒரு […]

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7

This entry is part 1 of 17 in the series 12 பெப்ருவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 7 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் […]