ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7

This entry is part 1 of 17 in the series 12 பெப்ருவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

[ வெனிஸ் கருமூர்க்கன் ]

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 7

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]

மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு, துருக்கி நாடு. 

++++++++++++++++++

[முன் பதிப்புத் தொடர்ச்சி]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
அங்கம் -1 காட்சி -2 பாகம் : 7

இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை
.

டியூக்: [பின் தொடர்வோரைப் பார்த்து] இவற்றை எல்லாம் பார்க்கும் போது], என்ன தெரியுது உங்களுக்கு ?

முதல் செனட்டர்: மேலோடித் தெரிவது, இவை எல்லாம் மெய்யில்லை என்று. ஒரு பொய்க் காட்சி, நமது கவனத்தை திசை திருப்பி துருக்கி நாடு சைப்பிரசை எளிதாய்க் கைப்பற்றிக் கொள்ள முயல்கிறது. சைப்பிரஸ் துருக்கி நாட்டுக்கு எவ்வளவு முக்கிய தேவை என்பதை நாம் அறிவோம். ஆனால் சைப்பிரஸ் யுத்தம் புரியத் தயாராக இல்லை. யுத்தத் தளவாடங்களும் இல்லை. துருக்கி படையுடன் தாக்க காத்துக் கொண்டிருக்கிறது. 

டியூக்: ரோடசை நோக்கி துருக்கி இப்போது ஏகவில்லை 

அதிகாரி:  இதோ இன்னும் தகவல் வருது.

[தூதுவன் ஒருவன் வருகிறான்]

தூதுவன்: துருக்கி கப்பல் படகுகள் ரோடஸ் தீவு நோக்கிச் செல்கின்றன. அடுத்து ஓர் படை அணி பின் வருது.

முதல் செனட்டர்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். எத்தனை கப்பல்கள் என்று நீ யூகிக்கிறாய் ?

தூதுவன்: 30 படகுகள். இப்போது சற்று பின் தங்குகிறார். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான, பராக்கிரம  வேலையாள் மேதகு மான்டேனோ, அதாவது சைப்பிரஸ் தீவின் ஆளுநர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் தூதுவனை நம்பலாம். 

[தூதுவன் போகிறான்]

டியூக்: நிச்சயம் அது சைப்பிரஸ்தான். இப்போது மார்கஸ் லுசிகஸ் தலைநகரில் இல்லையா ?

முதல் செனட்டர்: இல்லை, பிளாரன்ஸில் இருக்கிறார். 

டியூக்: நம் கருத்தை உடனே அவருக்கு எழுதிச் செல். போ.

முதல் செனட்டர்: பாருங்கள் சிசாரோ வருகிறார், பராக்கிர மூர்க்கனோடு.

[சிசாரோ, ஒத்தல்லோ, காசியோ, புருனோ, ஷைலக் நுழைகிறார்]

டியூக்: சிசாரோ !  இந்த குழப்பத்தை பயன்படுத்தி தெளிவான நிலைக்கு வா. [ஒரு பழமொழியை]  ஓதுகிறார். ” மனிதர் தம் வலுவான ஆயுதத்தை பயன்படுத்துவார், தம் சொந்த கரங்களை நம்பாது.”

சிசாரோ; டியூக் பிரபு !  முதலில் மோனிகா சொல்வதைக் கேட்பீர்.  சீர்கெட்ட இந்த நிலைக்கு தான் பாதி காரணம் என்று மோனிகா மோகத்தில் தணிந்து  ஒப்பினால், கருமூர்க்கன் மீது மட்டும் பழி சுமத்த மாட்டேன். [மோனிகா வை நோக்கி] அருமை மகளே ! இங்கு வந்து சொல், உனக்கு யாரிடம் மிக்க மதிப்பும், பணிவும் உள்ளது என்று.  

மோனிகா;  பேரன்புமிக்க மதிப்பும், பணிவும் நான் கொண்டிருப்பது தந்தை இடமா, அல்லது என் பதி இடமா என்று என்மனம் ஊசலாடிய வண்ணம் தவிக்கிறது.  என்னை மகளாய்ப் பெற்றதற்கும் வளர்த்ததற்கும் உங்களையே  நான் பெரிதாய் மதிக்கிறேன். எப்படி என் தாய் உங்களை ஏற்றுப் பணிந்தாளோ, அதுபோல் இப்போது என் மதிப்பு, பணிவு மூரினத்தைச் சேர்ந்த ஒத்தல்லோ மீது மாறி உள்ளது.  

சிசாரோ: [மனம் உடைந்து] நான் செத்துப் போனேன், கடவுளே. [மனக் கசப்புடன் தணிந்து ஒத்தல்லோவிடம்] மூர் இனத்தோனே அருகில் வா. உன்னை இதய பூர்வமாய் நான் வரவேற்கிறேன், ஆனால் மன வெறுப்புடன் கலந்து. [மகளைப் பார்த்து மனக் கசப்புடன்]  உன் இழிவான செயல் எனக்கு இன்னுமோர் பிள்ளை இல்லை என்று மகிழ்ச்சி அளிக்கிறது.  உன் விடுவிப்புக் களவு, அப்படி தூண்ட வைக்கும் ஒரு கோர மனிதனாய்க் காட்டுகிறது. [டியூக்கை நோக்கி] பிரபு ! என் மானம், மதிப்பு, செல்வாக்கு எல்லாம் போச்சு. எப்படி நானினி வாழ்வேன் இந்த வெனிஸ் நாட்டிலே ? தலை குனிய வைத்து விட்டாளே என் ஏக புதல்வி. 

[தொடரும்]  

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *