இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில். நேரம்: மாலை 5.30 மணிக்கு. நினைவை பகிர்பவர்கள்: கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் எழுத்தாளர் சந்திரா எழுத்தாளர் தமயந்தி தயாரிப்பாளர் UTV தனஞ்செயன் பத்திரிகையாளர் ஞாநி எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் மாலன் ஒவியார் ட்ராட்ஸ்கி மருது எழுத்தாளர் சா. கந்தசாமி இயக்குனர் தாமிரா எழுத்தாளர் & நடிகர் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர் ஞானம் என்பதன்மீதான ஒரு விளையாட்டு என்றும் குறிப்பிடுகிறார். அர்த்தமற்ற விளையாட்டல்ல என்றும் குறிப்பிடுகிறார். அந்த விளையாட்டை உள்வாங்கமுடிகிறதே தவிர அப்படியே புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நின்று, நிதானித்து, தேங்கி நகர்ந்திருக்கிறேன் என்பதே […]
ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் […]
முனைவர் ந. பாஸ்கரன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இயற்றித்தரும் வல்லமை கொண்டவர்களாக விளங்கியவர் தொழிலாளர். சங்ககாலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்றதும், அந்நிலத்தோடு மிகப்பெரிதும் ஒத்துப்போகக் கூடியதுமான தொழிலை முதன்மைத் தொழிலாகச் செய்துள்ளனர். அம்முதன்மைத் தொழிலோடு தொடர்புடையதும் அதற்கு இனமானதுமான தொழிலையும் செய்து வந்துள்ளனர். சங்ககாலத்து நெய்தல்திணை மக்கள் கடல்நிலத்து வாழ்ந்தவர் ஆதலின், கடல் மற்றும் கடல்சார் நிலத்தோடு தொடர்புடைய தொழிலை செய்துள்ளனர். மீன்பிடித்தல், […]
அப்பா சொன்னது தீர்க்கதரிசனமானது! அவர் அவ்வாறு சொன்ன மறு வாரத்தில் லதா வயதுக்கு வந்து விட்டாள்! நான் சொல்லாமலேயே என்னுடைய அறைக்கு வருவதை அவள் நிறுத்திக் கொண்டாள் அவளுக்கு எதேதோ சடங்குகள் செய்தனர். பள்ளிக்குக் கூட சில நாட்கள் அவள் வரவில்லை. நாங்கள் அலெக்சாண்ட்ரா எஸ்டேட் துவக்கப் பள்ளியில் ஒன்றாகவே நடந்து சென்று வருவோம். சுமார் மூன்று கிலோமீட்டர் அவ்வாறு நடந்து செல்ல வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றாலும் வெவ்வேறு வகுப்புகளில் […]
(Children of Adam) குடிப்பிறப்புத் தருணங்கள் (Native Moments) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா மோக வயப்பட்டுக் காதல் வலிச் சோகத்தில் மூழ்குபவன் நான் ! பூமி ஈர்ப்ப தில்லையா ? அண்டங்கள் அனைத்தும் ஏங்கிய வண்ணம், மற்ற வற்றைத் தம்மை நோக்கி இழுப்ப தில்லையா ? அதுபோல் என்னைச் சந்திப் போரும் என்னை அறிந்திருப் போரும் என்னுடல் வனப்பாலே ஈர்க்கப் படுவார் ! குடிப்பிறப்புத் […]
சக பதிவரும், என்னை பதிவுலகத்திற்கு கொண்டு வந்தவருமான தமிழ்த்தொட்டில் தமிழ்ராஜா அவர்கள் இயக்கிய குறும் படமான “ரணகளம்” பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு 24.02.2013 தினத்தந்தி செய்தித் தாளின் இலவச இணைப்பான குடும்ப மலரில் வெளியாகி யிருந்ததைப் படிக்க நேர்ந்தது. இப்படி ஆரம்பித்து ரணகளம் குறும்படம் பற்றிப் பதிவைப் போடுவது என்று தான் எண்ணியிருந்தேன். என்னுடைய செயல் அதை வேறு விதமாக திசை திருப்பி விட்டது. நிவாஸ்குமார் அவர்கள் பேஸ்புக்கில் வெளி யிட்டிருந்த நிலையைப் படித்து விட்டு 24.02.2013 […]
கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின் சந்தோஷமெல்லாம் இந்த முயற்சியிலேயே வடிந்து விட்டது. இது ஒரு விருந்துக்கான ஏற்பாடு என்றில்லாமலேயே விருந்தாகி இருந்தது. வெள்ளிக்கிழமை. மதிய உணவு நேரம். அலுவலக நண்பன் சந்துருவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலு. கத்தரிக்காய் சாம்பார், பீர்க்கங்காய் […]
பயோ டேட்டா பெயர்; : அகிலேஷ் வகுப்பு : 6th “B ஸ்கூல் : சரஸ்வதி வித்யாலயா பிடித்தது : டி.வி., சாக்லேட், பிரைட் ரைஸ், எம்.ஜி.எம். வீடியோ கேம், தனுஷ்கா பிடிக்காதது : நிலா மிஸ், தன்ராஜ் சார், புளிக்குழம்பு, சாம்பார் ரைஸ், படிப்பு, ராஜேஸ் (கிளாஸ் லீடர்) லட்சியம் : ஜான் ஷீனாவையும, அண்டர் டேக்கரையும் அடித்து வீழ்த்துவது சிறப்புத் தகுதி […]
பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [How A Fusion Power Plant Works] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GbzKFGnFWr0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4gRnezJNFro http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dnTzFTjlwvw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r3zHh81HIAM http://www.engineeringchallenges.org/cms/8996/9079.aspx பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் கணிதச் சமன்பாடு மூலம் ! பிளவு சக்தி புரட்சி மாறி பிணைவு சக்தி பிறக்கப் போகுது கதிரியக்க மின்றி வீட்டு விளக்கேற்ற ! சூரியன் போல் […]